RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

அதிமுக எம்எல்ஏக்களை கவர குதிரை பேரம்

அதிமுக எம்எல்ஏக்களை கவர குதிரை பேரம்: தவெக மீது சிபிஐ விசாரிக் கோரி ஆளுநரிடம் அதிமுக மனு சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தமிழக ஆளுநரை திடீரென சந்தித்தனர். அப்போது, குதிரை பேரம் நடத்தி அதிமுக எம்எல்ஏக்களை இழுக்கும் தவெக அரசு மீது சிபிஐ விசாரணை கோரி மனு அளித்தனர். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் தவெக வெற்றிபெற்று விஜய் முதல்வராக பதவியேற்றார். என்மையை நிரூபிக்க தவெகவுக்கு பெரும்ப தேவையான 118 எம்எல்ஏக்கள் ஆதரவு இல்லாமல், வெறும் 107 எம்எல்ஏக்கள் ஆதரவு மட்டுமே இருந்தது. இதையடுத்து தி முக கூட்டணியில் நின்று வெற்றிபெற்ற காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுகள், இ.யூ.மு.லீ. ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் விஜய் பெரும்பான்மையை விஜய் நிரூபித்தார். இதில், திடீர் திருப்பமாக அதிமுக எம்எல்ஏக்கள் 47 பேரில் எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் 25 எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு கொடுத்தனர். அதிமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று விஜய் தரப்பில் இருந்து உத்தரவாதம் அளிக்கப்பட்டதால் தான் தனி அணியாக பிரிந்து தவெகவுக்கு ஆதரவு வழங்கப்பட்டது. விஜய் தலைமை யிலான தவெக அமைச்சரவையில் எஸ்.பி. வேலு ம ணி அணியினருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தி ட ந் த அ எஸ்.பி. வேலுமணி அணியினர் மீண்டும் எடப்பாடி பழனிசாமியிடம் சரண்டர் அடைந்தனர். தவெக தலைமை யிலான விஜய் அரசு அதிமுக எம்எல்ஏக்களை குதிரை பேரத்தில் ஈடுபட்டு தங்கள் பக்கம் இழுத்து வருகிறார்கள். அதன்படி மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்) மற்றும் எஸ்.எஸ்.இசக்கிசுப்பையா 4 அதிமுக எம்எல்ஏக்கள் (அம்பாசமுத்திரம்) ஆகிய தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். சில அதி மு க எம்எல்ஏக்கள் தவெகவுக்கு இழுக்க குதிரை பேரம் நடைபெற்று வருகிறது. இதனால் சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் உள்ளி ட்டவர்கள் எடப்பாடியை சந்திக்காமல், ஒதுங்கி இருந்து வருகிறார்கள். அதிமுக பொது ச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் அதிமுக எம்எல்ஏ அக்ரி. கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதிமுக எம்பி தனபால் உள்ளிட்ட சிலர் சென்னை, கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று ஆளுநர் அர்லேகரை சந்தித்து மனு அளித்தனர். மேலும், ஆளுநரிடம் தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், தற்போது ஆளுங்கட்சியாக உள்ள தவெகவின் முதல்வர் மற்றும் முன்னணி தலைவர்கள் அதிமுக எம்எல்ஏக்களிடம் ரகசியமாக பேசி, குதிரை பேரம் மூலம் பெரிய தொகை தருவதாக ஆசை வார்த்தை கூறியும், அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவுக்கு வந்தால் மீண்டும் சீட் வழங்கப்படுவதுடன், அமைச்சர் பதவியும் வழங்கப்படும் என்று ஆசை வார்த்தை கூறி வருகிறார்கள். இதன்மூலம் அதிமுக கட்சியை உடைக்க சதி செய்கிறார்கள். ஜனநாயகத்தில் இது தவறான நடவடிக்கை ஆகும். ராஜினாமா செய்த 4 எம்எல்ஏக்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவெக ஆட்சியாளர்கள் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தற்போது அதிமுகவில் பிரிந்து இருந்த 2 அணிகளும் ஒன்று சேர்ந்துவிட்டதால், சில எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் தங்களிடம் (ஆளுநர்) அளிக்கப்பட்ட மனுவை வாபஸ் பெற்றுக் கொள்கிறோம் என்று வலியுறுத்தினர். இதையே மனுவாகவும் தமிழக ஆளுநர் அர்லேகரிடம் வழங்கப்பட்டதாக அதிமுக முன்னணி தலைவர்கள் தெரிவித்தனர்.

Recent News

அதிமுகவில் பிரிவை ஏற்படுத்த நான் ஒருபோதும் எண்ணியதில்லை லீமா ரோஸ் எம்எல்ஏ விளக்கம்

அதிமுகவில் பிரிவை ஏற்படுத்த…

சென்னை: “அதிமுகவில் பிரிவுகள் ஏற்படுத்த நான்…

அரக்கோணம் கூட்டுறவு துறை அமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்த பிரமுகர்கள் !

அரக்கோணம் கூட்டுறவு துறை…

அரக்கோணம் மே தமிழகத்தில் நடைப்பெற்று முடிவுற்ற…

மத்திய அரசு திட்டங்கள்

மத்திய அரசு திட்டங்கள்

மத்திய அரசு திட்டங்கள் மத்திய அரசு…

எடப்பாடி பழனிசாமியை சந்தித்து திருப்பதி பிரசாதம் வழங்கிய குப்புசாமி

எடப்பாடி பழனிசாமியை சந்தித்து…

எடப்பாடி பழனிசாமியை சந்தித்து திருப்பதி பிரசாதம்…

நடிகர் அஜித்குமாரின் தாயார் காலமானார் முதல்வர் விஜய், அரசியல் தலைவர்கள் இரங்கல்

நடிகர் அஜித்குமாரின் தாயார்…

சென்னை: நடிகர் அஜித் குமாரின் தாயார்…

அரசு ஊழியர்களுக்கு ஜூன் 1ம் தேதி முதல் பேஸ் ஐடி வருகை பதிவேடு கட்டாயம்

அரசு ஊழியர்களுக்கு ஜூன்…

சென்னை: அரசு ஊழியர்களுக்கு வருகிற ஜூன்…

1 2 3 4 5 12