RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

அணுக்கனிம சுரங்க காலநீட்டிப்பு அரசாணையை ரத்து செய்ய வேண்டும்: முதலமைச்சரிடம் சுற்றுலாத்துறை அமைச்சர் செ. ராஜேஷ்குமார் வலியுறுத்தல்.

  1. Home
  2. »
  3. Uncategorized
  4. »
  5. அதிமுக எம்எல்ஏக்களை கவர குதிரை பேரம்

அணுக்கனிம சுரங்க காலநீட்டிப்பு அரசாணையை ரத்து செய்ய வேண்டும்: முதலமைச்சரிடம் சுற்றுலாத்துறை அமைச்சர் செ. ராஜேஷ்குமார் வலியுறுத்தல்.

சென்னை:

கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம சுரங்க காலநீட்டிப்பு அரசாணையை ரத்து செய்ய வேண்டும்: தமிழ்நாடு முதலமைச்சரிடம்  சுற்றுலாத்துறை அமைச்சர் செ. ராஜேஷ்குமார் வலியுறுத்தல். கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்தியன் ரேர் எர்த்ஸ் லிமிடெட் (IREL) நிறுவனத்திற்கு அணுக்கனிம சுரங்கம் அமைப்பதற்காக வழங்கப்பட்ட நில ஒதுக்கீட்டின் கால அவகாசத்தை, கடந்த 10.06.2026 அன்று தமிழக அரசின் இயற்கை வளங்கள் துறை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த காலநீட்டிப்பு அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவரும்  சுற்றுலாத்துறை அமைச்சருமான திரு. செ. ராஜேஷ்குமார் அவர்கள் தலைமையில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தாரகை கத்பட் மற்றும் டி.டி பிரவீன் ஆகியோர்  முதலமைச்சரை நேரில் சந்தித்து விரிவான கோரிக்கை மனுவை அளித்தனர்.

கடந்த 10.06.2026 அன்று அணுக்கனிம சுரங்கத் திட்டத்திற்காக வழங்கப்பட்ட ஓராண்டு காலநீட்டிப்பு அரசாணையை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று  சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ். ராஜேஷ்குமார்   முதலமைச்சர் அவர்களிடம் இக்கோரிக்கையை முன்னெடுத்து வலியுறுத்தினார்.

கீழ்மிடாலம், மிடாலம், இனையம், புத்தன்துறை, ஏழுதேசம் மற்றும் கொல்லங்கோடு உள்ளிட்ட கடலோர மற்றும் கரையோர கிராமங்களில் இச்சுரங்கத் திட்டம் அமைந்தால், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம், உடல்நலம் மற்றும் கடலோரச் சூழல் ஆகியவை கடுமையாகப் பாதிக்கும் என்பதை மாண்புமிகு முதல்வரிடம் சட்டமன்ற உறுப்பினர்கள் விளக்கமாக எடுத்துரைத்தனர்.

சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் நியாயமான கோரிக்கைகளையும், விளக்கத்தையும்  கேட்டறிந்த முதலமைச்சர் மக்களைப் பாதிக்கும் எந்தவொரு திட்டத்தையும் இந்த அரசு ஒருபோதும் அனுமதிக்காது; உங்களது கோரிக்கையின் மீது நிச்சயமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்

Recent News

வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகங்களில் சேலம் ஆட்சியர் ஆய்வு

வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய…

சேலம்:சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் அலுவலகம்,…

பண்ருட்டி அதிமுக வடக்கு ஒன்றிய அதிமுக ஆலோசனை கூட்டம்

பண்ருட்டி அதிமுக வடக்கு…

கடலூர்:கடலூர் மாவட்டம் பண் குட்டியில், பண்ருட்டி…

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திருப்பத்தூரில் இடதுசாரி கட்சிகள் ஆர்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை…

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரத ஸ்டேட்…

ஆக்கிரமித்துள்ள பொதுவழியை உடனடியாக திறக்க கோரி காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு

ஆக்கிரமித்துள்ள பொதுவழியை உடனடியாக…

திருப்பத்தூரை அடுத்த எலவம்பட்டி ஊராட்சி தம்மன்…

போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் சுற்றித்திரிந்தால் அபராதம்

போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள்…

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு,…

ராமஞ்சேரி பகுதிகளில் இன்று மின் விநியோக நிறுத்தம்

ராமஞ்சேரி பகுதிகளில் இன்று…

திருவள்ளூர்:ராமஞ்சேரி துணை மின் நிலையத்தில் 22.05.2026…

1 27 28 29 30 31 33