RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

அரசு ஊழியர்களுக்கு ஜூன் 1ம் தேதி முதல் பேஸ் ஐடி வருகை பதிவேடு கட்டாயம்

சென்னை: அரசு ஊழியர்களுக்கு வருகிற ஜூன் 1ம் தேதி முதல் முக அடையாள (பேஸ் ஐடி) வருகை பதிவேடு கணக்கிட வேண்டும் என்று அனைத்து அதிகாரிகளுக்கும் தமிழக அரசு உத்தரவு. இந்த திட்டம் முதற்கட்டமாக மனிதவள மேலாண்மை துறையில் சோதனை முறையில் அறி முகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் முதல்வராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், சட்டசபை நிகழ்வுகள் தொடர்ச்சியாக நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதற்கு பலரும் பாராட்டு தெரிவித்திருந்த நிலையில், தற்போது, தலைமை செயலக அதரிகாரிகளுக்கு பயோமெட்ரிக் அல்லது முக அங்கீகார அடிப்படையில் வருகை பதிவு செய்யப்படும் என்ற புதிய விதி அமலுக்கு வர உள்ளது. தமிழக தலைமை செயலாக வரலாற்றில் முதல்முறையாகும். மேலும் இந்த நடவடிக்கை முதற்கட்டமாக மனிதவள மேலாண்மைத் துறையில் இந்த முறை செயல்படுத்தப்படும் என்றும், பின்னர் படிப்படியாக மற்ற விரிவுபடுத்தப்படும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரி வித்துள்ளன. இது குறித்து துறை வெளியிட்டுள்ள துறைகளுக்கும் இது சுற்றறிக்கையின்படி, அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு தலைமைச் செ அதன்படி வரும் திங்கட்கிழமை (ஜூன் 1) முதல் அனைத்து அதிகாரிகளும் பணியாளர்களும் பயோமெட்ரிக் அல்லது முக அங்கீகார முறை மூலம் தங்கள் வருகையை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனார். ஜூன் 1 முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது. அனைத்து பணியாளர்களும் காலை 10 மணிக்குள் அலுவலகத்திற்கு வந்து, வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடுவதோடு, பயோமெட்ரிக் முறையி லும் வருகையைப் பதிவு செய்ய வேண்டும். பணியில் இருக்கும் போது அனைத்து ஊழியர்களும் கண்டிப்பாக அடையாள அட்டையை அணிந்திருக்க வேண்டும் எனத் துறை உத்தரவிட்டுள்ளது. அதிகாரிகளின் கூற்றுப்படி, இந் த முறை ஏற்கனவே சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், சி ல ஊழியர்கள் தெரிவித்த ஆட்சேபனைகள் மற்றும் கவலைகள் காரணமாக, இதன் அமலாக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது சோதனை ஓட்டம் முடிவடைந்த நிலையில், தற்போது இந்த முறை முழுமையாக அமலுக்கு வர உள்ளது. இதற்கிடையில், தலைமைச் செயலகத்தின் மற்ற துறைகளும் வருகைப்பதிவு விதிகளைக் கடுமையாக்கியுள்ளன: உணவு மற்றும் கூட்டுறவுத் துறையில், பணியாளர்கள் அலுவலக நேரத்தைக் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு அறிவுறு த்தப்பட்டுள்ளனர். ஊழியர்கள் காலை 9.50 மணிக்கும், அலுவலக உதவியாளர்கள் காலை 9.30 மணிக்கும் பணிக்கு வர வேண்டும் என்று அண்மையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் தெரிவிக் கப்பட்டுள்ளது. எனினும், இந்தத் துறைகளில் பயோமெட்ரிக் அல்லது அங்கீகார வருகைப்பதிவு இன்னும் கட்டாய மாக்கப்பட வில்லை. மு க

Recent News

தமிழக நதிகளை இணைப்பதில் அரசு உறுதி: ஆளுனர்

தமிழக நதிகளை இணைப்பதில்…

தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று…

2036க்குள் தமிழகத்தில் 1.5 லட்சம் டிரில்லியன் டாலர் பொருளாதாரம்: ஆளுனர்

2036க்குள் தமிழகத்தில் 1.5…

தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று…

போதைபொருள் பழக்கத்தை தடுக்க முந்தைய அரசு தவறிவிட்டது: ஆளுனர்

போதைபொருள் பழக்கத்தை தடுக்க…

தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று…

தவெக அரசு குறைவாக கடன் வாங்கினால் பதவி விலக தயார்; தங்கம் தென்னரசு சவால்

தவெக அரசு குறைவாக…

தமிழ்நாடு அரசின் வெள்ளை அறிக்கை குறித்து…

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் “சத்தியவான் சாவித்திரி” படத்தின் ரிலீஸ் தேதி

கீர்த்தி சுரேஷ் நடிக்கும்…

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை கீர்த்தி…

அரசு உதவி பெறும் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலா? அரசு பதிலளிக்க கோர்ட் உத்தரவு

அரசு உதவி பெறும்…

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த மைக்கேல்…

1 15 16 17 18 19 33