RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

ஆளுநர் ஆய்வுக்கு : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

‘ஆளுநர் ஆய்வு செய்தார்’ என்ற கூவத்தூர் ஆட்சி கால வரலாறு, தற்போதைய குதிரை பேர ஆட்சியில் மீண்டும் திரும்புகிறது.

மதுரை சென்றிருந்த ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், தான் நியமன பதவியில் – அதுவும் கூடுதல் பொறுப்பில் தமிழ்நாடு ஆளுநராக இருப்பதை மறந்து, மக்கள் பிரதிநிதி போல ஆய்வு நடத்தி இருக்கிறார்.அரசியலமைப்புக்கும் –  மாநில உரிமைக்கும் எதிரான இந்த செயலில் ஈடுபட்ட ஆளுநருக்கும், இதை அனுமதித்த #SofaModel அரசிற்கும் கடும் கண்டனங்கள்.

ஆளுநர் மாளிகையின் பராமரிப்பே தமிழ்நாடு அரசிடம் இருக்கும் போது, வைகையை அரசு சீரமைக்காவிட்டால் ஆளுநர் மாளிகை களம் இறங்கும் என்று அடாவடியாக பேசி இருக்கிறார். ஆளுநரின் இந்த அசட்டுத் துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காராணம்.

ஆளுநர் பங்கேற்ற அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்தின் முக்கியத்துவம் குறைக்கப்படும் அளவுக்கு, என்ன Compromise செய்யப்பட்டது என்று சட்டமன்றத்தில் கேட்டிருந்தோம். அதற்கு உரிய பதிலைச் சொல்லாத ஆளுங்கட்சியினர், இன்றைக்கு ஆளுநரை ஆய்வு செய்யவிட்டு, மாநில உரிமைகளை compromise செய்திருப்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.சட்டத்துக்குப் புறம்பாக அடுத்தக் கட்சி எம்.எல்.ஏ.க்களை Panic buying செய்யும் ஆளுங்கட்சி, ஆளுநர் நடவடிக்கை எடுத்துவிடுவாரோ என்ற anxiety-யில் அவரது ஆய்வை அனுமதிக்கிறதா?

முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் அப்போதைய ஆளுநர் ஆய்வுகளில் ஈடுபட்ட போது, அவர் சென்ற இடங்களில் எல்லாம் கழகத்தினர் கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தோம். கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை நாங்கள் அனுமதித்ததில்லை. ஆகவே, மாற்றம் என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தவர்கள், மாநில உரிமைகளைத் தாரை வார்க்காமல், ஆளுநர் ஆய்வு செய்யும் நடைமுறையை உடனே நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Recent News

இடதுசாரி கட்சியின் தலைவர்கள் முதல்வருடன் சந்தப்பு

இடதுசாரி கட்சியின் தலைவர்கள்…

தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு சி.ஜோசப் விஜய்…

அமித்ஷாவுடன் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர்  சந்திப்பு

அமித்ஷாவுடன் தமிழ்நாடு பொறுப்பு…

டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன்…

இது தர்மசங்கடமான தோல்வி அல்ல. ஆனால் எங்களுக்கு மிகவும் மனச்சோர்வை அளிக்கும் தோல்வி-ஸ்ரேயஸ் அய்யர் விளக்கம்

இது தர்மசங்கடமான தோல்வி…

அயர்லாந்து தொடருக்கு முன் 16 தொடர்களை…

NEET போன்ற சதிகளை தகர்த்தி வெற்றி பெற முயற்சிகளை இந்நாளில்  உறுதியேற்போம்-மு.க ஸ்டாலின்

NEET போன்ற சதிகளை…

மக்களின் உயிர்காக்கும் மகத்தான மனிதநேயத் தொண்டில்…

தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு முதல்வர் விஜய் வாழ்த்து

தேசிய மருத்துவர்கள் தினத்தை…

மனித உயிர்களைக் காக்கும் உன்னதப் பணியில்…

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டம் 11வது நாளை எட்டியது

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி…

புதுடெல்லி: டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி…

1 5 6 7 8 9 33