RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

இந்திய அணி உடனான டி20 கிரிக்கெட் தொடர்: இங்கிலாந்து அணி அறிவிப்பு

லண்டன்:
இந்திய கிரிக்கெட் அணி, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாட்டுக்கு பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. அயர்லாந்து அணி உடன் இரண்டு டி20 போட்டிகளும், இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க உள்ளது.
அயர்லாந்து அணியுடன் வரும் 26, 28 ஆகிய தேதிகளில் இந்தியா விளையாடுகிறது. அதன் பின்னர் ஜூலை 1 முதல் ஜூலை 19 வரையில் இங்கிலாந்தில் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்திய அணியுடன்ன டி20 தொடரில் பங்கேற்று விளையாட உள்ள இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடருக்கான அணியை இங்கிலாந்து ஆடவர் கிரிக்கெட் அணி தேர்வாளர் மார்க்கர் நார்த் அறிவித்தார். இதில், பல்வேறு டி20 கிரிக்கெட் தொடர்களில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜேம்ஸ் கோல்ஸ் இடம்பிடித்துள்ளார். இந்த தொடர் மூலம் இவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகிறார்.
காயம் காரணமாக பிரைடன் கார்ஸ் மற்றும் ஜேமி ஓவர்டன் ஆகியோர் இந்த தொடரில் விளையாடவில்லை. ஜோர்டான் காக்ஸ், சோனி பேக்கர், சகிப் முகமது ஆகியோர் அணியில் மீண்டும் வாய்ப்பு பெற்றுள்ளனர்.
இங்கிலாந்து அணி விவரம்:
ஹாரி ப்ரூக் (கேப்டன்), ரிஹான் அகமது, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜோர்டான் காக்ஸ், சோனி பேக்கர், சகிப் முகமது, டாம் பேன்டன், ஜேக்கப் பெத்தல், ஜாஸ் பட்லர், ஜேம்ஸ் கோல்ஸ், சாம் கரன், லியாம் டாசன், வில் ஜேக்ஸ், ரஷீத், பில் சால்ட், ஜோஷ் டங், லுக் வுட்.

Recent News

இடதுசாரி கட்சியின் தலைவர்கள் முதல்வருடன் சந்தப்பு

இடதுசாரி கட்சியின் தலைவர்கள்…

தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு சி.ஜோசப் விஜய்…

அமித்ஷாவுடன் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர்  சந்திப்பு

அமித்ஷாவுடன் தமிழ்நாடு பொறுப்பு…

டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன்…

இது தர்மசங்கடமான தோல்வி அல்ல. ஆனால் எங்களுக்கு மிகவும் மனச்சோர்வை அளிக்கும் தோல்வி-ஸ்ரேயஸ் அய்யர் விளக்கம்

இது தர்மசங்கடமான தோல்வி…

அயர்லாந்து தொடருக்கு முன் 16 தொடர்களை…

NEET போன்ற சதிகளை தகர்த்தி வெற்றி பெற முயற்சிகளை இந்நாளில்  உறுதியேற்போம்-மு.க ஸ்டாலின்

NEET போன்ற சதிகளை…

மக்களின் உயிர்காக்கும் மகத்தான மனிதநேயத் தொண்டில்…

தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு முதல்வர் விஜய் வாழ்த்து

தேசிய மருத்துவர்கள் தினத்தை…

மனித உயிர்களைக் காக்கும் உன்னதப் பணியில்…

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டம் 11வது நாளை எட்டியது

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி…

புதுடெல்லி: டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி…

1 5 6 7 8 9 33