RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுடன் 2-வது நாளாக முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை

சென்னை,
தமிழக முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் தலைமைச் செயலகத்தில், அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் 2 நாள் மாநாடு நேற்று தொடங்கியது. நேற்றைய கூட்டத்தில் 2 அமர்வுகள் நடத்தப்பட்டன. முதல் அமர்வில் மாவட்ட ஆட்சியர்கள், போலீஸ் அதிகாரிகளும் இணைந்து பங்கேற்றனர். 2-ம் அமர்வில், அரசுத் துறைகளின் செயலாளர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
மாநாட்டை முதல்-அமைச்சர் விஜய் தொடங்கிவைத்து பேசுகையில், வெளிப்படையான, நேர்மையான, லஞ்ச லாவண்யமற்ற ஒரு சமூக நீதிக்கான அரசாக இந்த அரசை மக்கள் தேர்ந்தெடுத்து உள்ளார்கள். ரேஷன், கல்வி, குடிநீர், சுகாதாரம், மின் சாரம், சாலை வசதி, பஸ் வசதி போன்ற அடிப்படை வசதி களில் முக்கிய கவனம் செலுத்தியாக வேண்டும்.
சட்டம் ஒழுங்கு பிரச்சினையை பொறுத்தவரை, சட்டத்தின் அடிப்படையில் சுதந்திரமாக முடிவு செய்யலாம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், எவ்வளவு உயர்வானவர்களாக இருந்தாலும், பாரபட்சமின்றி சட்டப்படி உடனடியாக துரிதமாக நடவடிக்கை எடுத்து உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும். அதில் நிரபராதிகள் யாரும் தப்பித்தவறிகூட பாதிக்கப்பட்டுவிடக்கூடாது.
முக்கியமாக பெண்கள் பாதுகாப்பை நூறு சதவீதம் உறுதிப்ப டுத்த வேண்டும். அதில் மாற்றம் இல்லாமலும், சமரசம் இல் லாமலும் செயல்பட வேண்டும். பெண்களின் பாதுகாப்புக்கு உரிய சிறப்பு ஏற்பாடுகளை செய்தே ஆக வேண்டும். அதன் படி, மாவட்ட கலெக்டர்களும் போலீஸ் சூப்பிரண்டுகளும் இதில் கூர்மையான மற்றும் சிறப்பு கவனத்தை செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
2-வது நாள் மாநாடு
இதைத் தொடர்ந்து இன்று காலை 9.30 மணியளவில் 2-வது நாளாக மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்று வரும் இந்த மாநாட்டில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், வனத்துறை உயர் அலுவலர்கள் பங்கேற்றுள்ளனர். மாலை 6 மணி வரை இக்கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தின் நிறைவில் முதல்-அமைச்சர் விஜய் உரையாற்றுவார். அப்போது திறமையாக செயல்பட்ட மாவட்ட ஆட்சியர்கள், போலீஸ் அதிகாரிகளை பாராட்டி பரிசுகளை வழங்குவார்.

Recent News

தமிழக நதிகளை இணைப்பதில் அரசு உறுதி: ஆளுனர்

தமிழக நதிகளை இணைப்பதில்…

தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று…

2036க்குள் தமிழகத்தில் 1.5 லட்சம் டிரில்லியன் டாலர் பொருளாதாரம்: ஆளுனர்

2036க்குள் தமிழகத்தில் 1.5…

தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று…

போதைபொருள் பழக்கத்தை தடுக்க முந்தைய அரசு தவறிவிட்டது: ஆளுனர்

போதைபொருள் பழக்கத்தை தடுக்க…

தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று…

தவெக அரசு குறைவாக கடன் வாங்கினால் பதவி விலக தயார்; தங்கம் தென்னரசு சவால்

தவெக அரசு குறைவாக…

தமிழ்நாடு அரசின் வெள்ளை அறிக்கை குறித்து…

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் “சத்தியவான் சாவித்திரி” படத்தின் ரிலீஸ் தேதி

கீர்த்தி சுரேஷ் நடிக்கும்…

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை கீர்த்தி…

அரசு உதவி பெறும் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலா? அரசு பதிலளிக்க கோர்ட் உத்தரவு

அரசு உதவி பெறும்…

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த மைக்கேல்…

1 15 16 17 18 19 33