RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

ஒழுகினசேரி மேம்பால பணி; மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட ஒழுகினசேரி பகுதியில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் தெரிவிக்கையில், நாகர் கோவில் மாநகராட்சி பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், ஒழுகினசேரி பகுதியில் இரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பகுதி நாகர்கோவில் மாநகராட்சியின் மைய பகுதியில் உள்ளதால் போக்குவரத்து நெரிசலாக உள்ளது. மேலும் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் வாகனங்களை மாற்றுப் பாதைகளில் திருப்பி விடப் பட்டுள்ளது.
கட்டுமானப்பணிகள் நடக்கும் இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் தகுந்த மாற்றுப்பாதைகளை சீர மைத்து, எச்சரிக்கை பல கைகள் வைக்கப்பட்டுள் ளது.
தற்போது பக்கசுவர் மற்றும் சாலைகள் அமைப் பதற்காக அருகில் உள்ள இடம் கையகப்படுத்தி, சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அருகில் உள்ள பொதுமக் களுக்கு எந்தவிதமாக இடையூறுகளின்றி மேலும் இப்பணிகளை தாமதிக்கமால் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் எந்த விதமான காரணமும் கூறாமல், தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பயன் பாட்டிற்கு கொண்டு வர ரயில்வே கோட்ட பொறியாளர், மாநகராட்சி செயற்பொறியாளர் உள்ளிட்டவருக்கு அறிவு றுத்தபட்டது. இவ்வாறு கூறினார்.
நடைபெற்ற ஆய் வில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆர்.ஐஸ்வர்யா, நாகர் கோவில் மாநகராட்சி செயற்பொறியாளர் ரகுராம், ரயில்வே உதவி செயற்பொறியாளர், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

Recent News

மூக்குப்பீறி பகுதியில் கஞ்சா பதுக்கி விற்ற வாலிபர் கைது

மூக்குப்பீறி பகுதியில் கஞ்சா…

நாசரேத்:மூக்குப்பீறி பகுதியில் கஞ்சாவை பதுக்கி விற்ற…

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் ஆதரவற்ற முதியோருக்கு நலத்திட்ட உதவி

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில்…

நாகர்கோவில்: –தமிழக வெற்றி கழக தலைவரான…

திருப்பத்தூர் ஆசிரிய நகரல் முதல்வர் பிறந்தநாள் விழா

திருப்பத்தூர் ஆசிரிய நகரல்…

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் ஆசிரிய நகரில் தமிழக…

பெண் குழந்தை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர்

பெண் குழந்தை பாதுகாப்பு…

அரியலூர்:அரியலூர் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், சமூக…

தூத்துக்குடி கல்லூரியில் யோகா தின விழா

தூத்துக்குடி கல்லூரியில் யோகா…

தூத்துக்குடி:தூத்துக்குடி கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு…

திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் 4வது வருடாபிஷேகம்

திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலில்…

நாகர்கோவில்:திருவட்டாறு ஆதிகே சவப் பெருமாள் கோவிலில்…

1 9 10 11 12 13 33