RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

கேரளாவில் பறிமுதல் செய்யப்பட்ட வெடிப்பொருள் வழக்கு: திருச்சி, விருதுநகரில் என்ஐஏ சோதனை

  1. Home
  2. »
  3. Political News
  4. »
  5. கோட்டூர்புரத்தில் போராடியவர்களை கைது செய்தது தவெக அரசின் சர்வாதிகாரப் போக்கு டிடிவி தினகரன்…

கேரளாவில் பறிமுதல் செய்யப்பட்ட வெடிப்பொருள் வழக்கு: திருச்சி, விருதுநகரில் என்ஐஏ சோதனை

திருச்சி: கேரள மாநிலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெலட்டின் குச்சிகள் மற்றும் பிற வெடிப்பொருட்கள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, திருச்சி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலைகளில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெடிமருந்துகள் ஏற்றிச் சென்ற ஒரு லாரி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக கொச்சியைச் சேர்ந்த என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பறிமுதல் செய்யப்பட்ட வெடிப்பொருட்கள் தமிழ்நாட்டின் திருச்சி மற்றும் விருதுநகர் மாவட்டங்களிலும், கர்நாடக மாநிலத்தின் மிசாப்பூர் பகுதியிலும் உள்ள மூன்று வெடிமருந்து நிறுவனங்களில் தயாரிக்கப்பட்டவை என்பது தெரியவந்தது.

இதையடுத்து, திருச்சி மாவட்டம் துறையூர் அருகே முருங்கப்பட்டியில் செயல்பட்டு வரும் வெற்றிவேல் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் நிறுவனத்தில் என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். கல்குவாரிகள் மற்றும் கிணறுகள் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்படும் ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்ட வெடிப்பொருட்கள் இங்கு தயாரிக்கப்படுகின்றன.

கொச்சியிலிருந்து வந்த 5 பேர் கொண்ட என்ஐஏ குழுவினர் தொழிற்சாலையின் உற்பத்தி, விநியோகம் மற்றும் பதிவேடுகள் தொடர்பாக விரிவான ஆய்வு நடத்தினர். பாதுகாப்பு பணிக்காக தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படை போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர். சோதனை நடைபெற்ற காரணத்தால் பொதுமக்கள் மற்றும் ஊடகத்தினருக்கு தொழிற்சாலை வளாகத்திற்குள் அனுமதி வழங்கப்படவில்லை.

கடந்த 2016ஆம் ஆண்டு இந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே அகத்தாகுளத்தில் உள்ள வெடிமருந்து ஆலையிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். விசாரணையில், கேரளாவில் பறிமுதல் செய்யப்பட்ட டெட்டனேட்டர்கள் இந்த ஆலையில் தயாரிக்கப்பட்டவை என்பது தெரியவந்தது.

இந்த ஆலைக்கு 2028ஆம் ஆண்டு வரை செல்லுபடியாகும் உரிமம் உள்ளதாகவும், ஆண்டுக்கு சுமார் 4.50 கோடி டெட்டனேட்டர்கள் மற்றும் 3,000 மெட்ரிக் டன் அளவிலான வெடிப்பொருட்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அகத்தாகுளத்தில் இருந்து தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு டெட்டனேட்டர்கள் அனுப்பப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

வெடிப்பொருட்கள் சட்டவிரோதமாக விநியோகிக்கப்பட்டதா என்பது குறித்து என்ஐஏ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Recent News

கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன

கொள்முதல் செய்யப்பட்ட நெல்…

நெல்லை நுகர்பொருள் வாணிப கழக மண்டல…

மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில்10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா

மதுரை மாவட்ட ஆட்சியர்…

மதுரை:மதுரை மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே.பிரவீன்…

தென்மேற்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள்

தென்மேற்குப் பருவமழை முன்னேற்பாடு…

அனைத்துத்துறை அலுவலர்களுடன் பெரம்பலூர் கலெக்டர் ஆய்வு…

அதிமுகவில் இருந்து முன்னாள் சபாநாயகர் தனபால் விலகல்

அதிமுகவில் இருந்து முன்னாள்…

சென்னை:அதிமுகவில் இருந்து தான் முன்பே விலகி…

தாம்பரம்- போடிநாயக்கனூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில்

தாம்பரம்- போடிநாயக்கனூர் இடையே…

தாம்பரம்:பயணிகள் கூட்ட நெரி தாம்பரம்போடிநாயக்கனூர் சலை…

சிகார் புனித பதுவை அந்தோணியார் ஆலய திருத்தேர் பவனி

சிகார் புனித பதுவை…

நாகை:நாகை அருகே பழமை வாய்ந்த சிகார்…

1 4 5 6 7 8 12