RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

சட்டசபையில் அதிமுக வெளிநடப்பு… சபாநாயகர் மீது குற்றச்சாட்டு

சென்னை:
சட்டசபை இன்று 3-வது நாளாக தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தங்களை பேச அனுமதிக்கவில்லை எனக்கூறி அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
இதன் பின்னர் சட்டசபை வளாகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மேகதாது அணை தீர்மானத்தில் எதிர்க்கட்சித்தலைவர் கூறிய திருத்தத்தை முதல்-வர் விஜய் சேர்த்தது அவையை மீறிய செயலாகும். விதிகளுக்கு எதிராக தீர்மானத்தில் திருத்தம் செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், மீண்டும் ஒரு நடுவர் மன்றம் வேண்டும் என சொல்வது ஏன்?
அரசின் தனித்தீர்மானத்தில் திருத்தம் செய்தது தொடர்பாக உரிமை மீறல் பிரச்சினையை எழுப்ப கடிதம் கொடுத்திருந்தோம். உரிமை மீறல் பிரச்சினையை அதிமுக சார்பில் அவைக்கு கொண்டு வர அனுமதி கேட்டோம். ஆனால் உரிமை மீறல் பிரச்சினை குறித்து பேச எங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. சட்டசபையில் எங்களை பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை. அதனால் வெளிநடப்பு செய்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Recent News

நேற்று 13-ஆம் நாள்!-பார்த்திபன்

நேற்று 13-ஆம் நாள்!-பார்த்திபன்

நேற்று 13-ஆம் நாள்!பலரும் பேசினார்கள். பேசியவர்களில்…

கலெக்டர் ஆய்வு

கலெக்டர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட…

தங்கத்தின் விலை இன்று 1,120 குறைவு

தங்கத்தின் விலை இன்று…

சென்னை: தங்கத்தின் விலை இன்று (ஜூலை…

குதிரை பேர வழக்கு: சென்னை காவல் நிலையத்தில் இன்று செந்தில் பாலாஜி ஆஜராகிறார்

குதிரை பேர வழக்கு:…

சென்னை:தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில்…

தற்காலிக தொகுப்புதியத்தில் இடைநிலை ஆசிரியர் நியமனம்: நாமக்கல் கலெக்டர்

தற்காலிக தொகுப்புதியத்தில் இடைநிலை…

நாமக்கல்:நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் லி.மது பாலன்…

ஒழுகினசேரி மேம்பால பணி; மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

ஒழுகினசேரி மேம்பால பணி;…

நாகர்கோவில்:நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட ஒழுகினசேரி பகுதியில் நடைபெற்று…

1 2 3 4 5 6 33