RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

‘தமிழக அரசின் வியூகம் புதிய காவிரி நடுவர் மன்றம்’ ஆதவ் அர்ஜுனா

சென்னை:
மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தில் புதிய நடுவர் மன்றம் அமைப்பது தொடர்பாக திருத்தம் செய்ததை அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. திருத்தம் கொண்டுவந்ததற்கான காரணம் குறித்து சட்டசபையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியதாவது;
”குடிநீர் பங்கீடுக்காக காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பட்டு வருகிறது. குடிநீர் தேவைக்காக என்று சொல்லி புதிய அணையை கட்ட கர்நாடகா முயற்சி செய்கிறது. குடிநீருக்காக புதிய அணையை கட்டினால் சட்ட சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. மேகதாது அணையை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை கொடுக்கச்சொல்லி கர்நாடக அரசுக்கு ஆதரவாக மேலாண்மை ஆணையம் செயல்பட்டு வருகிறது. காவிரி மேலாண்மை ஆணையம் மீது நம்பிக்கையை இழந்துவிட்டோம்.
சட்ட வல்லுநகள் கூறியபடியே புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என கோருகிறோம். குடிநீர் பங்கீடுக்காக மேலாண்மை ஆணையம் செயல்பட்டு வருகிறது. அணை கட்ட வேண்டும் என்றால் புதிய நடுவர் மன்றம் தேவை. கர்நாடக அரசின் வியூகத்துக்கு எதிராக தமிழக அரசின் வியூகமே புதிய நடுவர் மன்றம். புதிய நடுவர் மன்றம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தால் நமக்கு போதிய கால அவகாசம் கிடைக்கும்.”
இவ்வாறு அவர் கூறினார்.

Recent News

டீசல் விலை உயர்வால் சரக்கு கட்டணங்கள் 4% உயர்வு

டீசல் விலை உயர்வால்…

புதுடெல்லி:டீசல் விலை உயர்வு மற்றும் எரிபொருள்…

ஜெர்மனியில் சீனாவுக்கு ராணுவ ரகசியங்களை உளவு பார்த்த தம்பதி கைது

ஜெர்மனியில் சீனாவுக்கு ராணுவ…

பெர்லின்:உலக வல்லரசு நாடுகளுக்கு இடையே தொழில்நுட்ப…

ஈரான் போரில் 42 விமானங்களை இழந்த அமெரிக்கா

ஈரான் போரில் 42…

வாஷிங்டன்:ஈரான் மீது “ஆபரே ஷன் எபிக்…

“இனப்படுகொலைகளின் களங்கப்பட்ட வரலாற்றை கொண்டது பாகிஸ்தான்”

“இனப்படுகொலைகளின் களங்கப்பட்ட வரலாற்றை…

ஐநா.வில் இந்தியப் பிரதிநிதி பேச்சு நியூயார்க்:நீண்டகாலமாக…

96.90ஆக வீழ்ந்த ரூபாய் மதிப்பு

96.90ஆக வீழ்ந்த ரூபாய்…

புதுடெல்லி:அமெரிக்கா ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை…

தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் 3ம் தேதி கடைசி நாள்

தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க அடுத்த…

கன்னியாகுமரி கலெக்டர் தகவல் நாகர்கோவில்:அரசு தொழிற்ப…

1 23 24 25 26 27 33