RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

தவெக அரசு குறைவாக கடன் வாங்கினால் பதவி விலக தயார்; தங்கம் தென்னரசு சவால்

தமிழ்நாடு அரசின் வெள்ளை அறிக்கை குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:-
நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை என்பது தமிழ்நாட்டுக்கு புதிது அல்ல. 2001 மற்றும் 2021ம் ஆண்டுகளில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், 2001ல் வெள்ளை அறிக்கை அதற்கு முந்தைய 10 ஆண்டுகளின் நிதி நிலை விபரங்களைக் கொண்டது. 2021ம் ஆண்டு வெள்ளை அறிக்கை அதற்கு முந்தைய 15 ஆண்டுகளின் நிதி நிலை விபரங்களை கொண்டது.
ஆனால், தற்போது முந்தைய 5 ஆண்டுகளின் நிதி நிலை என கூறப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன? யாரைக் காப்பாற்றும் முயற்சியாக அதற்கு முந்தைய அதிமுக அரசின் விபரங்கள் சொல்லப்படவில்லை?.. இயலாமையை மூடி மறைக்க, வாக்குறுதிகளில் இருந்து தப்பிக்க த.வெ.க. அரசு, மக்களை ஏமாற்ற இந்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
த.வெ.க. ஆட்சி ஒருவேளை 5 ஆண்டுகளை நிறைவு செய்தால், 5 ஆண்டு இறுதியில் தமிழ்நாடு அரசின் கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும். இதை ஒரு சவாலாகவே சொல்கிறேன். கடந்த 5 ஆண்டுகளில் தி.மு.க. அரசு ஒவ்வொரு ஆண்டும் வாங்கிய சராசரி கடனை விட, த.வெ.க. அரசு குறைத்து வாங்கினால், நான் பொறுப்பில் இருந்தே விலகிவிடுகிறேன்.
நாளை எங்களிடம் புதிய திட்டம் எதையும் எதிர்பார்க்காதீர்கள் என்பதை சொல்லாமல் சொல்லவே கவர்னர் உரைக்கு முன்பாகவே இந்த வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
த.வெ.க. அரசின் வெள்ளை அறிக்கையை எஸ்கேப்பிசம் என்று சொல்லலாம்; வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், தங்கள் இயலாமையை மூடிமறைக்க த.வெ.க. அரசு முயற்சி செய்கிறது. அரசு கடன் வாங்குவது தவறு அல்ல, அந்தக் கடனை எப்படி மக்கள் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்துகிறோம் என்பதே முக்கியம் இவ்வாறு அவர் கூறினார்.

Recent News

வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகங்களில் சேலம் ஆட்சியர் ஆய்வு

வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய…

சேலம்:சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் அலுவலகம்,…

பண்ருட்டி அதிமுக வடக்கு ஒன்றிய அதிமுக ஆலோசனை கூட்டம்

பண்ருட்டி அதிமுக வடக்கு…

கடலூர்:கடலூர் மாவட்டம் பண் குட்டியில், பண்ருட்டி…

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திருப்பத்தூரில் இடதுசாரி கட்சிகள் ஆர்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை…

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரத ஸ்டேட்…

ஆக்கிரமித்துள்ள பொதுவழியை உடனடியாக திறக்க கோரி காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு

ஆக்கிரமித்துள்ள பொதுவழியை உடனடியாக…

திருப்பத்தூரை அடுத்த எலவம்பட்டி ஊராட்சி தம்மன்…

போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் சுற்றித்திரிந்தால் அபராதம்

போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள்…

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு,…

ராமஞ்சேரி பகுதிகளில் இன்று மின் விநியோக நிறுத்தம்

ராமஞ்சேரி பகுதிகளில் இன்று…

திருவள்ளூர்:ராமஞ்சேரி துணை மின் நிலையத்தில் 22.05.2026…

1 27 28 29 30 31 33