RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

திருக்கழுக்குன்றத்தில் STEM ஆய்வக திறப்பு விழா

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளின் அறிவியல் திறன், படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் நோக்கில் STEM ஆய்வக திறப்பு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.

விழாவிற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்  திருவளர்ச்செல்வி  தலைமை தாங்கினார்.  வரவேற்புரை எஸ். கிருஷ்ணகுமாரி பள்ளி தலைமை ஆசிரியர் Hand in Hand India நிறுவனத்தின் சார்பாக லலிதா சீனிவாசன் , செல்ல சுப்பு ,ஜான் சுகுமார், மற்றும் செல்வி ஆசிரியர் திருமதி  தேவமனோகரி STEM Lab ஆசிரியர் அம்பிகா,பள்ளி மேலாண்மைக் குழு (SMC) உறுப்பினர்கள், ஆசிரியர்கள், JRC மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

விழாவில் பேசுகையில், STEM (Science, Technology, Engineering & Mathematics) ஆய்வகம் மாணவிகளுக்கு செயல்வழிக் கற்றலை ஊக்குவித்து, அறிவியல் சோதனைகள், புதுமையான கண்டுபிடிப்புகள், கணித மற்றும் தொழில்நுட்ப திறன்களை வளர்க்கும் சிறந்த வாய்ப்பாக அமையும் என்று வலியுறுத்தப்பட்டது.

மேலும், இந்த ஆய்வகத்தின் மூலம் மாணவிகள் அறிவியல் ஆராய்ச்சி மனப்பான்மையை வளர்த்துக் கொண்டு, எதிர்கால உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளுக்குத் தேவையான திறன்களை எளிதாகப் பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இறுதியாக, அனைவருக்கும் ராஜலக்ஷ்மி நன்றி தெரிவித்து விழா இனிதே நிறைவுற்றது. இந்த STEM ஆய்வகம் மூலம் திருக்கழுக்குன்றம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் புதிய  சாதனைகள் படைப்பார்கள் என்ற நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது.

Recent News

கரூர் டிஎஸ்பி உட்பட தவெக மீது வழக்கு போட்ட 19 போலீஸ் அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்

கரூர் டிஎஸ்பி உட்பட…

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27…

நீலகிரி கலெக்டருக்கு தவெகவினர் மரியாதை

நீலகிரி கலெக்டருக்கு தவெகவினர்…

நீலகிரி:நீலகிரி மாவட்ட ஆட் சியர் தலைவர்…

உதகையில் நாளை மலைப்பயிர் கண்காட்சி தொடக்கம்

உதகையில் நாளை மலைப்பயிர்…

நீலகிரி:2026 ஆம் ஆண்டின் முதல் காட்சியாக…

உதகையில் 128வது மலர்க்கண்காட்சி கோலாகலம்

உதகையில் 128வது மலர்க்கண்காட்சி…

50,000க்கும் மேற்பட்ட மலர்த் தொட்டிச்செடிகள் காட்சிப்படுத்தல்…

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா வித்யாலயா பள்ளி சாதனை

10 ஆம் வகுப்பு…

உளுந்தூர்பேட்டை:உளுந்தூர்பேட்டை கிழக்கு கந்தசாமி புறத்தில் செயல்பட்டு…

முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு கல்லூரி சேர்க்கையில் சிறப்பு இட ஒதுக்கீடு

முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு…

விண்ணப்பிக்க சேலம் கலெக்டர் அறிவுறுத்தல் சேலம்:சேலம்…

1 26 27 28 29 30 33