RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

நடிகர் அஜித்குமாரின் தாயார் காலமானார் முதல்வர் விஜய், அரசியல் தலைவர்கள் இரங்கல்

  1. Home
  2. »
  3. District News
  4. »
  5. திருப்பத்தூரில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி-உறுதிமொழி

நடிகர் அஜித்குமாரின் தாயார் காலமானார் முதல்வர் விஜய், அரசியல் தலைவர்கள் இரங்கல்

சென்னை: நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி மணி (வயது 85) உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக சென் னையில் இன்று 30.05.2026 காலை உயிரி ழந்தார். இந்நிலையில், நடிகர் அஜித் குமாரின் தாயார் காலமானதைத் தொடர்ந்து, முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். முதல்வர் விஜய்: அருமை நண்பர் அஜித் குமார் தாயார் மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் அஜித் குமாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரி வித்துக்கொள்கிறேன். மு.க. ஸ்டாலின்: அன்புச் சகோதரர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். உயிர்கொடுத்து, தான் உயரங்கள் தொட்டதைப் பார்த்து மகிழ்ச்சி கொண்ட அன்னையினை இழந்து வாடும் அஜித்குமாரை தேற்ற என்னிடம் வார்த் தைகள் இல்லை. அன்னையுடனான அழகிய தருணங்களே இந்தத் துயரில் அவர் மீளத் துணைநி ற் க விழைகிறேன். அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும். எடப்பாடியார்: திரை யுலகில் முன்னணிநட்சத்திர நடிகரும். கார் பந்தய வீரருமான சகோதரர் அஜித் குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன். பாசமிகு தாயாரை இழந்து வாடும் சகோதரர் அஜித்குமார். அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரி வித்துக்கொள்கிறேன். மு.வீரபாண்டியன்: நடிகர் அஜித் குமாரின் தாயார் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வருத்தத்தையும் துயரத்தையும் தருகிறது. அவரது மறைவுச் செய்தி திரைத்துறையினரையும், சோகத்தில் ஆழ்த்தி யுள்ளது. ரசிகர்களையும் பெரும் இணையர் நடிகர் ஷாலினி அவரைப் பிரிந்து வாடும் நடிகர் அஜித் குமார், அவரது வாழ்க்கை 5 மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரி வித்துக் கொள்கிறோம் அன்புமணி: தமிழ்த் திரைப்பட நடிகர் அஜித் குமார் தாயார் மோகினி மணி அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். தாய் மீது நடிகர் அஜித்குமார் கொண்டிருந்த அன்பை நான் அறிவேன். உலகில் எவராலும் தாங்கிக் கொள்ள முடியாத இழப்பு என்பது தாயாரின் மறைவு தான். அன்னையை இழந்து வாடும் நடிகர் அஜித்குமார் உள்ளிட்ட குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரி வித்துக் கொள்கிறேன்.”

Recent News

அரசங்க வேலைவாய்ப்பு

அரசங்க வேலைவாய்ப்பு

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழிகாட்டி மையத்தில்…

யாரும் பயப்பட வேண்டாம்

யாரும் பயப்பட வேண்டாம்

“நேற்று வந்தவர் என்று ஒருகாலமும் நாங்கள்…

தூக்கி எறிந்த‌து தவெக-ஆதவ் அர்ஜுனா

தூக்கி எறிந்த‌து தவெக-ஆதவ்…

“தமிழக அரசியல் 2026க்கு முன்பு, பின்பு…

தமிழகத்தில் மதுக்கடைகளே இல்லாத முதல் நகராட்சியானது அரக்கோணம்

தமிழகத்தில் மதுக்கடைகளே இல்லாத…

அரக்கோணம்:தமிழகத்தில் மதுக்கடைகள் இல்லாத முதல் நகராட்சியாக…

த.வெ.க. தோழமை கட்சிகள் ஆலோசனை கூட்டம்

த.வெ.க. தோழமை கட்சிகள்…

தவெக தோழமை கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில்…

அன்புமணி ராமதாஸ் நடைபயணம்

அன்புமணி ராமதாஸ் நடைபயணம்

மேகதாது அணை திட்டத்தைக் கர்நாடக அரசு…

1 4 5 6 7 8 33