RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

நீட் வினாத்தாள் கசிவு; ‘தேர்வு முகமையின் நபர்களுக்கு பதிலாக’… டெலிகிராம் உரிமையாளர் பாவெல் காட்டம்

  1. Home
  2. »
  3. District News
  4. »
  5. திருப்பத்தூரில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி-உறுதிமொழி

நீட் வினாத்தாள் கசிவு; ‘தேர்வு முகமையின் நபர்களுக்கு பதிலாக’… டெலிகிராம் உரிமையாளர் பாவெல் காட்டம்

நியூயார்க்
இளநிலை மருத்துவ படிப்புகளில் மாணவ மாணவிகள் சேர்ந்து படிப்பதற்காக நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வு, நடப்பு ஆண்டின் மே 3-ந்தேதி நாடு முழுதும் நடந்தது. 22 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில், தேர்வுக்கு முன்னரே வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது.
ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் தேர்வுக்கு முன்பே வினாத்தாள் கசிந்து, விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் பலர் கைது செய்யப்பட்டனர். இதனால் நடந்து முடிந்த நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை ரத்து செய்தது.
நீட் மறுதேர்வு, வருகிற 21-ந்தேதி நடக்கிறது. அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன. வினாத்தாள்கள் மீண்டும் கசியாமல் இருக்க இந்த முறை பல அதிரடி பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. மறுதேர்வை முன்னிட்டு, வினாத்தாள் தயாரிப்பாளர்கள், மதிப்பீட்டாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள், இன்டர்நெட் வசதி இல்லாத ரகசிய இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், தேசிய தேர்வு முகமையின் கோரிக்கையை ஏற்று, நாடு முழுவதும் டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு தற்காலிக தடை விதித்துள்ளது. மே 3-ல் நடந்த நீட் தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே டெலிகிராம் செயலியில் பரவியதால் தற்போது இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
தகவல் தொழில்நுட்ப சட்டம் (ஐ.டி. சட்டம்), 2000-இன் பிரிவு 69கி-ன் அவசரகால விதிகளை பயன்படுத்தி, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், டெலிகிராம் செயலிக்கு ஜூன் 22-ம் தேதி வரை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், டெலிகிராமில் ஏற்கெனவே அனுப்பப்பட்ட செய்திகளை திருத்தும் வசதியை (னீமீssணீரீமீ-மீபீவீtவீஸீரீ யீமீணீtuக்ஷீமீ) வருகிற 30-ந்தேதி வரை முடக்குமாறு அந்த தளத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு தடை விதித்துள்ளதுபற்றி அதன் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான பாவெல் துரோவ் கூறும்போது, சில பயனாளர்கள் வினாத்தாள்களை கசிய விட்டதற்காக இந்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சகம், டெலிகிராமுக்கு ஒரு வார காலத்திற்கு தடை விதித்துள்ளது
இந்த நடவடிக்கையின் மூலம், தேர்வுக்கான தகவல்களை கசிய விட்ட தேர்வு நடத்தும் முகமையில் உள்ள நபர்களுக்கு பதிலாக, இந்தியாவில் உள்ள 15 கோடிக்கும் கூடுதலான டெலிகிராம் பயனாளர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர். இந்த தடையால் எதுவும் நிற்க போவதில்லை. டெலிகிராம் தவிர்த்த பிற செயலிகள் மூலம் வினாத்தாள் கசிவுகள் உள்ளிட்டவை நடைபெற போகின்றன என்று காட்டத்துடன் கூறியுள்ளார்.
இந்தியாவில் நீட் மறுதேர்வு நடைபெறும் 18 மண்டலங்களை சேர்ந்த மையங்களுக்கான வினாத்தாள்களை கொண்டு செல்ல இந்திய விமான படையின் உதவியுடன் மத்திய அரசு கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

Recent News

இடதுசாரி கட்சியின் தலைவர்கள் முதல்வருடன் சந்தப்பு

இடதுசாரி கட்சியின் தலைவர்கள்…

தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு சி.ஜோசப் விஜய்…

அமித்ஷாவுடன் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர்  சந்திப்பு

அமித்ஷாவுடன் தமிழ்நாடு பொறுப்பு…

டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன்…

இது தர்மசங்கடமான தோல்வி அல்ல. ஆனால் எங்களுக்கு மிகவும் மனச்சோர்வை அளிக்கும் தோல்வி-ஸ்ரேயஸ் அய்யர் விளக்கம்

இது தர்மசங்கடமான தோல்வி…

அயர்லாந்து தொடருக்கு முன் 16 தொடர்களை…

NEET போன்ற சதிகளை தகர்த்தி வெற்றி பெற முயற்சிகளை இந்நாளில்  உறுதியேற்போம்-மு.க ஸ்டாலின்

NEET போன்ற சதிகளை…

மக்களின் உயிர்காக்கும் மகத்தான மனிதநேயத் தொண்டில்…

தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு முதல்வர் விஜய் வாழ்த்து

தேசிய மருத்துவர்கள் தினத்தை…

மனித உயிர்களைக் காக்கும் உன்னதப் பணியில்…

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டம் 11வது நாளை எட்டியது

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி…

புதுடெல்லி: டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி…

1 5 6 7 8 9 33