RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

வாட்ஸ்அப் செயலியில் பயனர் பெயர் அறிமுகம்: சிஇஓ குணால் ஷா வெளியிட்ட பகிர்வு

சென்னை:
வாட்ஸ்அப் செயலியில் விரைவில் பயனர் பெயர் அறிமுகமாக உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இதனை வாட்ஸ்அப் குளோபல் சிஇஓ குணால் ஷா பகிர்ந்துள்ளார்.
இதன் மூலம் வாட்ஸ்அப் பயனர்கள் தங்களது தொலைபேசி எண்ணை மாற்று பயனர்களுக்கு பகிராமல் மிகவும் பிரைவசியாக சாட் செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 300 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.
தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் அறிமுகம் செய்வது வழக்கம்.
இந்நிலையில், மக்களின் அன்றாட வாழ்வில் ஓர் அங்கமாகி விட்ட வாட்ஸ்அப் செயலியில் பயனர்கள் தங்களின் தொலைபேசி எண்ணை பகிராமல் அதற்கு மாற்றாக பயனர் பெயரை (ஹிsமீக்ஷீஸீணீனீமீ) பயன்படுத்தும் வகையிலான அப்டேட் அறிமுகமாக உள்ளது. இது வாட்ஸ்அப் செயலியில் மிக முக்கிய பிரைவசி அப்டேட் ஆக பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் பயனர்கள் தங்களது தனித்துவ பயனர் பெயரில் வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்த முடியும். இது இப்போதைக்கு சர்வதேச அளவில் பகுதி பகுதியாக அறிமுகமாகி வருகிறது. இந்த அம்சம் குறித்து பயனர்களுக்கு வாட்ஸ்அப் செயல் நோட்டிபிகேஷன் மூலம் தெரிவிக்கப்படும் என மெட்டா தெரிவித்துள்ளது. இதன் மூலம் பிற பயனர்களுக்கு தங்களது தொலைபேசி எண்ணை பகிரமாக பயனர்கள் சாட் செய்ய முடியும்.

Recent News

திருக்கழுக்குன்றத்தில் STEM ஆய்வக திறப்பு விழா

திருக்கழுக்குன்றத்தில் STEM ஆய்வக…

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அரசு மகளிர்…

லாக்கப் மரணத்திற்கு முதல்வர் விஜய் மௌனம் காக்கிறார்-திமுக முன்னாள் அமைச்சர் கீதாஜீவன்  குற்றச்சாட்டு

லாக்கப் மரணத்திற்கு முதல்வர்…

காமராஜரின் 124 வது பிறந்த நாள்…

பூர்வக்குடிகளை வெளியேற்றக்கூடாது-முதலமைச்சரிடம் மனு

ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் சரணாலய விவகாரம் தொடர்பாக…

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 இல் சுய கணக்கெடுப்பு பணிகள்

மக்கள் தொகை கணக்கெடுப்பு…

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கொடியசைத்து…

பெருந்தலைவர் காமராஜர் இருந்திருந்தால் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியிருப்பார்-தமிழிசை சௌந்தர்ராஜன்

பெருந்தலைவர் காமராஜர் இருந்திருந்தால்…

மரியாதைக்குரிய பாரதப்பிரதமர் நரேந்திர மோடி பண…

தூங்கிக் கொண்டிருக்கிறது தவெக அரசு அடிப்படை வசதிகள் குறித்து ஜெயக்குமார் கடும் விமர்சனம்

தூங்கிக் கொண்டிருக்கிறது தவெக…

“பல இடங்களில் அடிப்படைக் கட்டமைப்பு இல்லை..…

1 2 3 33