RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

5 வயது சிறுமியை கிணற்றில் வீசி கொன்ற அத்தை; வெளிவந்தது உண்மை

மதுரை:
மதுரை பைகாரா பகுதியில் உள்ள முத்துராமலிங்கபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் பாலகணேஷ் (வயது 32). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கார்த்திகை செல்வி (28). இவர்களுக்கு சாய் தீப்தி, சாரு நித்திகா (5) என்ற இரட்டை பெண் குழந்தைகள் இருந்தனர். சம்பவத்தன்று கார்த்திகை செல்வி தனது மகள்களுடன் ராமநாதபுரம் எம்.எஸ்.கே.நகர் பகுதியில் உள்ள தந்தை முத்துமுருகன் வீட்டுக்கு சென்றிருந்தார்.
அங்கு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமி சாய் தீப்தி நள்ளிரவில் திடீரென மாயமானாள். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வருகை தந்து சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக ராமநாதபுரம் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வீக பாண்டியன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கார்த்திகைசெல்வியின் தம்பி அஜித்குமாரின் மனைவி சபரிகாவிடம் (22) என்பவர் இந்த கொலையை செய்தது தெரியவந்தது.
விசாரணையில், நான், கல்லூரியில் படித்தபோது உறவினர் மகனான அஜித்குமாரை காதலித்தேன். இந்த காதலை அஜித்குமார் வீட்டினர் ஏற்கவில்லை. இதனால் அஜித்குமார், என்னை அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டார். அஜித்குமாருக்கு வசதியான இடத்தில் பெண் பார்த்து திருமணம் செய்ய வேண்டும் என்று அவருடைய தாய் பூமாதேவி திட்டமிட்டு இருந்த நிலையில் இந்த காதல் திருமணம் பூமா தேவிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இதனால் என் மீது பூமாதேவி, அவருடைய மகள் கார்த்திகைசெல்வி உள்ளிட்டோர் பாசம் இல்லாமல் இருந்தார்கள். இந்தநிலையில் எனக்கு கடந்த 11 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை மாற்றுத்திறனாளியாக பிறந்ததால் குடும்பத்தினரிடம் அந்த குழந்தை மீதும் வெறுப்பு அதிகரித்தது. கார்த்திகை செல்வியின் மீதும், அவரின் குழந்தைகள் மீதும் எனக்கு கோபம் ஏற்பட்டது.
இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு கார்த்திகை செல்வி குழந்தைகளுடன் வந்திருந்தார். அப்போது அந்த குழந்தைகளை கொல்ல திட்டமிட்டேன். எல்லோரும் அசந்து தூங்கிய நேரத்தில் நைசாக சாய் தீப்தியை தூக்கிக்கொண்டு வெளியே சென்றேன். வீட்டின் பின்புறம் சென்று அங்கிருக்கும் உறை கிணற்றுக்குள் கண்ணிமைக்கும் நேரத்தில் சாய் தீப்தியை தூக்கி வீசினேன் என்று போலீசார் தெரிவித்தனர்.இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டு, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Recent News

திருக்கழுக்குன்றத்தில் STEM ஆய்வக திறப்பு விழா

திருக்கழுக்குன்றத்தில் STEM ஆய்வக…

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அரசு மகளிர்…

லாக்கப் மரணத்திற்கு முதல்வர் விஜய் மௌனம் காக்கிறார்-திமுக முன்னாள் அமைச்சர் கீதாஜீவன்  குற்றச்சாட்டு

லாக்கப் மரணத்திற்கு முதல்வர்…

காமராஜரின் 124 வது பிறந்த நாள்…

பூர்வக்குடிகளை வெளியேற்றக்கூடாது-முதலமைச்சரிடம் மனு

ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் சரணாலய விவகாரம் தொடர்பாக…

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 இல் சுய கணக்கெடுப்பு பணிகள்

மக்கள் தொகை கணக்கெடுப்பு…

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கொடியசைத்து…

பெருந்தலைவர் காமராஜர் இருந்திருந்தால் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியிருப்பார்-தமிழிசை சௌந்தர்ராஜன்

பெருந்தலைவர் காமராஜர் இருந்திருந்தால்…

மரியாதைக்குரிய பாரதப்பிரதமர் நரேந்திர மோடி பண…

தூங்கிக் கொண்டிருக்கிறது தவெக அரசு அடிப்படை வசதிகள் குறித்து ஜெயக்குமார் கடும் விமர்சனம்

தூங்கிக் கொண்டிருக்கிறது தவெக…

“பல இடங்களில் அடிப்படைக் கட்டமைப்பு இல்லை..…

1 2 3 33