RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

பாலஸ்தீன இனப்படுகொலைக்கு எதிராகத் துறைமுகத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

  1. Home
  2. »
  3. Spiritual News
  4. »
  5. சிகார் புனித பதுவை அந்தோணியார் ஆலய திருத்தேர் பவனி

பாலஸ்தீன இனப்படுகொலைக்கு எதிராகத் துறைமுகத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும், போர் மற்றும் இனப்படுகொலைக்கு எதிராகவும் நாளை (அக்டோபர் 30) உலகம் முழுவதிலும் சுமார் 20 நாடுகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட துறைமுகங்களில் துறைமுகத் தொழிலாளர்கள் மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

“நாங்கள் போருக்காக வேலை செய்ய மாட்டோம்” மற்றும் “இனப்படுகொலைக்கு துறைமுகங்களில் இடமில்லை” ஆகிய முழக்கங்களுடன், இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் மற்றும் எரிபொருட்களை ஏற்றிச் செல்வதற்கு எதிராகத் தொழிலாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

இப்போராட்டத்தின் முதன்மை மையமாக இத்தாலி, கிரீஸ், பிரான்ஸ், சைப்ரஸ், மொராக்கோ ஆகிய நாடுகளின் துறைமுகங்கள் திகழ்கின்றன. ஸ்பெயின், துருக்கி, ஜெர்மனி, அயர்லாந்து, போர்ச்சுகல், டென்மார்க், ஸ்வீடன், ஆஸ்திரேலியா, மெக்சிகோ, அமெரிக்கா மற்றும் இந்தியாவின் பல துறைமுகங்களிலும் தொழிலாளர்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர்.

இது, வரலாற்றிலேயே மிகப்பெரிய போர் எதிர்ப்பு தொழிலாளர் வேலைநிறுத்தமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

Recent News

பாலஸ்தீன இனப்படுகொலைக்கு எதிராகத்…

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும், போர் மற்றும்…

திருக்கழுக்குன்றத்தில் STEM ஆய்வக திறப்பு விழா

திருக்கழுக்குன்றத்தில் STEM ஆய்வக…

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அரசு மகளிர்…

லாக்கப் மரணத்திற்கு முதல்வர் விஜய் மௌனம் காக்கிறார்-திமுக முன்னாள் அமைச்சர் கீதாஜீவன்  குற்றச்சாட்டு

லாக்கப் மரணத்திற்கு முதல்வர்…

காமராஜரின் 124 வது பிறந்த நாள்…

பூர்வக்குடிகளை வெளியேற்றக்கூடாது-முதலமைச்சரிடம் மனு

ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் சரணாலய விவகாரம் தொடர்பாக…

1 2 3 … 33