RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

அதிமுகவில் பிரிவை ஏற்படுத்த நான் ஒருபோதும் எண்ணியதில்லை லீமா ரோஸ் எம்எல்ஏ விளக்கம்

  1. Home
  2. »
  3. District News
  4. »
  5. திருப்பத்தூரில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி-உறுதிமொழி

அதிமுகவில் பிரிவை ஏற்படுத்த நான் ஒருபோதும் எண்ணியதில்லை லீமா ரோஸ் எம்எல்ஏ விளக்கம்

சென்னை: “அதிமுகவில் பிரிவுகள் ஏற்படுத்த நான் ஒருபோதும் எண்ணியதில்லை. என் மீது களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு சில வாடகை பேச்சாளர் களால் பரப்பப்பட்ட வதந் திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது தலைவர்களின் இணைப்பு” என அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ் மார்ட்டின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘அதிமுகவின் முன்னணி தலைவர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் களைந்து கட்சி ஒன்றுபட்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. சமீப காலமாக என்னை வைத்து சில வாடகை பேச்சாளர்கள் எந்த வித அடிப்படை ஆதாரமும் இன்றி சொல்லிய கட்டுக்கதைகள் பொய்த்துப் போயின. எம். ஜி. ஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் செழுமைப்படுத்தப்பட்ட பேரியக்கத்தில் பிரிவுகள் ஏற்படுத்த நான் ஒருபோதும் எண்ணியதில்லை. என் மீது களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு சில வாடகை பேச்சாளர்களால் பரப்பப்பட்ட வதந் திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது இந்த இணைப்பு. பல கோடி மக்களின் நம்பிக்கையாக திகழும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு லால்குடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டது என் வாழ்நாளின் பெரும் அங்கீகாரமாக கருதுகிறேன். எனது தொகுதி மக்களுக்கு நலத் திட்டங்களை வழங்கிடவும், தொகுதி வளர்ச்சிக்கு உழைப்பதுமே என்னுடைய முதன்மை கடமையாக எண்ணு கிறேன். தமிழ்நாட்டில் மீண்டும் ஜெயலலிதாவின் நல்லாட்சி மலர்ந்திட எடப்பாடி பழனிசாமி தலைமையில் அயராது பாடுபடுவோம்’ எனத் தெரி வித்துள்ளார்.

Recent News

எதிர்க்கட்சிகள் கேள்விகளுக்கு முதல்வர் விஜய் இன்று பதிலுரை… அதிகரித்த எதிர்பார்ப்பு

எதிர்க்கட்சிகள் கேள்விகளுக்கு முதல்வர்…

சென்னை:முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் முதல்…

மணலியில் மீத்தேன் கசிவால் பதற்றம்…

மணலியில் மீத்தேன் கசிவால்…

சென்னை மணலியில் பேருந்து நிலையம் கட்டுமானப்பணி…

சென்னையில் தொடங்கியது ரஜினியின் 173 வது படத்தின் படப்பிடிப்பு?

சென்னையில் தொடங்கியது ரஜினியின்…

சென்னை:நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும்…

‘தமிழக அரசின் வியூகம் புதிய காவிரி நடுவர் மன்றம்’ ஆதவ் அர்ஜுனா

‘தமிழக அரசின் வியூகம்…

சென்னை:மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தில் புதிய…

சட்டசபையில் அதிமுக வெளிநடப்பு… சபாநாயகர் மீது குற்றச்சாட்டு

சட்டசபையில் அதிமுக வெளிநடப்பு……

சென்னை:சட்டசபை இன்று 3-வது நாளாக தொடங்கி…

நெல்லை அழகியகூத்தர் கோவில் ஆனி திருவிழா ரத வீதியுலா- திருநடன தீபாராதனை

நெல்லை அழகியகூத்தர் கோவில்…

நெல்லை:நெல்லை அருகே ராஜவல்லிபுரம் செப்பறை அழகியகூத்தர்…

1 12 13 14 15 16 33