RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

அமோனியா வாயு கசிவு; பலி எண்ணிக்கை 5ஆக உயர்வு

திரு​வள்​ளூர்:
திரு​வள்​ளூர் மாவட்​டம் கன்​னிகைப்​பேர் கிராமத்தில் கடல் உணவு பதப்​படுத்​தும் தனி​யார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு ஏற்​பட்டத்தில் பலி 5 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சிலர் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
திரு​வள்​ளூர் மாவட்​டம் ஊத்​துக்​கோட்டை வட்​டம் பெரியபாளையம் அடுத்த கன்​னிகைப்​பேர் பகு​தி​யில் இறால் உள்ளிட்ட கடல் உணவுப் பொருட்​களை பதப்​படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்​றுமதி செய்​யும் ‘செ​யின்ட் பீட்​டர் அண்ட் பால் ஸீ ஃபுட்’ என்ற தனி​யார் நிறு​வனம் செயல்​பட்டு வரு​கிறது. சென்னை வண்​ணாரப்​பேட்​டையைச் சேர்ந்த ஜோசப் ஜெகன், மோகன் ஆகியோர் இதை நடத்தி வரு​கின்​றனர். இங்கு இரவு, பகல் என 2 ஷிப்ட்​களில் 200-க்​கும் மேற்​பட்ட வடமாநிலத் தொழிலா​ளர்​கள் தங்கி வேலை செய்து வரு​கின்​றனர்.
நேற்று காலை வழக்​கம்​போல சுமார் 120 தொழிலா​ளர்​கள் பணி​யில் ஈடு​பட்​டிருந்​தனர். அப்​போது, குளிர்​சாதனப் பிரி​வில் பயன்​படுத்​தப்​படும் அமோனியா வாயு கசிந்​துள்​ளது. சில நிமிடங்​களில் தொழிற்​சாலை முழு​வதும் வாயு பரவிய​தால் தொழிலாளர்களுக்கு மூச்​சுத் திணறல், கண் எரிச்​சல் ஏற்பட்டுள்ளது.
இதில் 60 பெண்​கள், 5 ஆண்​கள் என மொத்​தம் 65 தொழிலா​ளர்கள் மயக்கம் அடைந்​தனர். சிலருக்கு வாய், மூக்​கு, கண், காதுகளில் ரத்​தக் கசி​வும் ஏற்​பட்​ட​தால் பதற்​ற​மான சூழல் உரு​வானது. பெரிய​பாளை​யம் போலீ​ஸார், தீயணைப்​புத் துறை​யினர், வருவாய்த் துறை​யினர் விரைந்து வந்து மீட்​புப் பணி​களில் ஈடுபட்டனர். பாதிக்​கப்​பட்ட தொழிலா​ளர்​கள் உடனடி​யாக 108 ஆம்​புலன்ஸ் மற்​றும் பல்​வேறு வாக​னங்​கள் மூலம் அருகே உள்ள மருத்​து​வ​மனைகளுக்கு கொண்டு செல்​லப்​பட்​டனர்.
மிகவும் பாதிக்கப்பட்ட 7 தொழிலா​ளர்​கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்​கும், 9 பேர் ராஜீவ் காந்தி அரசு பொது​மருத்​து​வ​மனைக்​கும் மேல் சிகிச்​சைக்​காக மாற்​றப்​பட்​டனர். அவர்​களுக்கு தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு பெண்ணும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு பெண்ணும், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு பெண் என மூன்று பேர் உயிரிழந்தனர்.
இதனயைடுத்து திருவள்ளூர் அமோனியா வாயு கசிவு பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 10-க்கும் மேற்பட்டோர் இன்னும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.

Recent News

நாசரேத் பொறியியல் கல்லூரியில்கனோன் ஆர்தர் மர்காஷிஸ் பெயரில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு பிரதம பேராயர் ரூபன் மார்க் அடிக்கல்

நாசரேத் பொறியியல் கல்லூரியில்கனோன்…

நாசரேத்:தென்னிந்திய திருச் சபையின் பிரதம பேராயர்…

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிவகங்கை மாவட்டம் சாதனை

10ஆம் வகுப்பு பொதுத்…

சிவகங்கை:சிவகங்கை மாவட்டத் தில் கடந்த 202526…

குற்றால சீசனில் பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய என்ன செய்ய வேண்டும்

குற்றால சீசனில் பயணிகள்…

அதிகாரிகளுடன் தென்காசி ஆட்சியர் ஆலோசனை தென்காசி:தென்காசி…

கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன

கொள்முதல் செய்யப்பட்ட நெல்…

நெல்லை நுகர்பொருள் வாணிப கழக மண்டல…

மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில்10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா

மதுரை மாவட்ட ஆட்சியர்…

மதுரை:மதுரை மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே.பிரவீன்…

தென்மேற்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள்

தென்மேற்குப் பருவமழை முன்னேற்பாடு…

அனைத்துத்துறை அலுவலர்களுடன் பெரம்பலூர் கலெக்டர் ஆய்வு…

1 24 25 26 27 28 33