RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில்10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா

  1. Home
  2. »
  3. District News
  4. »
  5. திருப்பத்தூரில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி-உறுதிமொழி

மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில்10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா

மதுரை:
மதுரை மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே.பிரவீன் குமார் தலைமையில் 2026ம் ஆண்டு பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியகளுக்கு பாராட்டுவிழா நடைபெற் றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே.பிரவீன் குமார் தெரிவிக்கையில்:கல்வியைப் பொறுத் தவரை அனைத்துத் துறைகளுமே மாவட்ட ஆட்சியரின் கீழ் இயங் கினாலும், கல்வித்துறை என் மனதிற்கு மிக நெருக்க மானது. காரணம், என் பெற்றோர்கள் இருவருமே அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் என்பதால், ஓர் ஆசிரியரின் சவால் சுளை யும் சுஷ்டங்களையும் நான் நேரடியாகப் பார்த்தி ருக்கிறேன். மேலும், சுல்வி என்ற வஜ்ராயுதத்தின் முக்கியத்துவத்தை நேரடியாக உணர்ந்த பயனாளியும் நானே. எனது முழுமையான படிப்பும் அரசுப் பள்ளிகளில்தான் அமைந்தது. பெற்றோர் களையும் தாணடி, ளையும் மாணவர்களின் மீது அக்கறை கொண்டு வழிகாட்டும் பணியைச் சமுதாயத்தில் ஆசிரியர்கள் செய்கிறார்கள். மருத் துவர்களுக்கும் ஆசிரியர் களுக்கும் மட்டும்தான் ஒரு மனிதனின் வாழ்க்கையைத் திருத்தி, மறுவாழ்வு கொடுக்கும் சக்தி இருக்கிறது.
குறிப்பாக, அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது எனக்குக் கூடுதல் அக்கறை உண்டு. ஏனெனில், அங்கு வரும் மாணவர்கள் பெரும்பாலும் சமூக பொருளாதார ரீதியாகப் பின்த ங்கிய வர்கள். நன்றாகப் படிக் கும் மாணவர்களை ஊக் குவிப்பதை விட, வசதியற்ற மற்றும் படிப்பில் ஆர்வம் குறைந்த மாணவர்களை ஊக்குவிப்பதே சவா லானது: அதை நம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மிகச் சிறந்த முறையில் செய்கிறார்கள்.

மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு என் பாராட்டுகள். மாதிரிப் பள்ளி மாணவர்கள் ஆளுமைகளாக உருவெடுப் பதைக் காணும்போது என் சொந்த வீட்டுப் பிள்ளைகள் முன்னேறுவது போன்ற நிறைவு ஏற்படுகிறது. சுடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த கல்வியாண்டில் மதுரை மாவட்டம் கல்வித் தரத்தில் முன்னேறும் என்று கல்வித்துறைச் செயலாளருக்கு நான் கொடுத்திருந்த உறுதியைக் காப்பாற்றிய ஒட்டுமொத்தப் பள்ளிக் கல்வித்துறைக்கும் வாழ்த்துகள். தேர்ச்சி பெற்றுள்ள மாணவர் களுக்கு முன்னால் இப் போது போட்டித் தேர்வுகள் நிறைந்த சுடல் போன்ற உலகம் இருக்கிறது.
தேர்வு முடிவு என் பது ஒருவருடைய முழுமை யான அறிவு அல்லது திறமையின் பிரதிபலிப்பு அல்ல. ஆனால், நாம் சரியான வழியில் செல்கிறோமா என்பதை மதிப்பீடுவதற்கான ஓர் அளவுகோல் மட்டுமே. இந்த வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றி பெற ஒழுக்கமும், அர்ப்பணிப்பும் கடின உழைப்பும் மட்டுமே முக்கியம். புத்திசாலித்தனமான ததனமான உழைப்பிற்கு எப்பொழு துமே மாற்று கிடையாது.
மாணவர்களிடையே சில தவறான புரிதல்கள் (கட்டுக்கதைகள்) உள்ளன. முதலாவது. ஆங்கிலத்தில் நல்ல மதிப்பெண் பெற்றால்தான் முன்னேற முடியும் என்பது தவறு. இரண்டாவது. நகர்ப்புறத்தில் படித்தால் தான் முன்னேற முடியும் என்பதும் தவறு: கிராமப் புறத்தில் படித்துச் சாதனை படைத்து இங்கு பாராட்டு பெற வருகை தந்துள்ள மேலூர் அமுதமொழி இதற்குச் சிறந்த உதாரணம். மூன்றாவது. கணினி, வசதிகள், தனிவகுப்புகள் இருந்தால் மட்டும்தான் சாதிக்க முடியும் என்பதும் தவறானது. கல்வியும் ஒழுக்கமும் இருந்தால் மட்டுமே எவரும் வாழ்க் கையில் கண்டிப்பாக முன்னேற முடியும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கே.ஜே.பிரவின் குமார், தெரிவித்தார்.

இவ்விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தயாளன், மாவட்ட கல்வி அலுவலர் (மேலூர்) கணேசன், மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) கார்மேகம். மாநகராட்சி கல்வி அலுவலர் மோகன், பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Recent News

திருக்கழுக்குன்றத்தில் STEM ஆய்வக திறப்பு விழா

திருக்கழுக்குன்றத்தில் STEM ஆய்வக…

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அரசு மகளிர்…

லாக்கப் மரணத்திற்கு முதல்வர் விஜய் மௌனம் காக்கிறார்-திமுக முன்னாள் அமைச்சர் கீதாஜீவன்  குற்றச்சாட்டு

லாக்கப் மரணத்திற்கு முதல்வர்…

காமராஜரின் 124 வது பிறந்த நாள்…

பூர்வக்குடிகளை வெளியேற்றக்கூடாது-முதலமைச்சரிடம் மனு

ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் சரணாலய விவகாரம் தொடர்பாக…

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 இல் சுய கணக்கெடுப்பு பணிகள்

மக்கள் தொகை கணக்கெடுப்பு…

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கொடியசைத்து…

பெருந்தலைவர் காமராஜர் இருந்திருந்தால் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியிருப்பார்-தமிழிசை சௌந்தர்ராஜன்

பெருந்தலைவர் காமராஜர் இருந்திருந்தால்…

மரியாதைக்குரிய பாரதப்பிரதமர் நரேந்திர மோடி பண…

தூங்கிக் கொண்டிருக்கிறது தவெக அரசு அடிப்படை வசதிகள் குறித்து ஜெயக்குமார் கடும் விமர்சனம்

தூங்கிக் கொண்டிருக்கிறது தவெக…

“பல இடங்களில் அடிப்படைக் கட்டமைப்பு இல்லை..…

1 2 3 33