RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

இந்திய அணி உடனான டி20 கிரிக்கெட் தொடர்: இங்கிலாந்து அணி அறிவிப்பு

லண்டன்:
இந்திய கிரிக்கெட் அணி, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாட்டுக்கு பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. அயர்லாந்து அணி உடன் இரண்டு டி20 போட்டிகளும், இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க உள்ளது.
அயர்லாந்து அணியுடன் வரும் 26, 28 ஆகிய தேதிகளில் இந்தியா விளையாடுகிறது. அதன் பின்னர் ஜூலை 1 முதல் ஜூலை 19 வரையில் இங்கிலாந்தில் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்திய அணியுடன்ன டி20 தொடரில் பங்கேற்று விளையாட உள்ள இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடருக்கான அணியை இங்கிலாந்து ஆடவர் கிரிக்கெட் அணி தேர்வாளர் மார்க்கர் நார்த் அறிவித்தார். இதில், பல்வேறு டி20 கிரிக்கெட் தொடர்களில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜேம்ஸ் கோல்ஸ் இடம்பிடித்துள்ளார். இந்த தொடர் மூலம் இவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகிறார்.
காயம் காரணமாக பிரைடன் கார்ஸ் மற்றும் ஜேமி ஓவர்டன் ஆகியோர் இந்த தொடரில் விளையாடவில்லை. ஜோர்டான் காக்ஸ், சோனி பேக்கர், சகிப் முகமது ஆகியோர் அணியில் மீண்டும் வாய்ப்பு பெற்றுள்ளனர்.
இங்கிலாந்து அணி விவரம்:
ஹாரி ப்ரூக் (கேப்டன்), ரிஹான் அகமது, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜோர்டான் காக்ஸ், சோனி பேக்கர், சகிப் முகமது, டாம் பேன்டன், ஜேக்கப் பெத்தல், ஜாஸ் பட்லர், ஜேம்ஸ் கோல்ஸ், சாம் கரன், லியாம் டாசன், வில் ஜேக்ஸ், ரஷீத், பில் சால்ட், ஜோஷ் டங், லுக் வுட்.

Recent News

எல் நினோ தாக்கமும்… தமிழகத்தில் உருவெடுக்கும் பாதிப்பும்…

எல் நினோ தாக்கமும்……

சென்னைஎல் -நினோ தாக்கத்தால் தமிழகம் உட்பட…

நாகை – திருவாரூர் மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் ஆட்சியருடன் சந்திப்பு

நாகை – திருவாரூர்…

நாகை:நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த…

நாகை – திருவாரூர் மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் ஆட்சியருடன் சந்திப்பு

நாகை – திருவாரூர்…

நாகை:நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த…

கள்ளக்குறிச்சியில் அமைச்சர் வன்னி அரசு – கலெக்டர் ஆலோசனை

கள்ளக்குறிச்சியில் அமைச்சர் வன்னி…

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள…

ஆலப்பாக்கம் ஊராட்சியில் முதல்வர் பிறந்தநாள் நல உதவிகள் – சமத்துவ விருந்து

ஆலப்பாக்கம் ஊராட்சியில் முதல்வர்…

செங்கல்பட்டு:தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் பிறந்தநாளை…

நாகை அருகே பாப்பாகோவில் ஊராட்சியில் தவெக கட்சி அலுவலகம் திறப்பு

நாகை அருகே பாப்பாகோவில்…

நாகை:நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தென்கிழக்கு ஒன்றியம்…

1 8 9 10 11 12 33