RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

“இனப்படுகொலைகளின் களங்கப்பட்ட வரலாற்றை கொண்டது பாகிஸ்தான்”

  1. Home
  2. »
  3. Political News
  4. »
  5. கோட்டூர்புரத்தில் போராடியவர்களை கைது செய்தது தவெக அரசின் சர்வாதிகாரப் போக்கு டிடிவி தினகரன்…

“இனப்படுகொலைகளின் களங்கப்பட்ட வரலாற்றை கொண்டது பாகிஸ்தான்”

ஐநா.வில் இந்தியப் பிரதிநிதி பேச்சு

நியூயார்க்:
நீண்டகாலமாக இனப் படுகொலைகளில் ஈடுபட்ட வரலாற்றைக் கொண்ட நாடு பாகிஸ்தான் என்று ஐநா பாதுகாப்பு சபையில் பேசிய இந்திய பிரதிநிதி ஹரிஷ் பர்வதனேனி விமர்சித்துள்ளார்.
ஆயுத மோதல்களில் இருந்து பொதுமக்களைப் பாதுகாத்தல் என்ற பொருளில் ஐநா பாதுகாப்பு சபையில் திறந்த விவாதம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ஹரிஷ் பார்வதனேனி. “நீண்டகாலமாக இனப் படுகொலைகளில் ஈடு பட்ட களங்கப்பட்ட வர லாற்றைக் கொண்ட நாடு பாகிஸ்தான். அப்படிப்பட்ட ஒரு நாடு இந்த அவையில் இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினை (காஷ்மீர் விவ காரம்) குறித்துப் பேசுவது முரண்பாடானது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் புனித ரமலான் மாதத்தில், அமைதி. சிந்தனை, கருணையின் காலத்தில் ஆப்கனிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள உமித் போதை மறுவாழ்வு மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஒரு காட்டு மிராண்டித்தனமான வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதை உலகம் மறக்கவில்லை. எந்த வகையிலும் ராணுவ இருக்க முடியாத ஒரு இலக்காக இடத்தில் கோழைத் தன மான, மனசாட்சியற்ற தாக்குதலை பாகிஸ்தான் நடத்தியது. இதில், 269 பேர் உயிரிழந்தனர். 122 பேர் காயமடைந்தனர்.
இருட்டில் அப்பாவி பொதுமக்களைக் குறி வைக்கும் பாகிஸ்தான். -சர்வதேச சட்டத்தின் உயர் கொள்கைகளை ஆதரிப்பது முரண்பாடா னது. ஆப்கானிஸ்தான் குடிமக்களுக்கு எதிராக பாகிஸ்தான் எல்லை தாண்டி நடத்திய வன்முறை காரணமாக 94.000க் -கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்ததாக ஹிழி கிவிகி மதிப்பீட்டுள்ளது. தன் சொந்த மக்கள் மீது குண்டு வீசி திட்டமிட்ட இனப்படுகொலையை நடத்திய ஒரு நாடு. இத்தகைய கொடூர ளை செய்வதில் ஆச்ச ஆக்கிரமிப்புச் செயல்க ரியமில்லை.
‘ஆபரேஷன் சர்ச் லைட்’ என்பது 1971ம் ஆண்டு மார்ச் மாதம் கிழக்கு பாகிஸ்தானில் (தற்போதைய வங்கதேசம்) பங்களாதேஷ் தேசியவாத இயக்கத்துக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்திய ரகசிய பெயர். ‘ஆபரேஷன் சர்ச்லைட்” நடவடிக்கை யின்போது பாகிஸ்தான் தனது சொந்த ராணுவ த்தைக் கொண்டு 4 லட்சம் பெண்களை இனப் படுகொலை செய்யவும், கூட்டுப் பாலியல் வன் கொடுமைகளுக்கு உள்ளாக்கவும் அனுமதித்தது.
இதுபோன்ற மனிதாபி மானமற்ற நடத்தையை பாகிஸ்தான் தனது எல் லைக்கு உள்ளேயும் வெளியேயும் பல பத் தாண்டுகளாக நடத்துகிறது. உள்நாட்டுத் தோல்விகளை மறைக்க மீண்டும் மீண்டும் இத் தகைய நடவ டிக்கைகளில் அது ஈடுபடுகிறது. நம் பிக்கை, சட்டம், அறநெறி என எதுவும் இல்லாத நிலையில், பாகிஸ்தானின் இத்தகைய பிரச்சாரத்தை உலகம் எளிதில் கண்டு கொள்ளும்” என தெரி வித்தார்.ஐநாவுக்கான பாகிஸ் தான் பிரதிநிதி. காஷ்மீர் விவகாரம் குறித்து எழுப்பியதை அடுத்து அதற்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் இந்திய பிரதிநிதி இவ்வாறு பேசியது குறிப்பிடத்தக்கது.

Recent News

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும்…

அமைச்சர் நிர்மல் குமார் உறுதி சென்னை:“தமிழகத்தில்…

மயிலாடுதுறையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் அனுசரிப்பு

மயிலாடுதுறையில் முன்னாள் பிரதமர்…

மயிலாடுதுறை:முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி…

வடகரை ஐ.டி.ஐ.யில் தொழிற் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

வடகரை ஐ.டி.ஐ.யில் தொழிற்…

திருவள்ளூர் கலெக்டர் தகவல் திருவள்ளூர்:திருவள்ளூர்மாவட்ட ஆட்சித்…

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு…

சேலம் மாவட்ட ஆட்சியர் தகவல் சேலம்:சேலம்…

எல்நினோ நிகழ்வில் இருந்து வேளாண் பயிர்களை பாதுகாப்பது எப்படி?

எல்நினோ நிகழ்வில் இருந்து…

சிவகங்கை மாவட்டம் எல்நினோ நிகழ்வினால், காலநிலையில்…

AI துறையில் மிகப்பெரிய தவறு செய்யும் இந்தியா!

AI துறையில் மிகப்பெரிய…

சென்னை:ஐடி ஊழியர்களை, இந்திய தக்காளி விவசாயி…

1 9 10 11 12