RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

ஈரான் போரில் 42 விமானங்களை இழந்த அமெரிக்கா

வாஷிங்டன்:
ஈரான் மீது “ஆபரே ஷன் எபிக் பியூரி” என்ற பெயரில் அமெரிக்கா நடத்திய 6 வார போர் நட வடிக்கையில், அமெரிக்கா 42 விமானங்களை இழந்ததாக அந்நாட்டு பாராளுமன்ற ஆராய்ச்சி சேவை வெளியிட்டு ள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போரின் போது அமெரிக்காவின் போர் விமானங்கள் மற்றும் டிரோன்களை ஈரான் ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக கூறப்ப டுகிறது. அமெரிக்க பாதுகாப்புத்துறை மற்றும் அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு வெளி யிட்ட தகவல்களை ஆய்வு செய்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, அமெரிக்கா இழந்த அல்லது சேத மடைந்த விமானங்களில் 4 எப்15இ ஸ்ட்ரைக் ஈகிள் போர் விமானங்கள், ஒரு எப்35ஏ லைட்னிங்2 போர் விமானம், ஒரு ஏ10 தண்டர்போல்ட் தாக்குதல் விமானம் ஆகியவை அடங்கும். மேலும், 7 கே.சி 135 ஸ்ட்ராடோடேங்கர் எரிபொருள் நிரப்பும் விமானங்கள். ஒரு இ3 சென்ட்ரி கண்காணிப்பு விமானம், 2 எம்.சி130ஜெ கமாண்டோ சிறப்பு நடவடிக்கை விமானங்கள், ஒரு எச்.எச்60டபிள்யூ ஜாலி கிரீன் ஹெலிகாப்டர் ஆகியவையும் சேத மடைந்ததாக தெரி விக்கப் பட்டுள்ளது. இதுதவிர, 24 எம்.க்யூ9 ரீப்பர் டிரோன்கள் மற்றும் ஒரு எம்.க்யூ 4சி டிரைட்டன் டிரோனும் இழக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Recent News

டீசல் விலை உயர்வால் சரக்கு கட்டணங்கள் 4% உயர்வு

டீசல் விலை உயர்வால்…

புதுடெல்லி:டீசல் விலை உயர்வு மற்றும் எரிபொருள்…

ஜெர்மனியில் சீனாவுக்கு ராணுவ ரகசியங்களை உளவு பார்த்த தம்பதி கைது

ஜெர்மனியில் சீனாவுக்கு ராணுவ…

பெர்லின்:உலக வல்லரசு நாடுகளுக்கு இடையே தொழில்நுட்ப…

ஈரான் போரில் 42 விமானங்களை இழந்த அமெரிக்கா

ஈரான் போரில் 42…

வாஷிங்டன்:ஈரான் மீது “ஆபரே ஷன் எபிக்…

“இனப்படுகொலைகளின் களங்கப்பட்ட வரலாற்றை கொண்டது பாகிஸ்தான்”

“இனப்படுகொலைகளின் களங்கப்பட்ட வரலாற்றை…

ஐநா.வில் இந்தியப் பிரதிநிதி பேச்சு நியூயார்க்:நீண்டகாலமாக…

96.90ஆக வீழ்ந்த ரூபாய் மதிப்பு

96.90ஆக வீழ்ந்த ரூபாய்…

புதுடெல்லி:அமெரிக்கா ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை…

தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் 3ம் தேதி கடைசி நாள்

தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க அடுத்த…

கன்னியாகுமரி கலெக்டர் தகவல் நாகர்கோவில்:அரசு தொழிற்ப…

1 23 24 25 26 27 33