RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

ஓயாமல் பாயும் மேகதாது விவகாரம்

தலையங்கம் மக்கள்கோட்டை 28.05.2026 (2) ஓயாமல் பாயும் மேகதாது விவகாரம் மேகதாது அணை விவகாரம் இன்றல்ல நேற்றல்ல பல ஆண்டுகளாக பல தமிழக அரசியல் கட்சி தலைவர்களையும், ஆளும் கட்சிக்கும் சவால்விட்டு வருகிறது. அதுமட்டுமல்ல உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கும் மதிப்பு கொடுக்காமல் செயல்பட்டு வருகிறது. மேகதாது அணையின் குறுக்கே அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடக மாநிலம் அடம்பிடித்துக் கொண்டிருக்கிறது. அதை தடுத்தே தீருவோம் என்று தமிழக அரசு போர்க்கொடி தூக்கிக் கொண்டே இருக்கிறது. ஆனால் இந்த பிரச்சனைக்கு விடிவு காலமோ… முடிவோ இதுவரை எட்டப்படவில்லை. மேகதாது அணையின் விவகாரம்தான் என்ன என்று பார்த்தால், கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டம், காவிரி ஆற்றின் குறுக்கே சிவசமுத்திரம் அருவிக்கு அருகில் உள்ளது மேகதாது. இதன் குறுக்கே தான் அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு வரும் நீரின் அளவு குறையும் என்பதால், இதற்குத் தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. தி.மு.க., அ.தி.மு.க. அரசுகள் மேகாதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகமும் எதிர்ப்பு தெரிவித்து வருகறிது. காவிரி ஆற்றின் குறுக்கே மேக மேகதாது அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக அரசால் பூமிபூஜை நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது குறித்து, காவிரி நதிநீர் வல்லுநர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் விரிவாக ஆலோசனை மேற்கொண்டார். இக்கூட்டத்தில், காவிரி ஆற்றின் குறுக்கே உத்தேசிக்கப்பட்டுள்ள மேகதாது அணையானது உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரானது என்பதால், இத்திட்டத்தை எதிர்த்து 30.11.2018 றும் 7.6.2022 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு அரசால் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. ப்பிற்கு மேலும், மேகதாது அணையுடன் தொடர்புடைய இவ்வழக்கில் 13.11.2025 அன்று விசாரித்த உச்சநீதிமன்றம் மேகதாது அணை திட்டத்திற்கு எவ்வித அனுமதியையும் அளிக்கவில்லை என்றும், இத்திட்டம் தொடக்கநிலையில் தான் உள்ளது என்றும், இத்திட்டம் உச்சநீதிமன்ற முந்தைய தீர்ப்பிற் உட்பட்டதா இல்லையா என்பதை நிபுணர்கள் அடங்கிய மத்திய நீர்வளக் குழுமம் தான் தீர்மானிக்க முடியும் என்று தெரிவித்து, இவ்வழக்குகளை முடித்து வைப்பதாக உத்தரவிட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் 13.11.2025 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பினை எதிர்த்து, தமிழ்நாடு அரசால் சீராய்வு மனு 11.12.2025 தேதியில் தாக்கல் செய்யப்பட்டது. அச்சீராய்வு மனுவானது முந்தைய ஆட்சிக்காலத்தில் உச்சநீதிமன்றத்தில் உள்விசாரணை நடைபெற்று தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு தற்சமயம் உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. மேற்கண்ட தீர்ப்பு விவரங்களைக் கருத்தில் கொண்டு விரிவான சட்ட ஆலோசனைக்குப்பின் உடனடியாக எடுக்க வேண்டிய தொடர் சட்ட நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அறிவுரை வழங்கினார். ஆனால் மேகதாது அணையின் குறுக்கே அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடக மாநில துணை முதல்வர் சிவகுமார் திட்டவட்டமாக குறியுள்ளார். இந்தநிலையில் 27.05.2026 (புதன்கிழமை) புது டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் இதுதொடர்பாக பிரதமரிடம் பேசியுள்ளார். அப்போது, மேகதாது அணையை கட்ட அனுமதிக்கக்கூடாது என்று கோரிக்கையை முன்வைத்துள்ளார். நிலைமை இன்னும் எவ்ளவு காலம் நீலும் என்பதை பார்ப்போம்.

Recent News

ஆக்கிரமித்துள்ள பொதுவழியை உடனடியாக திறக்க கோரி காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு

ஆக்கிரமித்துள்ள பொதுவழியை உடனடியாக…

திருப்பத்தூரை அடுத்த எலவம்பட்டி ஊராட்சி தம்மன்…

போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் சுற்றித்திரிந்தால் அபராதம்

போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள்…

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு,…

ராமஞ்சேரி பகுதிகளில் இன்று மின் விநியோக நிறுத்தம்

ராமஞ்சேரி பகுதிகளில் இன்று…

திருவள்ளூர்:ராமஞ்சேரி துணை மின் நிலையத்தில் 22.05.2026…

அதிமுக மாவட்ட செயலாளர் மரு. ச.பசுபதி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

அதிமுக மாவட்ட செயலாளர்…

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள அதிமுக…

அம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி!

அம்பலூர் அரசு மேல்நிலைப்…

ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாராட்டு வாணியம்பாடி:திருப்பத்தூர் மாவட்…

திமுகவில் இருந்து விலகினார் திருப்பூர் மத்திய மா.செ. செல்வராஜ்

திமுகவில் இருந்து விலகினார்…

திமுகவில் இருந்து திருப்பூர் மத்திய மாவட்டச்…

1 7 8 9 10 11 12