RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டம் 11வது நாளை எட்டியது

  1. Home
  2. »
  3. District News
  4. »
  5. திருப்பத்தூரில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி-உறுதிமொழி

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டம் 11வது நாளை எட்டியது

புதுடெல்லி: டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டம் 11வது நாளை எட்டியது. நாடு முழுவதும் நடத்தப்பட்ட நீட் தேர்வு உட்பட தேர்வு முறையில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகளுக்கு எதிராக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் ஜூன் 20ம் தேதி முதல் டெல்லி ஜந்தர்மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் கடந்த ஞாயிறு முதல் உண்ணாவிரதப்போராட்டமும் தொடங்கப்பட்டது. சிஜேபியின் போராட்டம் நேற்றுடன் 11வது நாளை எட்டியது. போராட்ட இடத்திற்கு ஆதரவாளர்கள் வருவதை தடுப்பதற்கு கடுமையான போலீஸ் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அந்த சிஜேபி தலைவர் அபிஜித் டிப்கே குற்றம்சாட்டியுருக்கிறார். போராட்ட இடத்தில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மேற்கொண்டு வரும் உண்ணாவிரதப் போராட்டத்தின் மூன்றாவது நாளான நேற்று அவரது உடல்நிலை மோசமடைந்தது. இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அபிஜித் டிப்கே, ‘‘போராட்ட இடத்திற்குள் மக்கள் நுழைவதை காவல்துறை தடுக்கின்றனர், கட்சியின் முக்கிய குழு உறுப்பினர்கள் பலருக்கும் அனுமதி மறுக்கப்படுகின்றது. ஆதரவாளர்கள் ஜந்தர்மந்தரை வந்தடைவதை தடுப்பதற்காக போக்குவரத்து முடக்கப்படுகிறது. அவர்கள் என்ன செய்ய திட்டமிட்டுள்ளனர்?” என்று குறிப்பிட்டுள்ளார்.

Recent News

டீசல் விலை உயர்வால் சரக்கு கட்டணங்கள் 4% உயர்வு

டீசல் விலை உயர்வால்…

புதுடெல்லி:டீசல் விலை உயர்வு மற்றும் எரிபொருள்…

ஜெர்மனியில் சீனாவுக்கு ராணுவ ரகசியங்களை உளவு பார்த்த தம்பதி கைது

ஜெர்மனியில் சீனாவுக்கு ராணுவ…

பெர்லின்:உலக வல்லரசு நாடுகளுக்கு இடையே தொழில்நுட்ப…

ஈரான் போரில் 42 விமானங்களை இழந்த அமெரிக்கா

ஈரான் போரில் 42…

வாஷிங்டன்:ஈரான் மீது “ஆபரே ஷன் எபிக்…

“இனப்படுகொலைகளின் களங்கப்பட்ட வரலாற்றை கொண்டது பாகிஸ்தான்”

“இனப்படுகொலைகளின் களங்கப்பட்ட வரலாற்றை…

ஐநா.வில் இந்தியப் பிரதிநிதி பேச்சு நியூயார்க்:நீண்டகாலமாக…

96.90ஆக வீழ்ந்த ரூபாய் மதிப்பு

96.90ஆக வீழ்ந்த ரூபாய்…

புதுடெல்லி:அமெரிக்கா ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை…

தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் 3ம் தேதி கடைசி நாள்

தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க அடுத்த…

கன்னியாகுமரி கலெக்டர் தகவல் நாகர்கோவில்:அரசு தொழிற்ப…

1 23 24 25 26 27 33