RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

கர்நாடக முதல்வராக டி.கே. சிவகுமார் ஜூன் 3ல் பதவியேற்பு

பெங்களூரு: கர்நாடகா முதல்வராக டி.கே.சிவகுமார் ஜூன் 3ம் தேதி பதவியேற்பார் என்று கர்நாடகா பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஜி.சி.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் கடந்த 2023ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் க காங்கிரஸ் 135 இடங்களை க கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. முதல்வர் > பதவிக்கு சித்தராமையா, காங்கிரஸ் மாநில எ தலைவராக இருந்த டி.கே. எ சிவகுமார் இடையே கடும் ய போட்டி ஏற்பட்டது. நீண்ட இழு பறிக்கு பின்னர், க காங்கிரஸ் மேலிடம் சித்தராமையாவுக்கு முதல்வர் பதவியையும், டி.கே.சிவகுமாருக்கு துணை முதல்வர் பதவியையும் வழங்கியது. அப்போது இருவருக்கும் தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி வழங்க ‘அதிகார பகிர்வு’ ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், கடந்த 26ம் தேதி சித்தராமையாவை கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே டெல்லிக்கு அழைத்தார். மூத்த தலைவர்கள் ராகுல், கே.சி.வேணுகோபால், ரந்தீப் சிங் சுர்ஜேவாலா உள்ளிட்டோர் பங்கேற்ற கூட்டத்தில், முதல்வர் பதவியில் இருந்து விலகுமாறு அவரை தலைவர்கள் கேட்டுக் கொண்டனர். இதனையடுத்து மே 28 அன்று சித்தராமையா பதவி விலகினார். இந்நிலையில், வரும் ஜூன் 3ம் தேதி மாலை 5.15 மணியளவில் டி.கே.சிவகுமார் கர்நாடகா முதல்வராக பதவியேற்பார் என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் தெரி வித்துள்ளார். இறை நம்பிக்கையும், ஜோதிட நாட்டமும் கொண்ட டி.கே. சிவகுமாருக் கு ஜோதிடர்களே ஜூன் 3ம் மாலை 5.15 மணி முதல்வராக பதவியேற்க நல்ல நேரம் என்று குறித்துக் கொடுத்ததாக தகவல். இன்று நடைபெறவுள்ள காங்கிரஸ் சட்டமன்றக் குழு கூட்டத்தில் டி. கே. சிவகுமார் அதன் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். கர்நாடக முதல்வராக சிவகுமார் முன்மொழியப்பட்டத்தில் சித்தராமையாவுக்கு வருத்தம் என்று சலசலக்கப்படும் நிலையில், மாநில அமைச்சர் முனியப்பா இன்று அளித்தப் பேட்டியில், “சித்தராமையா டி.கே.சிவகுமார் இடையே எந்த உரசலும் இல்லை. டிகேஎஸ் முதல்வராவதற்கு முழு சம்மதத்தையும் சித்தராமையா ஏற்கெனவே வழங்கிவிட்டார். சட்டமன்றக் குழு கூட்டம் நடத்த வேண்டியது மட்டுமே மிச்சம்” என்று கூறியது கவனிக்கத்தக்கது.

Recent News

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவுக்கு அமைச்சரவையில் இடமில்லை

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவுக்கு…

சென்னை:முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கொளத்தூர் தொகுதியில்…

100 சதவீத தேர்ச்சி பெற்ற ஸ்ரீ நாராயணகுரு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

100 சதவீத தேர்ச்சி…

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி ஏகாம்பரநாதர் கோவில் தெருவில்…

தமிழக அமைச்சரவையில் வி.சி.க. சார்பில் வன்னியரசுக்கு அமைச்சர் பதவி

தமிழக அமைச்சரவையில் வி.சி.க.…

தமிழக அமைச்சர வையில் புதிதாக சேர்க்…

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும்…

அமைச்சர் நிர்மல் குமார் உறுதி சென்னை:“தமிழகத்தில்…

மயிலாடுதுறையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் அனுசரிப்பு

மயிலாடுதுறையில் முன்னாள் பிரதமர்…

மயிலாடுதுறை:முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி…

வடகரை ஐ.டி.ஐ.யில் தொழிற் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

வடகரை ஐ.டி.ஐ.யில் தொழிற்…

திருவள்ளூர் கலெக்டர் தகவல் திருவள்ளூர்:திருவள்ளூர்மாவட்ட ஆட்சித்…

1 29 30 31 32 33