RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

கேதார்நாத் அருகே கடும் நிலச்சரிவு

சிக்கிய 10,000 யாத்ரீகர்கள் மீட்பு

டேராடூன்:
உத்தரகாண்ட் மாநி லத்தில் சமவெளிப் பகு திகளில் வறண்ட வானிலை நிலவுகிறது. அதேசமயம், மலை மாவட்டங்களில் மழை பெய்து வருவதுடன் பனிப்பொழிவும் உள்ளது. பலத்த மழை காரணமாக ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பலத்த மழை காரணமாக கேதார் நாத் சிவன் கோவிலுக்கு புனித யாத்திரை செல்லும் பாதையில் நள்ளிரவில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.ருத்ரபிரயாக் மாவட்டம் சோன்பிரயாக் சுவுரிகுண்ட் இடையே மலைப்பாதையில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. பிரதான நெடுஞ்சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து தடைப ட்டது. இதனால் அந்த வழித்தடத்தில் யாத்திரை சென்றுகொண்டிருந்த ஏராளமான பக்தர்கள் பயணத்தை தொடர முடிய மல் சிக்கிக் கொண் டனர்.
இதையடுத்து மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.தொடர் மழை. இருள் சூழ்ந்த மோசமான வானிலை நிலவியபோதிலும் மீட்புக்குழுவினர் கடுமையாக போராடி, நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சிக்கியிருந்த 10450 பக்தர்களை மீட்டு அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றனர்.
மீட்புப் பணிகளை முடிந்தபின், சாலையில் குவிந்திருந்த பாறைகள் மற்றும் இடிபாடுகள் ஜேசிபி மூலம் அகற்றப்பட்டன. சிறிது நேரத்தில் அதி காரிகள் இந்த பணியை முடித்து, நெடுஞ்சாலை யைச் சீரமைத்தனர். இதையடுத்து வாகன போக்குவரத்து தொடங்கியது.

Recent News

திருக்கழுக்குன்றத்தில் STEM ஆய்வக திறப்பு விழா

திருக்கழுக்குன்றத்தில் STEM ஆய்வக…

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அரசு மகளிர்…

லாக்கப் மரணத்திற்கு முதல்வர் விஜய் மௌனம் காக்கிறார்-திமுக முன்னாள் அமைச்சர் கீதாஜீவன்  குற்றச்சாட்டு

லாக்கப் மரணத்திற்கு முதல்வர்…

காமராஜரின் 124 வது பிறந்த நாள்…

பூர்வக்குடிகளை வெளியேற்றக்கூடாது-முதலமைச்சரிடம் மனு

ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் சரணாலய விவகாரம் தொடர்பாக…

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 இல் சுய கணக்கெடுப்பு பணிகள்

மக்கள் தொகை கணக்கெடுப்பு…

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கொடியசைத்து…

பெருந்தலைவர் காமராஜர் இருந்திருந்தால் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியிருப்பார்-தமிழிசை சௌந்தர்ராஜன்

பெருந்தலைவர் காமராஜர் இருந்திருந்தால்…

மரியாதைக்குரிய பாரதப்பிரதமர் நரேந்திர மோடி பண…

தூங்கிக் கொண்டிருக்கிறது தவெக அரசு அடிப்படை வசதிகள் குறித்து ஜெயக்குமார் கடும் விமர்சனம்

தூங்கிக் கொண்டிருக்கிறது தவெக…

“பல இடங்களில் அடிப்படைக் கட்டமைப்பு இல்லை..…

1 2 3 33