RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

சீர்காழி – பூம்புகார் சாலையில் ராட்சத பள்ளம்! விபத்து அபாயம் – நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

  1. Home
  2. »
  3. District News
  4. »
  5. அரக்கோணம் கூட்டுறவு துறை அமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்த பிரமுகர்கள் !

சீர்காழி – பூம்புகார் சாலையில் ராட்சத பள்ளம்! விபத்து அபாயம் – நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா, சீர்காழி டு பூம்புகார் சாலை, மணிக்கிராமம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சாலையின் நடுவே பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இரவு நேரத்தில் இப்பகுதியில் போதிய வெளிச்சம் இல்லாததால், இந்த பள்ளத்தால் விபத்து ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது.

மேலும், இந்த சாலையில் தினமும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் அதிகளவில் சென்று வருகின்றனர். இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர், இந்த பள்ளத்தை சற்றும் எதிர்பாராமல் அதில் விழுந்து விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது.

எனவே, எந்தவித அசம்பாவிதமும் நிகழும் முன், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர்:
R.முரளிதரன், மயிலாடுதுறை மாவட்டம்

Recent News

59 வருஷம் காங்கிரஸ் பட்ட அவமானங்களுக்கு விடை

59 வருஷம் காங்கிரஸ்…

சென்னை:59 வருஷமாசு பட்ட அவமானங்களும், பட்ட…

த.வெ.க. அமைச்சரவையில் அ.தி.மு.க.வுக்கு இடம் கிடைக்காதது ஏன்?

த.வெ.க. அமைச்சரவையில் அ.தி.மு.க.வுக்கு…

சென்னை:தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைக்க. அ.தி.மு.க.வில்…

புதிய அமைச்சர்களாக 23 பேர் பதவியேற்பு

புதிய அமைச்சர்களாக 23…

சென்னை:தமிழக அமைச்சர் களாக காங்கிரஸ் கட்சி…

இந்திய பொருளாதார வளர்ச்சியை 6.4% ஆக குறைத்தது ஐ.நா.

இந்திய பொருளாதார வளர்ச்சியை…

புதுடெல்லி:மேற்கு ஆசிய போர் பதற்றத்தால் ஏற்பட்டுள்ள…

1 … 31 32 33