RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

தற்காலிக தொகுப்புதியத்தில் இடைநிலை ஆசிரியர் நியமனம்: நாமக்கல் கலெக்டர்

நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் லி.மது பாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாமக்கல் மாவட்டம், அ.பாலப்பட்டி, அரசு ஆ.தி.ந. தொடக்கப் பள்ளியில் காலியாக உள்ள ஒரு இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கு தொகுப்புதியத்தில் பணி புரிய தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற் கப்படுகிறது.
விண்ணப்ப தாரர்களிட மிருந்து எழுத்து மூலமான விண்ணப்பங்கள் நேரடி யாகவோ / அஞ்சல் மூலமாகவோ உரிய கல்வித்தகுதி சான்று நகல்களுடன் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர், மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், நாமக்கல் மாவட்டம்&637003 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப் பலாம்.
விண்ணப்பங்கள் பெறப் படும் இறுதி நாள்: 15.07.2026 அன்று மாலை 05.00 மணி வரை மட்டும். மாத ஊதியம் ரூ.12000/- மட்டும்.
வரையறுக்கப்பட்ட கல்வி தகுதிகளுடன் ஆசிரியர் தகுதி தேர்வி லும் தேர்ச்சி பெற்ற வர்கள் (ஜிணிஜி றிணீஜீமீக்ஷீ 1) மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான தற் போதைய நடைமுறையிலுள்ள அரசு விதி களில் உள்ளவாறு பின்பற் றப்படும்.
முன்னுரிமை:
இடைநிலை ஆசிரியர் கள் நியமனத்தில் ஆதிதிராவிடர் / பட்டியலினத் தவர்க ளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அரு கில் உள்ளவர்களுக்கு முன் னுரிமை வழங்கப்படும்.
நியமனத்திற்கான நெறிமுறைகள்:
நாமக்கல் மாவட்டம், அ.பாலப்பட்டி, அரசு ஆ.தி.ந. தொடக்கப் பள்ளியில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடம் நிரந்தர ஆசிரியர்களைக் கொண்டு நிரப்பிடும் வரை தகுதிபெற்ற பணி நாடுநர்களைக் கொண்டு பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தற்காலிகமாக நிரப் பிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அவ்வாறு பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தற்காலிகமாக நியமனம் பெறும் பணிநாடுநர்களது பணி முற்றிலும் தற்காலி கமானது.
நிரந்தர ஆசிரியர் களைக் கொண்டு காலிப் பணியிடம் நிரப்பப்படும் நாள் முதல் பள்ளி மேலாண்மைக்குழு மூலம் பணியமர்த்தப்பட்ட தற்காலிக தொகுப்புதிய ஆசிரியர் பணியிலிருந்து விடுவிக்கப்படுவர். மேலும் தகவல்களுக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தை அனுகுமாறு மாவட்ட ஆட்சியர் லி.மதுபாலன் தெரிவித்துள்ளார்.

Recent News

மக்களின் பாதுகாப்பு பிரச்சனைக்க கால்ஷீட் எப்போது? – மு.க.ஸ்டாலின் பரபரப்பு பதிவு

மக்களின் பாதுகாப்பு பிரச்சனைக்க…

சென்னை:தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின்…

கூட்டணி இல்லாமல் திமுகவால் வெல்ல முடியாது: காங்கிரஸ்

கூட்டணி இல்லாமல் திமுகவால்…

தேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, காங்கிரசை…

நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி; தங்கம் விலை சற்று குறைந்தது

நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சி…

சென்னையில் தங்கம் விலை இன்று சற்று…

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 2 நாள் புத்தாக்க பயிற்சி; முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 2…

தமிழகத்தில் நடந்து முடிந்த 17-வது சட்டசபை…

தங்கம் விலை சவரனுக்கு…

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின்…

கருமந்துறை தலக்கரை –…

சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற…

1 17 18 19 20 21 33