RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

திரிணமூல் காங்கிரசில் இருந்து மம்தா நீக்கம்: அதிருப்தி குழுவினர் அறிவிப்பு

கொல்கத்தா:
மேற்கு வங்க மாநில முன்​னாள் முதல்வரும், திரிண​மூல் காங்கிரஸ் கட்​சி​யின் நிறு​வனரு​மான மம்தா பானர்ஜியை கட்​சித் தலை​வர் பதவியி​லிருந்து நீக்​கி​யுள்​ள​தாக ரிதப்​ரதா பானர்ஜி தலை​மையி​லான அதிருப்தி குழு​வினர் அறி​வித்​தனர்.​
கொல்​கத்​தா​வில் உள்ள ஒரு தனி​யார் விடு​தி​யில், ரிதப்​ரதா பானர்ஜி தலை​மை​யில் திரிண​மூல் காங்​கிரஸின் அதிருப்தி எம்.எல்.​ஏக்​கள் மற்​றும் நகராட்சி மாமன்ற உறுப்​பினர்​களின் அவசர ஆலோ​சனைக் கூட்​டம் நடைபெற்றது. இந்​தச் சிறப்​பு கூட்​டத்​தில் கொல்​கத்​தா, பஹரம்​பூர், உத்​தர்​பா​ரா, ஸ்ரீராம்​பூர், டம் டம் உள்​ளிட்ட பல்​வேறு நகராட்​சிகளைச் சேர்ந்த சுமார் 40-க்​கும் மேற்​பட்ட கவுன்​சிலர்​கள் கலந்​து​கொண்​டனர்.
இக்​கூட்​டத்​தின் முடி​வில் அகில இந்​திய திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யின் 10 பேர் கொண்ட புதிய தேசிய செயற்​குழு ஒரு​மன​தாக உரு​வாக்​கப்​பட்​டுள்​ள​தாக கூறப்படுகிறது. இக்கூட்​டத்​தில் ரிதப்​ரதா பானர்​ஜி, சந்​திபன் சஹா மற்றும் கொல்கத்​தா​வின் முன்​னாள் மேயர் ஃபிர்​ஹாத் ஹக்​கீம் உள்​ளிட்ட முக்​கி​யத் தலை​வர்​கள் பங்​கேற்​றனர்.
இக்​கூட்​டத்​தில் எடுக்​கப்​பட்ட தீர்​மானத்​தின்​படி, கட்​சி​யின் தலைவர் பதவியிலிருந்து மம்தா நீக்கப்பட்டுள்ளார். புதிய தலைவ​ராக அருப் ராய் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளார். இக்​குழு​வில் உள்ள மற்ற தலைவர்​களுக்கும் முக்​கியப் பொறுப்பு​கள் வழங்கப்பட்​டுள்​ளன.

Recent News

கர்நாடக முதல்வராக டி.கே. சிவகுமார் ஜூன் 3ல் பதவியேற்பு

கர்நாடக முதல்வராக டி.கே.…

பெங்களூரு: கர்நாடகா முதல்வராக டி.கே.சிவகுமார் ஜூன்…

தாயுமானவர் திட்டத்தின் கீழ்…

அரியலூர்: அரியலூர் மாவட்ட ஆட்சியர் திரு.பொ.இரத்தினசாமி,…

ஓயாமல் பாயும் மேகதாது விவகாரம்

ஓயாமல் பாயும் மேகதாது…

தலையங்கம் மக்கள்கோட்டை 28.05.2026 (2) ஓயாமல்…

அதிமுகவில் பிரிவை ஏற்படுத்த நான் ஒருபோதும் எண்ணியதில்லை லீமா ரோஸ் எம்எல்ஏ விளக்கம்

அதிமுகவில் பிரிவை ஏற்படுத்த…

சென்னை: “அதிமுகவில் பிரிவுகள் ஏற்படுத்த நான்…

அரக்கோணம் கூட்டுறவு துறை அமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்த பிரமுகர்கள் !

அரக்கோணம் கூட்டுறவு துறை…

அரக்கோணம் மே தமிழகத்தில் நடைப்பெற்று முடிவுற்ற…

மத்திய அரசு திட்டங்கள்

மத்திய அரசு திட்டங்கள்

மத்திய அரசு திட்டங்கள் மத்திய அரசு…

1 21 22 23 24 25 33