RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

நாளை திருச்சி செல்கிறார் முதல் அமைச்சர் விஜய்

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக வென்று கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. முதல் அமைச்சர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற விஜய், பெரம்பூரைத் தக்க வைத்துக்கொண்டு திருச்சி கிழக்கு தொகுதியில் தனது பதவியை ராஜிநாமா செய்தார். திருச்சி கிழக்கு தொகுதி மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்க முதல் அமைச்சர் விஜய், வரும் திங்கள்கிழமை அங்கு செல்லவுள்ளதாகத் த க வல்கள் தெரிவிக்கின்றன.

சென் னயில் இருந்து தனி விமானத்தில் திருச்சி கிழக்கு தொகுதி செல்லும் விஜய், அங்குள்ள கல்லூரி மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் 91,381 வாக்குகள் பெற்று 24,416 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தார். இந்த தொகுதியில் விஜய்யை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட இனிகோ இருதயராஜ் 63,965 வாக்குகள் பெற்று இருந்தார்.

அதிமுக சார்பில் போட்டியிட்ட ராஜசேகரன் 19,715 வாக்குகள் மட்டுமே பெற்றார். திருச்சி கிழக்கு தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடை பெற உள்ள நிலையில், விஜய் அங்கு செல்வது ைமுக்கியத்துவம் பெற் றுள்ளது. அண்மையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் 4 பேர் தங்கள் பதவியை ராஜினமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். அந்த வகையில், திருச்சி கிழக்குடன் சேர்த்து பெருந்துறை, தாரா புரம், மதுராந்தகம், அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளையும் சேர்த்து 5 இடங்களுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recent News

தூத்துக்குடி மகளிர் கல்லூரியில் மாணவர் பேரவைத் தேர்தல்

தூத்துக்குடி மகளிர் கல்லூரியில்…

தூத்துக்குடி:தூத்துக்குடி மகளிர் கல்லூரியில் மாணவர் பேரவைத்…

முத்தையாபுரம் ஸ்ரீ முக்கூடல் மாடசாமி திருக்கோவிலில் திருவிளக்கு பூஜை

முத்தையாபுரம் ஸ்ரீ முக்கூடல்…

தூத்துக்குடி:தூத்துக்குடி முத்தையா புரம் ஸ்ரீ முக்கூடல்…

ஆளுநர் ஆய்வுக்கு : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

ஆளுநர் ஆய்வுக்கு :…

‘ஆளுநர் ஆய்வு செய்தார்’ என்ற கூவத்தூர்…

அணுக்கனிம சுரங்க காலநீட்டிப்பு அரசாணையை ரத்து செய்ய வேண்டும்: முதலமைச்சரிடம் சுற்றுலாத்துறை அமைச்சர் செ. ராஜேஷ்குமார் வலியுறுத்தல்.

அணுக்கனிம சுரங்க காலநீட்டிப்பு…

சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம சுரங்க…

செங்கல்பட்டு வேலைவாய்ப்பு

செங்கல்பட்டு வேலைவாய்ப்பு

செங்கல்பட்டு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில்வேலைவாய்ப்பு!

ரூ. 25 லட்சம் கல்விக் கடன் திட்டம்

ரூ. 25 லட்சம்…

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயிலரூ. 25…

1 3 4 5 6 7 33