RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

நீர் தேர்வு குழப்பம்: மாணவர்களை திரட்டி போராட்டம்… தூத்துக்குடி காங்.தலைவர் பேட்டி

  1. Home
  2. »
  3. India News
  4. »
  5. பங்குச் சந்தையில் நஷ்டம்… கடத்தல் நாடகம்… பின்னர் என்ன நடந்தது?

நீர் தேர்வு குழப்பம்: மாணவர்களை திரட்டி போராட்டம்… தூத்துக்குடி காங்.தலைவர் பேட்டி

தூத்துக்குடி:
தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பெருமாள் சாமி கதிர்வேல் செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டியில். மத்திய அரசு நீட் தேர்வில் குழப்பத்தை ஏற்படுத்தி நாட்டில் அச்சத்தை உருவாக் கியுள்ளது. நீட் தேர்வு காரணமாக ஒரு பெண் தற்கொலை செய்துள்ளார்.
மாணவர்களின் உயிர் மற்றும் எதிர்காலத்துடன் விளையாடும் நிலை உருவாகியுள்ளது. நீட் தேர்வுக்காக மத்திய அரசு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கோடி ஒதுக்குவதாக கூறுகிறது. ஆனால் தேர்வு மையங்களுக்கே ரூ.1 லட்சத்து 32 ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது. 22 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதும் நிலையில், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பிரச்சினை கள் தொடர்ந்து நடைபெறு கின்றன.
மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர். இதனை கண்டி த்து மாணவர்களை ஒன்றிணைத்து நாடு முழுவதும் போராட்டம் நடத்த உள்ளோம். இதற்குப் பொறுப்பேற்று மத்திய அரசு பதவி விலக வேண்டும். நீட் தேர்வு தொடர்பான மனஅழுத்தம் மற்றும் பிரச்சினைகளால் 12 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் இதுகுறித்து மத் திய அமைச்சர்கள் உரிய விளக்கம் அளிக்கவில்லை. சட்டசபையில் எங்களால் தான் நீங்கள் ஆட்சி அமைத்தீர்கள் என்று உதயநிதி கூறியதற்கு முதலமைச்சர் விஜய் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
விஜயை வாழும் காமராசர் என்று கூறிய தற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கண் டனம் தெரிவிக்கிறார். ஆனால் திமுக ஆட்சியில் திருச்சி சிவா, முக்தார் உள்ளிட்டோர் காமராஜரை இழிவாக பேசியபோது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
காமராஜர் பிறந்தநாள் வருகிறது. அந்த நாளில் திமுகவினர் மாலை அணிவிக்க வரக்கூடாது. வந்தால் நிச்சயம் எதிர்ப்பு தெரிவிப்போம். நல்லது செய்ய வெட்கப்படுவது திமுகதான் என்று கூறினார்.

Recent News

கரூர் டிஎஸ்பி உட்பட தவெக மீது வழக்கு போட்ட 19 போலீஸ் அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்

கரூர் டிஎஸ்பி உட்பட…

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27…

நீலகிரி கலெக்டருக்கு தவெகவினர் மரியாதை

நீலகிரி கலெக்டருக்கு தவெகவினர்…

நீலகிரி:நீலகிரி மாவட்ட ஆட் சியர் தலைவர்…

உதகையில் நாளை மலைப்பயிர் கண்காட்சி தொடக்கம்

உதகையில் நாளை மலைப்பயிர்…

நீலகிரி:2026 ஆம் ஆண்டின் முதல் காட்சியாக…

உதகையில் 128வது மலர்க்கண்காட்சி கோலாகலம்

உதகையில் 128வது மலர்க்கண்காட்சி…

50,000க்கும் மேற்பட்ட மலர்த் தொட்டிச்செடிகள் காட்சிப்படுத்தல்…

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா வித்யாலயா பள்ளி சாதனை

10 ஆம் வகுப்பு…

உளுந்தூர்பேட்டை:உளுந்தூர்பேட்டை கிழக்கு கந்தசாமி புறத்தில் செயல்பட்டு…

முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு கல்லூரி சேர்க்கையில் சிறப்பு இட ஒதுக்கீடு

முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு…

விண்ணப்பிக்க சேலம் கலெக்டர் அறிவுறுத்தல் சேலம்:சேலம்…

1 26 27 28 29 30 33