RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

பிபா உலகக்கோப்பை: ஹாலண்ட், எம்பாப்பே இரட்டை கோல்; மெஸ்ஸி ஹாட்ரிக்

அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் நடைபெறும் இந்த தொடர் ஹாலண்ட் பங்கேற்கும் முதல் உலகக் கோப்பை தொடர். எம்பாப்பே மூன்றாவது முறையாகவும், மெஸ்ஸி ஆறாவது முறையாகவும் இந்த தொடரில் பங்கேற்கின்றனர். இந்த முறை அதிக கோல் பதிவு செய்யும் வீரர்களில் இந்த மூவரின் பெயரும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு தகுந்த படியே மூவரும் தங்களது முதல் ஆட்டத்தில் விளையாடி உள்ளனர். அதோடு ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் அதிக கோல் பதிவு செய்த வீரர்களில் பட்டியலில் மெஸ்ஸி, எம்பாப்பே என இருவரும் முன்னேறி அசத்தியுள்ளனர்.
குரூப்-ஐ பிரிவில் இடம்பெற்றுள்ள பிரான்ஸ் மற்றும் செனகல் அணிகள் இந்த தொடரில் பலப்பரீட்சை மேற்கொண்டன. 2018-ல் சாம்பியன், 2022-ல் இரண்டாம் இடம் பிடித்த பிரான்ஸ் அணி மீது இந்த முறையும் அதே எதிர்பார்ப்பு. கோப்பை வெல்லும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. மறுபக்கம் ஆப்பிரிக்க கண்டத்தின் செனகல் அணி.
அமெரிக்காவின் ஈஸ்ட் ரூதர்போர்டில் உள்ள நியூயார்க் நியூஜெர்சி மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெற்றது. இந்த மைதானத்தில்தான் இந்த தொடரில் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 (ஜூன் 17) மணிக்கு இந்த ஆட்டம் தொடங்கியது. இரண்டு அணிகளும் சம அளவில் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. முதல் பாதி ஆட்டத்தில் இரண்டு அணிகளும் கோல் பதிவு செய்யவில்லை.
இதில் பிரான்ஸ் அணி 90 நிமிடங்களுக்குள் இரண்டு கோல்களை பதிவு செய்து அசத்தியது. ஸ்டாப்பேஜ் டைமாக கொடுக்கப்பட்ட 10 நிமிடங்களில் செனகல், பிரான்ஸ் என இரண்டு அணிகளும் தலா ஒரு கோல் பதிவு செய்தன. இதில் 90+6வது நிமிடத்தில் எம்பாப்பே பதிவு செய்த கோல் பலரையும் பிரமிக்க செய்துள்ளது. இதே ஆட்டத்தின் 66-வது நிமிடத்தில் அவர் முதல் கோலை பதிவு செய்திருந்தார். இதன் மூலம் சர்வதேச அளவில் பிரான்ஸ் அணிக்காக அதிக கோல்கள் (58), உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் (14) பதிவு செய்த வீரர்களில் மூன்றாம் இடம் உள்ளிட்ட சாதனைகளை எம்பாப்பே படைத்திருந்தார்.
குரூப்–&ஐ பிரிவில் இடம்பெற்றுள்ள நார்வே மற்றும் ஈராக் அணிகள் அமெரிக்காவின் பாஸ்டன் மைதானத்தில் விளையாடின. இந்த உலகக் கோப்பை தொடரின் ‘டார்க் ஹார்ஸ்’ ஆக நார்வே அணி பார்க்கப்படுகிறது. சுமார் 28 ஆண்டுகளுக்கு பிறகு நார்வே அணி உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. இந்த சாதனை குறித்து பிரத்யேக சீரிஸ் ஒன்றும் முன்னணி ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
எர்​லிங் ஹாலண்ட், மார்ட்​டின் ஒடே​கார்ட் ஆகியோர் அணியின் முக்கிய வீரர்களாக மின்னுகின்றனர். இந்த ஆட்டத்தில் 530 பாஸ்களை மேற்கொண்டது நார்வே அணி. அதன் மூலம் ஆறு ஷாட்களை டார்கெட்டில் வைத்தது.

Recent News

வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகங்களில் சேலம் ஆட்சியர் ஆய்வு

வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய…

சேலம்:சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் அலுவலகம்,…

பண்ருட்டி அதிமுக வடக்கு ஒன்றிய அதிமுக ஆலோசனை கூட்டம்

பண்ருட்டி அதிமுக வடக்கு…

கடலூர்:கடலூர் மாவட்டம் பண் குட்டியில், பண்ருட்டி…

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திருப்பத்தூரில் இடதுசாரி கட்சிகள் ஆர்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை…

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரத ஸ்டேட்…

ஆக்கிரமித்துள்ள பொதுவழியை உடனடியாக திறக்க கோரி காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு

ஆக்கிரமித்துள்ள பொதுவழியை உடனடியாக…

திருப்பத்தூரை அடுத்த எலவம்பட்டி ஊராட்சி தம்மன்…

போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் சுற்றித்திரிந்தால் அபராதம்

போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள்…

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு,…

ராமஞ்சேரி பகுதிகளில் இன்று மின் விநியோக நிறுத்தம்

ராமஞ்சேரி பகுதிகளில் இன்று…

திருவள்ளூர்:ராமஞ்சேரி துணை மின் நிலையத்தில் 22.05.2026…

1 27 28 29 30 31 33