RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற ஜூன் 13 ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம்

மயிலாடுதுறை:
உச்சநீதிமன்ற தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் சென்னை உயர் நீதிமன் றத்தின் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு உத்தரவின்படி, மயிலாடுதுறை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் மாவட்ட அமர்வு நீதிபதி டாக்டர்.எல்.எஸ். சத்தியமூர்த்தி, அறி வுறுத் தலின்படி மயி லாடுதுறை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 13.06.2026 அன்று காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை தேசிய மக்கள் நீதி மன்றம் நடைபெற உள்ளது.

இந்த மக்கள் நீதிமன்றத்தில் சிவில் வழக்குகள், குற்றவியல் வழக்குகள், வங்கி வராக்கடன் வழக்குகள் காசோலை மோசடி வழக்குகள், பண மோசடி வழக்குகள், வங்கி சார்ந்த வழக்குகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள். குடும்ப நல வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள் உள்ளிட்ட சமரசம் செய்யக்கூடிய வழக்குகள் எடுத்துக் கொள் ளப்படுகின்றன.

மக்கள் நீதிமன்றத்தில் சமரசம் மூலம் தீர்வு காணப்படும் வழக்குக ளுக்கு மேல்முறையீடு கிடையாது. மேலும் வழக்காடிகளின் நேரமும், செலவும் மிச்சமாகும் என்பதால், பொதுமக்கள் மற்றும் வழக்காடிகள் தங்களது வழக்கறிஞர்கள் மூலம் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்றத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், சீர்காழி சார்பு நீதிமன்ற வளாகம் மற்றும் தரங்கம்பாடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற வளாகங்களிலும் வட்ட சட்டப்பணிகள் குழு மூலம் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறும் என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி மாண்புமிகு டாக்டர். எல்.எஸ்.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Recent News

தூத்துக்குடி மகளிர் கல்லூரியில் மாணவர் பேரவைத் தேர்தல்

தூத்துக்குடி மகளிர் கல்லூரியில்…

தூத்துக்குடி:தூத்துக்குடி மகளிர் கல்லூரியில் மாணவர் பேரவைத்…

முத்தையாபுரம் ஸ்ரீ முக்கூடல் மாடசாமி திருக்கோவிலில் திருவிளக்கு பூஜை

முத்தையாபுரம் ஸ்ரீ முக்கூடல்…

தூத்துக்குடி:தூத்துக்குடி முத்தையா புரம் ஸ்ரீ முக்கூடல்…

ஆளுநர் ஆய்வுக்கு : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

ஆளுநர் ஆய்வுக்கு :…

‘ஆளுநர் ஆய்வு செய்தார்’ என்ற கூவத்தூர்…

அணுக்கனிம சுரங்க காலநீட்டிப்பு அரசாணையை ரத்து செய்ய வேண்டும்: முதலமைச்சரிடம் சுற்றுலாத்துறை அமைச்சர் செ. ராஜேஷ்குமார் வலியுறுத்தல்.

அணுக்கனிம சுரங்க காலநீட்டிப்பு…

சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம சுரங்க…

செங்கல்பட்டு வேலைவாய்ப்பு

செங்கல்பட்டு வேலைவாய்ப்பு

செங்கல்பட்டு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில்வேலைவாய்ப்பு!

ரூ. 25 லட்சம் கல்விக் கடன் திட்டம்

ரூ. 25 லட்சம்…

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயிலரூ. 25…

1 3 4 5 6 7 33