RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

முதல்வர் விஜய்யின் பிறந்தநாள்… அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு இன்று பிறந்தநாள். இந்த நாளில் அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


பிரதமர் மோடி


முதல்-அமைச்சர் விஜய்க்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ”தமிழக முதல்-அமைச்சர் சி.ஜோசப் விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்வு வாழப் பிரார்த்திக்கிறேன்.” என்று அதில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை கூட்டம் இரண்டு நாளைக்கு பிறகு இன்று முதல்வர் விஜய்க்கு சபாநாயகர் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் வாழ்த்து தெரிவித்து பேசியதாவது:-

“முதல்-அமைச்சர் விஜய் 52-வது வயதை பூர்த்தி செய்து 53-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். தூய்மையான ஆட்சிக்கு சொந்தக்காரராக விளங்கும் முதல்-அமைச்சர் விஜய், பல்லாண்டு வாழ்ந்து பல சாதனைகளை புரிய வேண்டும். தலைமைக்கு அழகு முதல்-அமைச்சர் விஜய்தான் என்று மக்கள் நினைக்கிறார்கள். அரசியல் களத்தில் எதிர்கொண்ட சோதனைகளை மக்கள் பலத்தால் வென்று காட்டியவர். தமிழக அரசியலில் புதிய சகாப்தம் படைத்து ஏழையின் சிரிப்பில் இறைவனை காணும் முதல்-அமைச்சர் விஜய், நல்ல உடல்நலத்துடன் நீண்ட காலம் வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.” இவ்வாறு அவர் பேசினார்.

மு.க.ஸ்டாலின்

முன்னாள் முதல் அமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினும் பிறந்த நாள் வாழ்த்து கூறினார். மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், முதல் அமைச்சர் .ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள்!தாங்கள் மகிழ்ச்சியோடும், உடல் – உள நலத்தோடும் பொதுவாழ்வில் பணியாற்றிட விழைகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்-க்கு, எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீண்ட ஆயுள் மற்றும் உடல்நலத்துடன் தாங்கள் பணியாற்றிட வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

முதல்வர், பாசத்திற்குரிய அண்ணன் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.மக்கள் கொடுத்த உயரத்தை அதே மக்களுக்காக உதறிவிட்டு சேவையாற்ற வந்தீர்கள்; “மக்கள்தானே மன்னர்கள்” என்ற மக்களாட்சியின் மகத்துவத்தை அறிவித்தீர்கள்; மக்கள் விரும்பிய முதல்வராக, மக்களில் ஒருவராகத் தேர்தலில் வென்று, மக்களாட்சித் தலைமையை ஏற்றீர்கள்!இப்போது, காலை முதல் இரவு வரை நேரம் காலம் பார்க்காது “மக்கள் ஊழியனாக” அலுவல் பணியை செய்துக்கொண்டிருக்கிறீர்கள். அன்று நாயகனாக உங்களைக் கொண்டாடிய மக்களுக்கு, இன்று ஜனநாயகனாக தன் வாழ்வை ஒப்படைத்து அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகிறீர்கள்.

“மக்களிடம் செல்” என்று கூறி பல சாமானியர்களையும் தலைவர்களாக்கி அழகு பார்த்தார் பேரறிஞர் அண்ணா. “மக்கள் கொடுத்த பொறுப்பை ஒருபோதும் மறக்காதே” என்று கூறி, அரைநூற்றாண்டுக்கு பிறகு எளிய வீட்டுப் பிள்ளைகளின் கைகளில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என மக்கள் பணியை வழங்கி மக்களாட்சியை அலங்கரித்திருக்கிறார் எங்கள் அண்ணன். உங்கள் கொள்கை பாதையிலும், அரசியல் உறுதியிலும், மக்கள் பணியிலும் என்றும் உங்களோடு உடன் பயணிப்போம்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்-க்கு, எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீண்ட ஆயுள் மற்றும் உடல்நலத்துடன் தாங்கள் பணியாற்றிட வாழ்த்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலை

அண்ணாமலை அவர்கள் முதல் அமைச்சர் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது,
தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதலமைச்சர் விஜய் அவர்கள், நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன் தனது மக்கள் பணிகள் தொடர, எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அன்புமணி ராமதாஸ்


பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முதல்-அமைச்சருமான விஜய் அவர்களின் 52-ஆம் பிறந்தநாளில், அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடன் நூறாண்டு வாழ்ந்து, பொதுவாழ்க்கையில் மக்களுக்கு பணியாற்ற வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Recent News

திருக்கழுக்குன்றத்தில் STEM ஆய்வக திறப்பு விழா

திருக்கழுக்குன்றத்தில் STEM ஆய்வக…

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அரசு மகளிர்…

லாக்கப் மரணத்திற்கு முதல்வர் விஜய் மௌனம் காக்கிறார்-திமுக முன்னாள் அமைச்சர் கீதாஜீவன்  குற்றச்சாட்டு

லாக்கப் மரணத்திற்கு முதல்வர்…

காமராஜரின் 124 வது பிறந்த நாள்…

பூர்வக்குடிகளை வெளியேற்றக்கூடாது-முதலமைச்சரிடம் மனு

ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் சரணாலய விவகாரம் தொடர்பாக…

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 இல் சுய கணக்கெடுப்பு பணிகள்

மக்கள் தொகை கணக்கெடுப்பு…

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கொடியசைத்து…

பெருந்தலைவர் காமராஜர் இருந்திருந்தால் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியிருப்பார்-தமிழிசை சௌந்தர்ராஜன்

பெருந்தலைவர் காமராஜர் இருந்திருந்தால்…

மரியாதைக்குரிய பாரதப்பிரதமர் நரேந்திர மோடி பண…

தூங்கிக் கொண்டிருக்கிறது தவெக அரசு அடிப்படை வசதிகள் குறித்து ஜெயக்குமார் கடும் விமர்சனம்

தூங்கிக் கொண்டிருக்கிறது தவெக…

“பல இடங்களில் அடிப்படைக் கட்டமைப்பு இல்லை..…

1 2 3 33