RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

லாக்கப் மரணத்திற்கு முதல்வர் விஜய் மௌனம் காக்கிறார்-திமுக முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் குற்றச்சாட்டு

  1. Home
  2. »
  3. District News
  4. »
  5. திருப்பத்தூரில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி-உறுதிமொழி

லாக்கப் மரணத்திற்கு முதல்வர் விஜய் மௌனம் காக்கிறார்-திமுக முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் குற்றச்சாட்டு

காமராஜரின் 124 வது பிறந்த நாள் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாநகரில் உள்ள வஉசி மார்க்கெட் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு முன்னாள் அமைச்சரும், திமுக வடக்கு மாவட்ட செயலாளருமான கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து கீதா ஜீவன் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, தமிழகத்தில் லாக்கப் மரணம் மட்டும் அல்ல, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சனை நடக்கிறது. முதியோர்,  பெண்கள் நகைக்காக கொலை செய்யப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் கஞ்சா பிற போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. தினமும் குற்றவாளிகள் கைது செய்யப்படுகிறார்கள். நான்கு லாக்கப் மரணம் நடந்து இருக்கிறது. 

முன்னாள் முதல்வர் ஸ்டாலின் இருக்கும்போது ஒரு லாக்கப் மரணத்திற்கே தற்போதைய முதல்வர் விஜய் வாய் கிழிய பேசினார். ஆனால் தற்போது மௌனம் காக்கிறார். தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.. மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கை இல்லை. பெண்களுக்கு, குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. 

மேகதாது அணை கட்டுவது தொடர்பான செய்தியாளர்கள் கேள்விக்கு?

அப்போது நல்ல மழை பொழிந்தது.. தண்ணீர் பிரச்னை இல்லாமல் இருந்தது. விவசாயம் அமோக விளைச்சல் இருந்தது என்பது தான் உண்மை. ஆனால் இந்த ஆண்டு காவிரியில் தண்ணீர் திறக்கப்படவில்லை. விவசாயிகள் சோர்ந்து போயிருக்கிறார்கள்.ஆனால் ஆளுங்கட்சியினர் திமுக தான் தூண்டி விடுவதாக கூறுகிறார்கள். பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை, ஆனால் தளபதி ஸ்டாலின் தள்ளுபடி செய்தார். தண்ணீரும் வழங்கவில்லை. மேகதாது அணை கட்டுவதற்கு தடை சொல்வதற்கோ மேலும், அங்கு ஆளுகின்ற காங்கிரஸ் மீது நடவடிக்கை எடுக்கவோ, விவசாயிகள் பிரச்சனைக்கோ நடவடிக்கை எடுக்கவில்லை. கண்டும் காணாதவராக கேட்டும் கேட்காதவராக முதல்வர் விஜய் இருக்கிறார் என்றார்.

Recent News

வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகங்களில் சேலம் ஆட்சியர் ஆய்வு

வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய…

சேலம்:சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் அலுவலகம்,…

பண்ருட்டி அதிமுக வடக்கு ஒன்றிய அதிமுக ஆலோசனை கூட்டம்

பண்ருட்டி அதிமுக வடக்கு…

கடலூர்:கடலூர் மாவட்டம் பண் குட்டியில், பண்ருட்டி…

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திருப்பத்தூரில் இடதுசாரி கட்சிகள் ஆர்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை…

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரத ஸ்டேட்…

ஆக்கிரமித்துள்ள பொதுவழியை உடனடியாக திறக்க கோரி காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு

ஆக்கிரமித்துள்ள பொதுவழியை உடனடியாக…

திருப்பத்தூரை அடுத்த எலவம்பட்டி ஊராட்சி தம்மன்…

போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் சுற்றித்திரிந்தால் அபராதம்

போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள்…

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு,…

ராமஞ்சேரி பகுதிகளில் இன்று மின் விநியோக நிறுத்தம்

ராமஞ்சேரி பகுதிகளில் இன்று…

திருவள்ளூர்:ராமஞ்சேரி துணை மின் நிலையத்தில் 22.05.2026…

1 27 28 29 30 31 33