RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

  1. Home
  2. »
  3. Political News
  4. »
  5. கோட்டூர்புரத்தில் போராடியவர்களை கைது செய்தது தவெக அரசின் சர்வாதிகாரப் போக்கு டிடிவி தினகரன்…

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

சேலம் மாவட்ட ஆட்சியர் தகவல்

சேலம்:
சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பில், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் அனைத்துவகை மாற்றுத்திறனாளி இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங் கும் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் தற் போது சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டும் மையத்தில் பெறப்படுகின்றன.

பத்தாம் வகுப்பு (தோல்வி), பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கும் மேலான கல்வித்தகுதிகளை பெற்றவர்கள் வேலை வாய்ப்பு அலுவலசுத்தில் பதிவு செய்து, பதிவினை தொடர்ந்து புதுப்பித்து. ஐந்தாண்டுகள் நிறை வடைந்த பின்னர் வேலை வாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கும், வேலைவாய்ப்பு அலுவ லகத்தில் பதிவு செய்து ஓர் ஆண்டு நிறைவடைந்த மாற்றுத்திறனாளி இளை ஞர்களுக்கும் தமிழ்நாடு அரசால் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மேலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி யின மனுதாரர்கள் 45 வயதிற்குள்ளும். இதர இனத்தைச் சார்ந்தவர்கள் 40 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும். மாதமொன்றுக்கு பத்தாம் வகுப்பு தோல்விக்கு ரூ.200. பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்கு ரூ.300. மேல் நிலைக்கல்வி தேர்ச்சிக்கு ரூ.400. பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ.600 வீதம் காலாண்டிற்கு ணடிற்கு ஒரு முறை பயனாளிகளின் வங் கிக்கணக்கில் நேரடியாகசெலுத்தப்படும். மாற்றுத்திறனாளி பய னாளிகளுக்கு பத்தாம் வகுப்பு தோல்வி மற்றும் தேர்ச்சிக்கு ரூ.600 மேல் நிலைக்கல்வி தேர்ச்சிக்கு ரூ.750 மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ.100 வீதம் மாதந்தோறும் வங்கிக்கணக்கில் நேரடி யாக செலுத்தப்படும்.
பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற தொழிற் பட்டப்படிப்புகள் படித்த வர்கள் மற்றும் அரசின் பிறதுறை சார்ந்த நலத் திட்டங்களின் கீழ் உத வித்தொகை பெற்று வரும் பயனாளிகள் ஆகி யோருக்கு வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கப் படமாட்டாது. உதவித்தொகை விண் ணப்ப படிவம் பெற விரும்பும் மனுதாரர்கள், தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டை யினை ஆதாரமாக காண்பித்து, சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் விண்ணப்பங்களை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் அல்லது www.tnvelaivaaippu. gov.in http://www.tnve-laivaaippu.gov.in இணையதள முகவரியில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே பயன் பெற்றவர்கள் மீள விண்ணப்பிக்கத் தகுதி யற்றவர்களாவார்கள்.
மே 2026 முதல் ஜூன் 2026 வரையி லான காலாண்டிற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண் ணப்பங்களை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடை யாள அட்டை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தகத்துடன் நேரில் வந்து விண்ணப்பித்துப் பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

Recent News

அஇஅதிமுக அவசர ஆலோசனை கூட்டம்

அஇஅதிமுக அவசர ஆலோசனை…

திருப்பத்தூர்: திருப்பத்தூர் நகரக கழகத்தின் சார்பாக…

கோட்டூர்புரத்தில் போராடியவர்களை கைது செய்தது தவெக அரசின் சர்வாதிகாரப் போக்கு டிடிவி தினகரன் கண்டனம்

கோட்டூர்புரத்தில் போராடியவர்களை கைது…

சென்னை: ‘கோட்டூர்புரத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு…

கேரளாவில் பறிமுதல் செய்யப்பட்ட வெடிப்பொருள் வழக்கு: திருச்சி, விருதுநகரில் என்ஐஏ சோதனை

கேரளாவில் பறிமுதல் செய்யப்பட்ட…

திருச்சி: கேரள மாநிலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட…

காஞ்சிபுரம் அதிமுக மாவட்ட துணைச் செயலாளர் சிவராஜ் தவெகாவில் இணைந்தார்

காஞ்சிபுரம் அதிமுக மாவட்ட…

காஞ்சிபுரம்: சென்னை தலைமை தலைமை செயலகத்தில்…

அரக்கோணத்தில் தருமர் பட்டாபிஷேக விழா

அரக்கோணத்தில் தருமர் பட்டாபிஷேக…

அரக்கோணம்; ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகரில்…

பேசும் மருத்துவம் | பாரம்பரிய மருத்துவம்

பேசும் மருத்துவம் |…

ஏப்பம் அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை…

1 2 3 12