RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

ஹூண்​டாய் மொபிஸ் சமூக பொறுப்​புணர்வு திட்​டத்​தின் கீழ் ரூ.70 லட்​சம் நிதி வழங்​கி​யது

  1. Home
  2. »
  3. District News
  4. »
  5. திருப்பத்தூரில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி-உறுதிமொழி

ஹூண்​டாய் மொபிஸ் சமூக பொறுப்​புணர்வு திட்​டத்​தின் கீழ் ரூ.70 லட்​சம் நிதி வழங்​கி​யது

சென்னை: ஹூண்டாய் நிறு​வனத்​தின் சமூக பொறுப்​புணர்வு திட்​டத்​தின் கீழ் ரூ.70 லட்​சம் செல​வில் 18 அரசு பள்​ளி​களுக்கு 900 இருக்​கைகள் வழங்​கப்​பட்​டன.

ஹூண்​டாய் மொபிஸ் சிஎஸ்​ஆர் எனப்​படும் பெருநிறுவன சமூக பொறுப்​புணர்வு திட்​டத்​தின் கீழ் சென்னை மாவட்​டத்​தில் மாணவர்​களின் பயன்​பாட்​டுக்​காக 18 அரசுப் பள்​ளி​களுக்கு ரூ.70 லட்​சம் செல​வில் 900 இருக்​கைகளை (Bench Desk) வழங்க முன்​வந்​தது.

அரசுப் பள்​ளி​களுக்கு இருக்​கைகள் வழங்​கும் நிகழ்ச்சி எழும்​பூர் பிரசிடென்சி மகளிர் மேல்​நிலைப் பள்​ளி​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் பொதுப்​பணி மற்​றும் விளை​யாட்டு மேம்​பாட்​டுத் துறை அமைச்​சர் ஆதவ் அர்​ஜு​னா, பள்​ளிக்​கல்வி அமைச்​சர் ராஜ்மோகன் ஆகியோர் கலந்​து​கொண்டு 18 அரசுப் பள்​ளி​களுக்கு இருக்​கைகளை வழங்​கினர். பள்​ளி​களின் தலைமை ஆசிரியர்​கள் அவற்றை பெற்​றுக்​கொண்​டனர்.

அமைச்​சர் ஆதவ் அர்​ஜுனாபேசுகை​யில், “அடுத்த 10 ஆண்​டுக்​குள் அரசுப் பள்​ளி​களை நாட்​டின் தலைசிறந்த பள்​ளி​களாக உரு​வாக்கு​வோம். பள்​ளி​களில் பிற பாடங்​களைப் போன்று உடற்​கல்விக்​கும் முக்​கி​யத்​து​வம் அளிக்க வேண்​டும்.உடற்​கல்விக்கு வாரம் இரு பாட​வேளை​கள் மட்​டும் இருப்​பது போதாது. பிற பாடங்​களைப் போன்று உடற்​கல்விக்​கும் தின​மும் வகுப்​பு​கள் நடை​பெற வேண்​டும்” என்​றார் அமைச்​சர் ராஜ்மோகன் பேசும்​போது, “மாணவர்​களுக்​குத் தேவை​யான அனைத்து விஷ​யங்​களை​யும் தவெக அரசு செய்​யும்.அதற்கு பதிலாக, மாணவர்​கள் தங்​கள் தன்​னம்​பிக்​கை, தமிழ் ஆர்​வம், தலை​மைத்​து​வப் பண்பு ஆகிய​வற்றை வளர்த்​துக் கொள்ள வேண்​டும்” என்றார்.இந்​நிகழ்ச்​சி​யில், மாவட்ட ஆட்​சி​யர் மாலதி ஹெலன், பள்​ளிக் கல்வி இயக்​குநர் எஸ்​.கண்​ணப்​பன், தொடக்​கக் கல்வி இயக்​குநர் பி.ஏ.நரேஷ், ஹூண்​டாய் மொபிஸ் நிறு​வனப் பொது​மேலா​ளர் ஹூமின் ஹோ, ஆசிரியர்​கள்​, மாணவர்​கள்​ கலந்​து​கொண்​டனர்​.

Recent News

தமிழக நதிகளை இணைப்பதில் அரசு உறுதி: ஆளுனர்

தமிழக நதிகளை இணைப்பதில்…

தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று…

2036க்குள் தமிழகத்தில் 1.5 லட்சம் டிரில்லியன் டாலர் பொருளாதாரம்: ஆளுனர்

2036க்குள் தமிழகத்தில் 1.5…

தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று…

போதைபொருள் பழக்கத்தை தடுக்க முந்தைய அரசு தவறிவிட்டது: ஆளுனர்

போதைபொருள் பழக்கத்தை தடுக்க…

தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று…

தவெக அரசு குறைவாக கடன் வாங்கினால் பதவி விலக தயார்; தங்கம் தென்னரசு சவால்

தவெக அரசு குறைவாக…

தமிழ்நாடு அரசின் வெள்ளை அறிக்கை குறித்து…

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் “சத்தியவான் சாவித்திரி” படத்தின் ரிலீஸ் தேதி

கீர்த்தி சுரேஷ் நடிக்கும்…

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை கீர்த்தி…

அரசு உதவி பெறும் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலா? அரசு பதிலளிக்க கோர்ட் உத்தரவு

அரசு உதவி பெறும்…

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த மைக்கேல்…

1 15 16 17 18 19 33