RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிவகங்கை மாவட்டம் சாதனை

சிவகங்கை:
சிவகங்கை மாவட்டத் தில் கடந்த 202526 ஆம் கல்வியாண்டிற்கான பத் தாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஒட்டுமொத்தமாக 17868 மாணாக்கர்கள் தேர்வு எழுதினர். இதில் 17429 மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்று 97.54% விழுக் காட்டுடன் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை பெற்றுள்ளது. தேர்வு எழுதியவர்களில் மாணவர்கள் 96.42% சதவீதமும். மாணவிகள் 98.64% சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
0.03% விழுக்காடு வித்தியாசத்தில் முதல் இடத்தை புதுக்கோட்டை மாவட்டம் பெற்றுள்ளது. அரசுப்பள்ளிகள் பீரி வில் தேர்வு எழுதிய 7869 மாணவர்களில் 7666 மாணவர்கள் தேர்ச்சி பெற்று 97.42% விழுக்காட்டுடன் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. மாவட்டத்தில் உள்ள 282 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 155 பள்ளிகள் 100% சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிவகங்கை மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பிடித்திருந்தது. பொதுத் தேர்வு முடிவுகளில் எப் போதுமே சிவகங்கை மாவட்டமானது முதல் 6 இடங்களுக்குள் இடம் பெற்றிருக்கும். சிவகங்கை மாவட்டம் மாநில அளவில் ஒட்டுமொத்த பள்ளிகள் பிரிவில் இரண்டாம் இடமும். அரசுப்பள்ளிகள் பிரிவில் முதலிடம் பெறவும் பல்வேறு வழி காட்டுதல்களையும் அறி வுரைகளையும் வழங்கிய மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் அனை த்து மாவட்டக்கல்வி அலுவலர்கள் அதற்கு உறுதுணையாய் இருந்த அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆரசிரியர்கள், பாட ஆசிரியர்கள், அலுவலர்கள், அலுவலகப் பணியாளர்கள், விடுதி களில் தங்கி பயின்ற மாணவர்களுக்கு உறு துணையாய் இருந்த விடுதிக்காப்பாளர்கள், மாணவச் செல்வங்கள், மாணவர்களின் பெற் றோர் சுள் அனைவருக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் தேர்வில் தேர்ச்சி பெறத் தவறிய மாணவர்கள் துணைத் தேர்விற்கு விண்ணப்பித்து அவர்களும் தேர்ச்சி பெறுவதற்கான வாழ்த்துக்களையும் இத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி தெரிவித்துள்ளார்.

Recent News

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும்…

அமைச்சர் நிர்மல் குமார் உறுதி சென்னை:“தமிழகத்தில்…

மயிலாடுதுறையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் அனுசரிப்பு

மயிலாடுதுறையில் முன்னாள் பிரதமர்…

மயிலாடுதுறை:முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி…

வடகரை ஐ.டி.ஐ.யில் தொழிற் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

வடகரை ஐ.டி.ஐ.யில் தொழிற்…

திருவள்ளூர் கலெக்டர் தகவல் திருவள்ளூர்:திருவள்ளூர்மாவட்ட ஆட்சித்…

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு…

சேலம் மாவட்ட ஆட்சியர் தகவல் சேலம்:சேலம்…

எல்நினோ நிகழ்வில் இருந்து வேளாண் பயிர்களை பாதுகாப்பது எப்படி?

எல்நினோ நிகழ்வில் இருந்து…

சிவகங்கை மாவட்டம் எல்நினோ நிகழ்வினால், காலநிலையில்…

AI துறையில் மிகப்பெரிய தவறு செய்யும் இந்தியா!

AI துறையில் மிகப்பெரிய…

சென்னை:ஐடி ஊழியர்களை, இந்திய தக்காளி விவசாயி…

1 9 10 11 12