RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

59 வருஷம் காங்கிரஸ் பட்ட அவமானங்களுக்கு விடை

சென்னை:
59 வருஷமாசு பட்ட அவமானங்களும், பட்ட சிரமங்களுக்கும், ஏமாற்றங்களுக்கும் இன்று விடை கிடைத்திருக்கிறது. அதிமுகவும் ஆட்சி அமைத் திருக்கிறது. திமுகவும் ஆட்சி அமைத்திருக்கிறது. ரெண்டு பேரும் காங்கிரஸ் கட்சி பலத்தால் பல வெற்றிகளை பெற்றுள்ளார்கள்.
விஜய் இந்த மாடலை மாற்றியிருக்கிறார். கூட் டணி என்பது வெறும் எண்ணிக்கையை மட்டுமில்லை ஆட்சி அதிகாரத்திலும் பங்கு என்பதை நிரூபித்து இருக்கிறார் என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார் தமிழகத்தில் அமைந் துள்ள தவெசு ஆட்சியில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப் பட்டுள்ளது. ஏற்கனவே விஜய்யுடன் சேர்த்து 9 பேர் அமைச்சர்களாக பொறுப் பேற்றுக்கொண்டுள்ள நிலையில் இன்று மேலும் 23 பேர் அமைச்சர் களாக பொறுப் பேற்றுக் கொண்டனர். ஆளுநர் அர்லேகர் அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
விஜய்யின் இந்த அமைச்சரவையில் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கப் பட்டுள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜேஷ்குமார் மற்றும் விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி வழங் கப்பட்டுள்ளது காங்கிரசார் மத்தியில் உற்சாகத்தினை ஏற்படுத்தி உள்ளது. இது மன நிறைவை தருவ தாக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தெரி வித்துள்ளார். அவர் கூறியதாவது:
சரியாக 59 ஆண்டு களுக்கு பிறகு கதர் சட்டை அணிந்த 2 சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாக பதவி ஏற்று இருப்பது மன நிறைவை தருகிறது. பொறுப்புணர்ச்சியுடன் ஒரு நேர்மையான அமைச்சர்களாக இருப் பார்கள். மக்களுடைய பிரச்சினைகளை தீர்ப் பார்கள். இதுவரை மக்களின் பிரச்சினைகளை சட்டமன்றத்தில் எழுப்புகின்ற நிலையில் இருந்த
சட்டமன்ற மன்ற உறுப்பினர்கள்இப்போது மக்கள் பிரச்சினைகளை தீர்க்கும் இடத்திற்கு வந்து இருக்கிறோம். மிக முக்கியமான உயர்வு.. எப்போதோ வந்திருக்க வேண்டியது. 20 வருஷம் கழித்து வந்து இருக்கிறது. மன நிறைவாக இருக்கிறது. 59 வருஷம் கழித்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களாக பதவி ஏற்பது மனதுக்கு நிறை வாக இருக்கிறது. அதிமுகவும் ஆட்சி அமைத்து இருக்கிறது. திமுகவும் ஆட்சி அமைத்து இருக்கிறது.

இரண்டு கட்சிகளும் கடந்த 59 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் பலத்தால் பல வெற்றிகளை பெற்றுள்ளார்கள். விஜய் இந்த மாடலை மாற்றியிருக்கிறார். இது வரைக்கும் இருந்த மாடல் மாற்றப்பட்டு இருக்கிறது. கூட்டணி என்பது வெறும் எண்ணிக்கையை வாங்கிக் கொள்வது மட்டுமில்லை.. ஆட்சி அதிகாரத்திலும் பங்கு என்பதை நிரூபித்து இருக்கிறார் எங்களை பொறுத்த வரை வீசிசு மற்றும் ஐயுஎம் எல்லையும் அமைச்சரவையில் இணைக்க வேண்டும். அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும் என்பது தான் உண்னமயான ஜனநாயகத்தின் பங்கு. அது நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இப்போது தான் அதிகாரத்திற்கு வந்து இருக்கிறோம். இவ்வளவு நாட்களாக கோரிக்கை வைக்கும் இடத்தில் இருந்தோம். 59 வருஷமாக பட்ட அவமானங்களுக்கும். பட்ட சிரமங்களுக்கும், ஏமாற்றங்களுக்கும் இன்று விடை கிடைத்திருக்கிறது. அதிகாரம் என்பது மக்களின் பிரச்சினையை தீர்க்கும் வகையில் இருக்கும். காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் எழுச்சியோடு இருக்கி றார்கள். நேர்மையான அமைச்சர்களாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்.
சாமானிய மக்களின் குறைகளை தீர்க்கும் அமைச்சர்களாக இருப்பார்கள். சாமா னிய மக்களின் பிரச்சி னைகளை தீர்க்கக் கூடிய அமைச்சர்களாக இருப் பார்கள்” இவ்வாறு அவர் கூறினார்.

Recent News

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும்…

அமைச்சர் நிர்மல் குமார் உறுதி சென்னை:“தமிழகத்தில்…

மயிலாடுதுறையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் அனுசரிப்பு

மயிலாடுதுறையில் முன்னாள் பிரதமர்…

மயிலாடுதுறை:முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி…

வடகரை ஐ.டி.ஐ.யில் தொழிற் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

வடகரை ஐ.டி.ஐ.யில் தொழிற்…

திருவள்ளூர் கலெக்டர் தகவல் திருவள்ளூர்:திருவள்ளூர்மாவட்ட ஆட்சித்…

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு…

சேலம் மாவட்ட ஆட்சியர் தகவல் சேலம்:சேலம்…

எல்நினோ நிகழ்வில் இருந்து வேளாண் பயிர்களை பாதுகாப்பது எப்படி?

எல்நினோ நிகழ்வில் இருந்து…

சிவகங்கை மாவட்டம் எல்நினோ நிகழ்வினால், காலநிலையில்…

AI துறையில் மிகப்பெரிய தவறு செய்யும் இந்தியா!

AI துறையில் மிகப்பெரிய…

சென்னை:ஐடி ஊழியர்களை, இந்திய தக்காளி விவசாயி…

1 9 10 11 12