RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

டீசல் விலை உயர்வால் சரக்கு கட்டணங்கள் 4% உயர்வு

புதுடெல்லி:
டீசல் விலை உயர்வு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மே 20 முதல் அமலுக்கு வரும் வகையில் சரக்குக் கட்டணங்களை உயர்த்த போக்குவரத்துத் துறை சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். இந்த நடவடிக்கையால் விலைவாசி மேலும் உயரும் என நிலை ஏற்பட் டுள்ளது.
இந்த சரக்கு கட்டண உயர்வு அகில இந்திய போக்குவரத்துத் துறையினர் நலச் சங்கம் (AITWA) சார்பில் வியாழ க்கிழமையன்று (மே 21) அறிவிக்கப்பட்டன.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக டீசல் விலை நிலையாகவே இருந்து வந்தன. இதனால் சரக் குக் கட்டணங்களை பெரிய அளவில் உயர்த் தவில்லை. தற்போது அமலுக்கு வந்த டீசல் விலையின் கடும் உயர்வு காரணமாக கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது’ என அந்த சங்கத்தின் அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
டீசல் விலை உயர்வைச் சமாளிக்கும் வகையில், போக்குவரத்துத் துறை யினர் எரிபொருள் சரி செய்தல் காரணி (FAF) எனப்படும் ஒரு புதிய கணக்கீட்டு முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
போக்குவரத்து துறை யின் செலவுகளில் 65% பங்கினை மசலின் விலை நிர்ணயிக்கிறது. எனவே டீசல் விலைக்கான செலவை ஈடுகட்டும் வகை யில், சரக்கு கட்டணங்களை உயர்த்த இந்த கணக்கீட்டு முறை உதவும் என போக் குவரத்து துறையினர் தெரிவிக்கின்றனர்.
மேலும். போக்குவ ரத்துத் துறையினர் தங்கள் வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு உதவும் வகையில், இந்த புதிய வழிமுறையை ஏற்றுக்கொண்டு கூடு தல் கட்டணத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வாடிக்கையாளர்களுக்கு அகில இந்திய போக்கு வரத்துத் துறையினர் நலச் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதேபோல, பல இடங்களில் டீசல் பற்றாக்குறையால் லாரிகள் ஆங்காங்கே சிக்கிக்கொள்வதால், சரக்குகள் வந்து சேர்வதில் ஏற்படும் தாமதத்துக்கு எவ்வித அபராதமும் விதிக்க வேண்டாம் என்றும் போக்குவரத்து துறையினர் வாடிக்கையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
சரக்கு கட்டணம் 4% உயர்த்தப்படுவதால். நாடு முழுவதும் பல்வேறு பொருட்களின் விலைவாசி உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், சரக்கு கட்டண உயர்வால் அத்தியாவசியப் பொருட் களின் விலை உயர்வையும் எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

Recent News

அஇஅதிமுக அவசர ஆலோசனை கூட்டம்

அஇஅதிமுக அவசர ஆலோசனை…

திருப்பத்தூர்: திருப்பத்தூர் நகரக கழகத்தின் சார்பாக…

கோட்டூர்புரத்தில் போராடியவர்களை கைது செய்தது தவெக அரசின் சர்வாதிகாரப் போக்கு டிடிவி தினகரன் கண்டனம்

கோட்டூர்புரத்தில் போராடியவர்களை கைது…

சென்னை: ‘கோட்டூர்புரத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு…

கேரளாவில் பறிமுதல் செய்யப்பட்ட வெடிப்பொருள் வழக்கு: திருச்சி, விருதுநகரில் என்ஐஏ சோதனை

கேரளாவில் பறிமுதல் செய்யப்பட்ட…

திருச்சி: கேரள மாநிலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட…

காஞ்சிபுரம் அதிமுக மாவட்ட துணைச் செயலாளர் சிவராஜ் தவெகாவில் இணைந்தார்

காஞ்சிபுரம் அதிமுக மாவட்ட…

காஞ்சிபுரம்: சென்னை தலைமை தலைமை செயலகத்தில்…

அரக்கோணத்தில் தருமர் பட்டாபிஷேக விழா

அரக்கோணத்தில் தருமர் பட்டாபிஷேக…

அரக்கோணம்; ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகரில்…

பேசும் மருத்துவம் | பாரம்பரிய மருத்துவம்

பேசும் மருத்துவம் |…

ஏப்பம் அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை…

1 2 3 12