RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் முதல் வெற்றியை ருசித்த எகிப்து

வான்கோவர்:
வான்கோவரில் நடைபெற்ற ஃபிபா உலகக் கோப்பை பிரிவு-ஜி போட்டியில் நியூஸிலாந்து அணியை 3&-1 என்ற கோல்கள் கணக்கில் நொறுக்கிய எகிப்து உலகக் கோப்பையில் தங்கள் முதல் வெற்றியை ஈட்டியது. இது மூலம் ஒரு வெற்றி, ஒரு டிராவுடன் 4 புள்ளிகள் பெற்று ‘ஜி’ பிரிவில் ஈரான், பெல்ஜியத்தைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தது. 1934, 1990 மற்றும் 2018 உலகக் கோப்பை தொடர்களில் வெற்றி பெற முடியாமல் இருந்த எகிப்துக்கு இது முதல் உலகக் கோப்பை வெற்றியாக அமைந்தது. இது எகிப்து ரசிகர்களுக்கு கொண்டாட்ட விருந்தாக அமைந்தது.
ஆட்டத்தின் 15-வது நிமிடத்தில் நியூஸிலாந்தின் சர்மான் முதல் கோலை அடித்து முன்னிலை அளித்தார். ஆனால், அதன் பிறகு இடைவேளையைத் தாண்டி புதிய ஆக்ரோஷத்தைக் காட்டிய எகிப்து அணி 3 கோல்களைத் திணித்தது. 58-வது நிமிடத்தில் எகிப்தின் முஸ்தபா ஜீகோ முதல் கோலை அடித்து நியூஸிலாந்தை சமன் செய்தார்.
ஆனால், அதன் பிறகான ஓர் ஆக்ரோஷ உந்துதலில் எகிப்து தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தைத் தொடுக்க நியூஸிலாந்தினால் ஒன்றும் செய்ய முடியவில்லை. முகமது சாலா 67-வது நிமிடத்திலும் ட்ரெசெகெட் 82-வது நிமிடத்திலும் கோல்களை அடித்தனர். ஜீகோ இன்னொரு கோலையும் அடித்திருந்தால் அது எகிப்துக்கு 4 கோல்களாக ஆகியிருக்கும்.
போட்டியின் முதல் பாதியில் எகிப்தின் ஆட்டம் மந்தமாகவே காணப்பட்டது. நியூஸிலாந்து வீரர் ஃபின் சுர்மான் சக்திவாய்ந்த ‘ஹெடர்’ மூலம் கோல் அடித்து நியூசிலாந்தை முன்னிலைக்கு கொண்டு சென்றார். முதல் பாதியில் முகமது சாலாவின் குறிப்பிடத்தக்க முயற்சி பெனால்டி பகுதி எல்லையிலிருந்து எடுத்த ஃப்ரீ-கிக் மட்டுமே; ஆனால் அந்த வாய்ப்பு கோலாகத் தகையவில்லை. இலக்கைத் தவறவிட்டது.
இடைவேளைக்கு பிறகு 59-வது நிமிடத்தில், நியூஸிலாந்தின் முதல் கோலைப் போன்றே ஒரு கார்னர் வாய்ப்பில் எவராலும் கவனிக்கப்படாமல் இருந்த முஸ்தபா ஜீகோ, முகமது ஹானி வழங்கிய துல்லியமான கிராஸை ஹெடர் மூலம் கோலாக மாற்றி ஆட்டத்தை சமன் செய்தார்.
சமநிலை கோலுக்குப் பத்து நிமிடங்களுக்குள், வேகமான எதிர்தாக்குதலில் சாலா தனது முத்திரையை பதித்தார். ஜீகோவுடன் பாஸ் பரிமாற்றம் செய்த அவர், தனது வழக்கமான பாணியில் பந்தை வலைக்குள் செலுத்தி எகிப்தை முதல் முறையாக முன்னிலைக்கு கொண்டு சென்றார்.
அதோடு நிற்காமல், 82-வது நிமிடத்தில் இடதுபுறத்தில் இருந்து சாலா எடுத்த ஃப்ரீ கிக்கை மாற்று வீரர் டிரெசெகெட் அபாரமான டைவிங் ஹெடர் மூலம் கோலாக்கினார். அந்த கோல் எகிப்தின் வெற்றியை உறுதி செய்ததுடன், நாக்-அவுட் சுற்றுக்கான கதவையும் அவர்களுக்கு அகலமாகத் திறந்தது.
பல ஆண்டுகளாக உலகக் கோப்பை வெற்றிக்காக காத்திருந்த எகிப்து ரசிகர்களுக்கு, வான்கூவரில் கிடைத்த இந்த வெற்றி மறக்க முடியாத வரலாற்று தருணமாக அமைந்தது.

Recent News

நீட் வினாத்தாள் கசிவு; ‘தேர்வு முகமையின் நபர்களுக்கு பதிலாக’… டெலிகிராம் உரிமையாளர் பாவெல் காட்டம்

நீட் வினாத்தாள் கசிவு;…

நியூயார்க்இளநிலை மருத்துவ படிப்புகளில் மாணவ மாணவிகள்…

பிபா உலகக்கோப்பை: ஹாலண்ட், எம்பாப்பே இரட்டை கோல்; மெஸ்ஸி ஹாட்ரிக்

பிபா உலகக்கோப்பை: ஹாலண்ட்,…

அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் நடைபெறும் இந்த…

தமிழக சட்டசபை நாளை கூடுகிறது… – கவர்னர் உரையாற்றுகிறார்

தமிழக சட்டசபை நாளை…

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 23-ந்…

பாலியல் வன்கொடுமை… மதமாற்றம்… விமானப்படை அதிகாரிக்கு மனைவிக்கு நேர்ந்த கொடூரம்

பாலியல் வன்கொடுமை… மதமாற்றம்……

மகா​ராஷ்டிர மாநிலம் நாக்​பூரைச் சேர்ந்த 24…

காற்றில் பறந்த மோடியின் வாக்கு; குறையாத தங்கத்தின் மீதான மோகம்… அதிகரித்துள்ளது இறக்குமதி

காற்றில் பறந்த மோடியின்…

பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் காரணமாக…

ஹெலிகாப்டரில் வர உள்ளது நீட் தேர்வு வினாத்தாள்கள்

ஹெலிகாப்டரில் வர உள்ளது…

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக…

1 16 17 18 19 20 33