RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

எல் நினோ தாக்கமும்… தமிழகத்தில் உருவெடுக்கும் பாதிப்பும்…

சென்னை
எல் -நினோ தாக்கத்தால் தமிழகம் உட்பட 27 மாநிலங்களில் உள்ள 226 மாவட்டங்களில் வறட்சிப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய, கிழக்கு பசிபிப் பெருங்கடலின் மேற்பரப்பு நீர் வழக்கத்தைவிட அதிக வெப்பமடையும் ஒரு இயற்கையான காலநிலை நிகழ்வு எல்- நினோ என்று அழைக்கப்படுகிறது. பசுபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை பொதுவாக 26 முதல் 28 டிகிரி செல்சியசாக இருக்கும். வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக உள்ளன. அடையாளக் குறியீடு 28 டிகிரி செல்சியசில் இருந்து 0.5 அதிகரித்துள்ளன. இது மழைப் பொழிவு, வெப்ப நிலை முறைகளை மாற்றி, குறிப்பிட்ட பகுதிகளில் கடுமையான வறட்சியையும், இதர பகுதிகளில் பெருமழையையும் உருவாக்கும் என்று கூறப்படுகிறது.
தற்போதைய ஆய்வுகள் மற்றும் கணிப்புகள் இந்த ஆண்டு கடைசியில் எல் நினோ வலுப்பட வாய்ப்பு உள்ளது. இந்திய பெருங்கடல் பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பாகவே உள்ளன. இந்திய வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து நிலவரங்களை கண்காணித்து வருவதாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில் எல்-நினோ தாக்கத்தால் தமிழகத்தின் 12 மாவட்டங்களில் வறட்சிப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறுகிய காலப் பயிர்களைப் பரிந்துரைக்க மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது.
இதன்படி அரியலூர், தர்மபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், ராமநாதபுரம், திருச்சி, திருப்பத்தூர், வேலூர், விருதுநகர் மாவட்டங்கள் பாதிக்கப்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு மாவட்டங்களில் எள், பயறு வகைகள் போன்ற குறுகிய காலப் பயிர்களை சாகுபடி செய்ய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட குறைவாக இருக்கக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Recent News

எதிர்க்கட்சிகள் கேள்விகளுக்கு முதல்வர் விஜய் இன்று பதிலுரை… அதிகரித்த எதிர்பார்ப்பு

எதிர்க்கட்சிகள் கேள்விகளுக்கு முதல்வர்…

சென்னை:முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் முதல்…

மணலியில் மீத்தேன் கசிவால் பதற்றம்…

மணலியில் மீத்தேன் கசிவால்…

சென்னை மணலியில் பேருந்து நிலையம் கட்டுமானப்பணி…

சென்னையில் தொடங்கியது ரஜினியின் 173 வது படத்தின் படப்பிடிப்பு?

சென்னையில் தொடங்கியது ரஜினியின்…

சென்னை:நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும்…

‘தமிழக அரசின் வியூகம் புதிய காவிரி நடுவர் மன்றம்’ ஆதவ் அர்ஜுனா

‘தமிழக அரசின் வியூகம்…

சென்னை:மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தில் புதிய…

சட்டசபையில் அதிமுக வெளிநடப்பு… சபாநாயகர் மீது குற்றச்சாட்டு

சட்டசபையில் அதிமுக வெளிநடப்பு……

சென்னை:சட்டசபை இன்று 3-வது நாளாக தொடங்கி…

நெல்லை அழகியகூத்தர் கோவில் ஆனி திருவிழா ரத வீதியுலா- திருநடன தீபாராதனை

நெல்லை அழகியகூத்தர் கோவில்…

நெல்லை:நெல்லை அருகே ராஜவல்லிபுரம் செப்பறை அழகியகூத்தர்…

1 12 13 14 15 16 33