RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

கரூர் டிஎஸ்பி உட்பட தவெக மீது வழக்கு போட்ட 19 போலீஸ் அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்

  1. Home
  2. »
  3. Political News
  4. »
  5. கோட்டூர்புரத்தில் போராடியவர்களை கைது செய்தது தவெக அரசின் சர்வாதிகாரப் போக்கு டிடிவி தினகரன்…

கரூர் டிஎஸ்பி உட்பட தவெக மீது வழக்கு போட்ட 19 போலீஸ் அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் விஜய் பங்கேற்ற பரப்புரை கூட்டம் நடைபெற்றது. இதில், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி அப்பாவி பொதுமக்கள் 41 பேர் உயிரி ழந்தனர். இந்த வழக்கை கரூர் காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில், அப்போதைய திமுக தலை மையிலான அரசு சார்பில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.

அந்த குழு நடத்திய விசாரணையில், தவெக தலைவர் விஜய் தாமதமாக வந்ததும், எதிர் பார்க்கப்பட்டதை விட அதிக கூட்டம் சேர்ந்ததும் தான் கூட்டநெரிசல் விபத்துக்கு காரணம் என அறிக்கை சமர்பித்தது. இந்நிலையில், தவெக சார்பில், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டுமென வலியுறுத்திய நிலையில். உச்ச நீதிமன்றம் மேற் பார்வையில் வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், தவெக தலைவர் விஜய் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று, பிற கட்சிகளின் ஆதரவுடன் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி யேற்றார்.
தவெக ஆட்சி அமைந் தது முதல் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து, முதல மைச்சர் விஜய் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அந்த வகையில், சுரூர் மாவட்டத்தில் காவல் துணை கண்காணிப் பாளர்கள் முதல் காவலர் கள் வரை பலரை பணி யிட மாற்றம் செய்து காவல்துறை டிஜிபி மூலம் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, கரூரில் விஜய் பரப்புரை கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல் துணை கண்காணிப்பாளர் செல்வராஜ், காவல் ஆய் வாளர் மணிவண்ணன் உள்ளிட்டட போலீஸ் அதிகாரிகள் கூண்டோடு பணியிட மாற்றம் செய் யப்பட்டுள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் மட்டும் மூன்று காவல் துணை கண்காணிப்பாளர்கள், 10 காவல் ஆய்வாளர்கள், 5 உதவி ஆய்வாளர்கள் உள் ளிட்ட 19 காவல் துறையினர் பணியிடம் மாற்றம் செய் யப்பட்டுள்ளனர். குறிப்பாக, இதில் சில காவலர்கள் தெற்கு மண்டலத்திற்கும் வடக்கு மண்டலத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள் ளனர். கரூர் டவுன் துணை கண்காணிப்பாளராக இருந்த செல்வராஜ் தூத்துக் குடி மாவட்டத்திற்கும். குளித்தலை துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் கடலூர் மாவட்டத்திற்கும், கரூர் புறநகர் துணை கண்காணிப்பாளர் அப்துல் கபூர் தருமபுரி மாவட்டத்திற்கும் மாற் றப்பட்டுள்ளனர். அதேபோல், 10 காவல் ஆய்வாளர்கள் தெற்கு மற்றும் வடக்கு மண்ட லத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தனிப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர். தலைமை காவலர் என 5 பேர் தெற்கு மற்றும் வடக்கு மண்டலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், சிபிஐ கரூரில் 41 பேர் இறந்த சம்ப வத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் செல்வராஜ். காவல் ஆய் வாளர் மணிவண்ணன் உள் ளிட்டோரையும் விசாரணை செய்தது. இந்த நிலையில் அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது. முன்னதாக. கரூரில் விஜய் பங்கேற்ற தவெக பிரச்சாரக் கூட் டத்தில் 41 பேர் உயிரிழந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த அஸ்ரா கார்க்கை. விஜய் தலைமையிலான அரசு உளவுத்துறை ஐ.ஜி யாக நியமித்துள்ளது குறிப் பிடத்தக்கது. கரூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய ரவிக்குமார் மாற்றப்பட்டு முத்துக்குமரன் நியமிக் கப்பட்டார். கரூர் துயர சம்பவத்தின் போது ஆட்சியராக பணியு ரிந்த தங்கவேல் கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

Recent News

59 வருஷம் காங்கிரஸ் பட்ட அவமானங்களுக்கு விடை

59 வருஷம் காங்கிரஸ்…

சென்னை:59 வருஷமாசு பட்ட அவமானங்களும், பட்ட…

த.வெ.க. அமைச்சரவையில் அ.தி.மு.க.வுக்கு இடம் கிடைக்காதது ஏன்?

த.வெ.க. அமைச்சரவையில் அ.தி.மு.க.வுக்கு…

சென்னை:தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைக்க. அ.தி.மு.க.வில்…

புதிய அமைச்சர்களாக 23 பேர் பதவியேற்பு

புதிய அமைச்சர்களாக 23…

சென்னை:தமிழக அமைச்சர் களாக காங்கிரஸ் கட்சி…

இந்திய பொருளாதார வளர்ச்சியை 6.4% ஆக குறைத்தது ஐ.நா.

இந்திய பொருளாதார வளர்ச்சியை…

புதுடெல்லி:மேற்கு ஆசிய போர் பதற்றத்தால் ஏற்பட்டுள்ள…

1 10 11 12