RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

சிகார் புனித பதுவை அந்தோணியார் ஆலய திருத்தேர் பவனி

நாகை:
நாகை அருகே பழமை வாய்ந்த சிகார் புனித பதுவை அந் தோணியார் ஆலய திருத் தேர் பவனி நடைபெற்றது. வீடுகள் தோறும் கிருஷ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மன முருகி வழிபாடு செய்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் சிகாரில் தஞ்சா வூர் மறைமாவட்டத்திற்கு உட்பட்ட பழமை வாய் ந்த புனித பதுவை அந் தோணியார் ஆலயம் இவ் அமைந்துள்ளது. வாலயத்தின் ஆண்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மின் அலங்கார தேர் பவனி கோலாகலமாக நடை பெற்றது.

மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப் பரங்களில் பதுவை அந் தோணியார், ஆரோக்கிய மாதா, சம்மனசு ஆகியோர் எழுந்தருளினர். முன்னதாக பங்கு தந்தை ஜெரால்டு தலைமையில் திருவிழா பாடல், கூட்டு திருப்பலி நடைபெற்றது. பின்னர் தேரினை புனிதம் செய்து துவங்கி வைத்தார்.

ஆலய வளாகத்தில் இருந்து இசை வாத்தியங் கள் முழங்க தேர் பவனி தொடங்கியது. பவனியானது வான வேடிக்கைகளோடு முக் கிய வீதிகளில் வலம் வந்தது. ஒவ்வொரு வீடுக ளிலும் கிருஷ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி தேரினை வரவேற்றும் அந்தோணியார்க்கு மாலை அணிவித்து சாம்பிராணி காட்டி மனமுருகி பிரார்த் தனை செய்தனர். தேர்பவனியை முன்னிட்டு விடிய விடிய அன்னதானம் வழங்கப் பட்டது. நிகழ்ச்சி யினை சிகார் கிருஷ்துவ இறை மக்கள் மற்றும் கிராமவாசிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

Recent News

மூக்குப்பீறி பகுதியில் கஞ்சா பதுக்கி விற்ற வாலிபர் கைது

மூக்குப்பீறி பகுதியில் கஞ்சா…

நாசரேத்:மூக்குப்பீறி பகுதியில் கஞ்சாவை பதுக்கி விற்ற…

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் ஆதரவற்ற முதியோருக்கு நலத்திட்ட உதவி

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில்…

நாகர்கோவில்: –தமிழக வெற்றி கழக தலைவரான…

திருப்பத்தூர் ஆசிரிய நகரல் முதல்வர் பிறந்தநாள் விழா

திருப்பத்தூர் ஆசிரிய நகரல்…

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் ஆசிரிய நகரில் தமிழக…

பெண் குழந்தை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர்

பெண் குழந்தை பாதுகாப்பு…

அரியலூர்:அரியலூர் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், சமூக…

தூத்துக்குடி கல்லூரியில் யோகா தின விழா

தூத்துக்குடி கல்லூரியில் யோகா…

தூத்துக்குடி:தூத்துக்குடி கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு…

திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் 4வது வருடாபிஷேகம்

திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலில்…

நாகர்கோவில்:திருவட்டாறு ஆதிகே சவப் பெருமாள் கோவிலில்…

1 9 10 11 12 13 33