RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

தமிழக அமைச்சரவையில் வி.சி.க. சார்பில் வன்னியரசுக்கு அமைச்சர் பதவி

தமிழக அமைச்சர வையில் புதிதாக சேர்க் கப்பட்ட 23 பேருக்கு கவர்னர் அர்லேகர் நேற்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

புதிதாக பதவி ஏற்றுள்ள அமைச்சர்களுக்கு துறை கள் ஒதுக்கீடு செய்து கவர்னர் அர்லேகர் அதி காரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டார். இதன்படி முதல் அமைச்சர் விஜய் தலைமையிலான அமைச் சரவையில் இதுவரை இடம்பெற்றுள்ள 33 பேருக்கும் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

தமிழக அமைச்ச ரவையில் சிறுபான்மையி னர் நலத்துறை மற் றும் ஆதிதிராவிடர் நலத்துறை ஆகியவை இதுவரை யாருக்கும் ஒதுக்கப்படாமல் இருந்து வருகிறது.

இதனிடையே தஞ்சை பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ. ஷாஜகான் இன்று விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

ஐ.யு.எம்.எல். கட்சியின் பரிந்துரையை ஏற்று முதல் அமைச்சர் விஜய் கவர்னருக்கு அவரது பெயரை பரிந்துரை செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சூழலில் தமிழக அமைச்சரவையில் விசிக இடம் பெறுவது குறித்து நேற்று மாலைக்குள் அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறி வித்திருந்தார். மேலும் பெரும்பாலான நிர்வாகிகள் அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர் என்றும், உயர்மட்ட நிர்வாகிகளிடம் ஆலோ சித்து அறிவிப்பு வெளி யிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் வி.சி.க. எம்.எல்.ஏ. வன்னி அரசு இன்று காலை முதல் அமைச்சர் விஜய் தலைமை யிலான அமைச்சரவையில் பதவியேற்பது உறுதியாகி உள்ளது. திருமாவளவன் தலைமையில் உயர்மட்ட குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின் றன. தமிழக அமைச் சரவையில் இடம்பெற உள்ள ஐ.யு.எம்.எல். கட்சிக்கு சிறுபான்மை யினர் நலத்துறையும், வி.சி.க.வுக்கு ஆதி திராவிடர் நலத்துறையும் ஒதுக்கப்பட வாய்ப் புள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே இன்று காலை 10 மணிக்கு பதவி யேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ள தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recent News

இடதுசாரி கட்சியின் தலைவர்கள் முதல்வருடன் சந்தப்பு

இடதுசாரி கட்சியின் தலைவர்கள்…

தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு சி.ஜோசப் விஜய்…

அமித்ஷாவுடன் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர்  சந்திப்பு

அமித்ஷாவுடன் தமிழ்நாடு பொறுப்பு…

டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன்…

இது தர்மசங்கடமான தோல்வி அல்ல. ஆனால் எங்களுக்கு மிகவும் மனச்சோர்வை அளிக்கும் தோல்வி-ஸ்ரேயஸ் அய்யர் விளக்கம்

இது தர்மசங்கடமான தோல்வி…

அயர்லாந்து தொடருக்கு முன் 16 தொடர்களை…

NEET போன்ற சதிகளை தகர்த்தி வெற்றி பெற முயற்சிகளை இந்நாளில்  உறுதியேற்போம்-மு.க ஸ்டாலின்

NEET போன்ற சதிகளை…

மக்களின் உயிர்காக்கும் மகத்தான மனிதநேயத் தொண்டில்…

தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு முதல்வர் விஜய் வாழ்த்து

தேசிய மருத்துவர்கள் தினத்தை…

மனித உயிர்களைக் காக்கும் உன்னதப் பணியில்…

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டம் 11வது நாளை எட்டியது

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி…

புதுடெல்லி: டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி…

1 5 6 7 8 9 33