RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

திருச்செந்தூர் கோவில் தரிசன கட்டணத்தை உயர்த்தக்கூடாது; சீனிவாச சித்தர் சுவாமிகள்

  1. Home
  2. »
  3. District News
  4. »
  5. மூக்குப்பீறி பகுதியில் கஞ்சா பதுக்கி விற்ற வாலிபர் கைது

திருச்செந்தூர் கோவில் தரிசன கட்டணத்தை உயர்த்தக்கூடாது; சீனிவாச சித்தர் சுவாமிகள்

தூத்துக்குடி:
திருச்செந்தூர் கோயி லில் தரிசன கட்டணத்தை உயர்த்தக்கூடாது- பக்தர்கள் நலன் கருதி நிர்வாகம் திரும்ப பெறவேண்டும் தூத்துக்குடி சீனிவாச சித்தர் அறிக்கை
தூத்துக்குடி கோரம் பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் சித்தர் பீடத்தின் சுவாமிகள் சீனிவாச சித்தர் விடுத் துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்க்கடவுள் முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக் கோயில் அமைந்துள் ளது. கடற்கரையோரம் அமைந்துள்ள இக்கோயி லுக்கு உள்ளூர், வெளி யூர், வெளிமாநிலம் மட்டுமல் லாது வெளிநாடுகளில் இருந்தும் நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின் றனர். ஆன்மிக சிறப்பு பெற்ற இக்கோயிலில் பக் தர்கள் சுவாமியை தரிசனம் செய்வதில் பல் வேறு வகை யான முறைகேடுகள் நடப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது.
இதனை இந்துசமய அற நிலையத்துறை அமைச்சர் ரமேஷ் எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி திடீரென நேரில் வந்து ஆய்வு செய்து அங்கு நடைபெற்று வந்த முறை கேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது போற்றுத லுக்குரியதாகும்.
கோயில்களை பொறுத் தவரை ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இன்றி அனைத்து பக்தர்களும் சமம் என்ற ரீதியில் வழி படு வதற்கான ஏற்பாடுகளை தான் கோயில் நிர்வாகம் செய்திடவேண்டும். அதைவிடுத்து வசூல் நோக்கத்தில் தரிசன கட்டணத்தை உயர்த்தும் முடிவினை எடுப்பது என்பது ஒருபோதும் ஏற்புடையதல்ல. மன அமைதிக்காவும், தங்களின் இன்னல்கள் தீரவும் இறைவனை வழிபட வரும் பக்தர்களிடத்தில் இவ்வளவு கட்டணம் தந்து தான் வழிபடவேண்டும் என்று சொல்வதில் நியாயமில்லை.
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இந்த கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெறுவதற்கு வழிவகை செய்திடவேண்டும். அதோடு, தமிழகத்திலுள்ள அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் இறைவனை எளிதில் தரிசிக்க தகுந்த ஏற்பாடுகளை செய்திட வேண்டும். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை, தங்குமிடம், பார்க்கிங் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளையும் சிறப்பாக செய்து கொடுத்திட வேண் டும் என்று பக்தர்கள் சார்பில் அறிக்கை விடுத் துள்ளார்.

Recent News

வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகங்களில் சேலம் ஆட்சியர் ஆய்வு

வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய…

சேலம்:சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் அலுவலகம்,…

பண்ருட்டி அதிமுக வடக்கு ஒன்றிய அதிமுக ஆலோசனை கூட்டம்

பண்ருட்டி அதிமுக வடக்கு…

கடலூர்:கடலூர் மாவட்டம் பண் குட்டியில், பண்ருட்டி…

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திருப்பத்தூரில் இடதுசாரி கட்சிகள் ஆர்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை…

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரத ஸ்டேட்…

ஆக்கிரமித்துள்ள பொதுவழியை உடனடியாக திறக்க கோரி காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு

ஆக்கிரமித்துள்ள பொதுவழியை உடனடியாக…

திருப்பத்தூரை அடுத்த எலவம்பட்டி ஊராட்சி தம்மன்…

போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் சுற்றித்திரிந்தால் அபராதம்

போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள்…

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு,…

ராமஞ்சேரி பகுதிகளில் இன்று மின் விநியோக நிறுத்தம்

ராமஞ்சேரி பகுதிகளில் இன்று…

திருவள்ளூர்:ராமஞ்சேரி துணை மின் நிலையத்தில் 22.05.2026…

1 27 28 29 30 31 33