RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

த.வெ.க. அமைச்சரவையில் அ.தி.மு.க.வுக்கு இடம் கிடைக்காதது ஏன்?

சென்னை:
தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைக்க. அ.தி.மு.க.வில் எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம் அணி எம்.எல்.ஏ.க்கள் 25 பேர் ஆதரவு அளித்தனர். இதனால், த.வெ.க. அமைச்சரவையில் அ.தி.மு.க.வினருக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், த.வெ.க. அமைச்சரவையில் அ.தி.மு.க.வினர் இடம் பெற்றால், குதிரை பேரம் நடந்தது உறுதியாகிவிடும் என்றும். கோர்ட்டில் வழக்கு தொடருவோம் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று பதவியேற்றுக்கொண்ட 23 அமைச்சர்களில், காங் கிரஸ் சுட்சியினர் 2 பேர் இடம்பெற்றிருந்த நிலையில், அ.தி.மு.க. வினர் மற்றும் த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனி யன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்தவர்கள் இடம் பெறவில்லை தற்போது. அ.தி.மு.க. 2 ஆக உடைந்து நிற்கி றது. மொத்தமுள்ள 47 எம்.எல்.ஏ.க்களில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 22 பேரும். சி.வி.சண்முகம் எஸ்.பி. வேலுமணி தலைமையில் 25 பேரும் உள்ளனர். சட்டசபையில் பெரும் பான்மையை நிரூபிக்க த.வெ.சு. அரசுக்கு 25 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்ததால், அதில் 5 பேருக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படும் என்று எதிர் பார்க்கப்பட்டது.
அ தி மு அமைச்சரவையில் ஏன் இடம் பெறவில்லை என்றால் தகுதி நீக்கம் தொடர்பான அச்சம். அதாவது, சி.வி. சண்முகம் எஸ். பி. வேலுமணி உள்ளிட்டவர்கள் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள். எடப்பாடி பழனிச்சாமிதான் அவர் களின் ‘பி பார்ம்’ல். அதாவது இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தேவையான விண்ணப்பத்தில் கையெழுத்திட்டுள்ளார். மேலும், அ.தி.மு.க.வின் கொறடாவாக அக்ரி கிருஷ்ணமூர்த்தியை அவர் நியமித்துள்ளார். அவர் த.வெ.க. நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று அனைத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கும் தகவல் அனுப்பினார். அதனை சி.வி.சண்முகம் எஸ். பி. வேலுமணி அணியின் எம்.எல்.ஏ.க்கள் ஏற்கவி ல்லை. த.வெ.சு. வுக்கு ஆதரவாக சட்டசபையில் வாக்களித் தன ர். கொறடா உத்தரவை மீறினால், அந்த எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய முடியும். அந்த வகையில், 25 பேரையும் தகுதி நீக் கம் செய்ய எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுத்து வருகிறார் எடப்பாடி பழனிச்சா மிக்கு ஆதரவாக தீர்ப்பு வர அதிகம் வாய்ப்புள்ளது. இதனால் 25 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட நேரிடும்அசா தாரண சூழ்நிலையில், அதில் உள்ளவர்களுக்கு அமைச்சர் பதவியை முதல் அமைச்சர் விஜய் வழங்கினால், நீதி மன்றமும் அவரது செயலை கண்டிக்க வாய்ப்பு இருக்கிறது ‘அ.தி.மு.க.வினரை அமைச்சரவையில் சேர்த்தால் ஆதரவை மறுபரிசீலனை செய்வோம்’ என்று மார்க் சிஸ்ட் சும்யூனிஸ்டு கட்சியின் மாநில செய லாளர் சண்முகம் வெளிப்ப டையாகவே தெரிவித்தார். அதேபோல், இந்திய கம்யூனிஸ்டு சுட்சியும். அ.தி.முக.வினரை அமை ச்சரவையில் சேர்ப்பதற்கு மறைமுகமாக எதிர் ப்பு தெரிவித்தது. இத னால், அ.தி.மு.க. எம். எல். ஏ. க்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்து, பிற சுட்சிகளின் ஆதரவை இழக்க வேண்டாம் என்று முதல் அமைச்சர் விஜய் கருதினார். மேற்கண்ட 2 காரணங்களாலேயே. த.வெ.க. அமைச்சரவையில் அ.தி.மு.க.வினருக்கு இடம் வழங்கப்படவில்லை என்ற பரபரப்பான தகவல்
வெளியாகியுள்ளது.

Recent News

அதிமுக மாவட்ட செயலாளர் மரு. ச.பசுபதி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

அதிமுக மாவட்ட செயலாளர்…

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள அதிமுக…

அம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி!

அம்பலூர் அரசு மேல்நிலைப்…

ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாராட்டு வாணியம்பாடி:திருப்பத்தூர் மாவட்…

திமுகவில் இருந்து விலகினார் திருப்பூர் மத்திய மா.செ. செல்வராஜ்

திமுகவில் இருந்து விலகினார்…

திமுகவில் இருந்து திருப்பூர் மத்திய மாவட்டச்…

வெளியான தவெகவின் புதிய அமைச்சர்களின் கல்வித்தகுதி

வெளியான தவெகவின் புதிய…

தமிழகத்தின் புதிய அமைச்சர்களின் கல்வித்தகுதி விவரங்கள்…

குழந்தைகள் மூலம் விஜய் பிரச்சாரம் செய்ததாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு

குழந்தைகள் மூலம் விஜய்…

சட்டமன்றத் தேர்தலில் தவெக பிரச்சாரம் செய்ததாகத்…

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகள் விநியோகம் தொடக்கம்

தமிழகத்தில் புதிய ரேஷன்…

சென்னை:புதிய ரேஷன் கார்டுகளுக்காக விண்ணப்பித்து நீண்ட…

1 28 29 30 31 32 33