RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

பழனி பஞ்சாமிர்தம் விலை உயர்கிறது

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் பஞ்சாமிர்தம், தங்கத்தேர் புறப்பாடு கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ள நிலையில் இது குறித்து பக்தர்கள் தங்கள் ஆலோசனைகள், ஆட்சேபனைகளை ஜூலை 7-ந் தேதிக்குள் தெரிவிக்கலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மூலப்பொருட்கள் விலை ஏற்றம் காரணமாக பஞ்சாமிர்தம் விலை ஏற்ற கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ரூ.45 விற்கப்பட்டு வந்த பஞ்சாமிர்தம் ரூ.60 ஆகவும், ரூ.40க்கு விற்கப்பட்ட பஞ்சாமிர்தம் ரூ.50 ஆகவும், ரூ.20க்கு விற்கப்பட்ட பஞ்சாமிர்தம் ரூ.30 ஆக விலை உயர்த்த கோவில் நிர்வாக சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து மற்றும் ஆட்சேபனை ஏதேனும் இருந்தால் ஜூலை 11ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்க தேர் இழுத்தல் கட்டணம்

அதேபோல் பழனி மலைக்கோவிலில் தினசரி இரவு 7 மணிக்கு தங்க ரதம் புறப்பாடு நடைபெற்று வருகிறது. இந்த தங்கரத புறப்பாட்டில் கலந்து கொண்டு தங்க ரதம் இழுத்து வழிபடும் பக்தர்களுக்கு ரூ.2000 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தங்க ரதம் இழுத்து வழிபடும் பக்தர்களுக்கு பரிவட்டம், முருகன் படம், எவர்சில்வர் குடம் உள்ளிட்ட 18 பொருட்கள் வழங்கப்படுகிறது. விலைவாசி உயர்வு காரணமாக தங்க ரதம் கட்டணம் ரூ.2500 ஆக உயர்த்த கோவில் நிர்வாகம் சார்பில் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எதுவும் ஆலோசனை அல்லது கருத்துக்கள் இருந்தால் ஜூலை 7ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக நேரிலோ அல்லது தபால் மூலமாக தெரிவிக்க வேண்டும் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை ஒட்டப்பட்டுள்ளது.

Recent News

திருக்கழுக்குன்றத்தில் STEM ஆய்வக திறப்பு விழா

திருக்கழுக்குன்றத்தில் STEM ஆய்வக…

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அரசு மகளிர்…

லாக்கப் மரணத்திற்கு முதல்வர் விஜய் மௌனம் காக்கிறார்-திமுக முன்னாள் அமைச்சர் கீதாஜீவன்  குற்றச்சாட்டு

லாக்கப் மரணத்திற்கு முதல்வர்…

காமராஜரின் 124 வது பிறந்த நாள்…

பூர்வக்குடிகளை வெளியேற்றக்கூடாது-முதலமைச்சரிடம் மனு

ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் சரணாலய விவகாரம் தொடர்பாக…

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 இல் சுய கணக்கெடுப்பு பணிகள்

மக்கள் தொகை கணக்கெடுப்பு…

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கொடியசைத்து…

பெருந்தலைவர் காமராஜர் இருந்திருந்தால் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியிருப்பார்-தமிழிசை சௌந்தர்ராஜன்

பெருந்தலைவர் காமராஜர் இருந்திருந்தால்…

மரியாதைக்குரிய பாரதப்பிரதமர் நரேந்திர மோடி பண…

தூங்கிக் கொண்டிருக்கிறது தவெக அரசு அடிப்படை வசதிகள் குறித்து ஜெயக்குமார் கடும் விமர்சனம்

தூங்கிக் கொண்டிருக்கிறது தவெக…

“பல இடங்களில் அடிப்படைக் கட்டமைப்பு இல்லை..…

1 2 3 33