RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

மயிலாடுதுறையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் அனுசரிப்பு

மயிலாடுதுறை:
முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி நினைவுநாளை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அவரது திருவுருவப் படம் மற்றும் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மயிலாடுதுறை கிட்ட ப்பா அங்காடி முன்பாக நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சிக்கு, காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் பானுசேகர் தலைமை தாங்கினார். அங்கு அலங் கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜீவ் காந்தியின் திரு வுருவப் படத்திற்கு காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மலர் தூவியும், மாலை அணிவித்தும் நாட்டின் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய பணிகளை நினைவுகூர்ந்து தங்களின் மரியாதையைச் செலுத்தினர்.

இதேபோல், மயிலாடுதுறை ராஜன் தோட்டம் விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள ராஜீவ் காந்தியின் திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வுகளில் வட்டாரத் தலைவர் அன் பழகன், கடலங்குடி சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் அமீர் தீன், காங்கிரஸ் முக்கிய நிர்வாகி கனகசபை மற்றும் மாவட்ட, நகர, வட்டார நிர்வாகிகள், தொண்டர்கள் எனப் பலரும் திரளாகக் கலந்து கொண்டனர்.

Recent News

எதிர்க்கட்சிகள் கேள்விகளுக்கு முதல்வர் விஜய் இன்று பதிலுரை… அதிகரித்த எதிர்பார்ப்பு

எதிர்க்கட்சிகள் கேள்விகளுக்கு முதல்வர்…

சென்னை:முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் முதல்…

மணலியில் மீத்தேன் கசிவால் பதற்றம்…

மணலியில் மீத்தேன் கசிவால்…

சென்னை மணலியில் பேருந்து நிலையம் கட்டுமானப்பணி…

சென்னையில் தொடங்கியது ரஜினியின் 173 வது படத்தின் படப்பிடிப்பு?

சென்னையில் தொடங்கியது ரஜினியின்…

சென்னை:நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும்…

‘தமிழக அரசின் வியூகம் புதிய காவிரி நடுவர் மன்றம்’ ஆதவ் அர்ஜுனா

‘தமிழக அரசின் வியூகம்…

சென்னை:மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தில் புதிய…

சட்டசபையில் அதிமுக வெளிநடப்பு… சபாநாயகர் மீது குற்றச்சாட்டு

சட்டசபையில் அதிமுக வெளிநடப்பு……

சென்னை:சட்டசபை இன்று 3-வது நாளாக தொடங்கி…

நெல்லை அழகியகூத்தர் கோவில் ஆனி திருவிழா ரத வீதியுலா- திருநடன தீபாராதனை

நெல்லை அழகியகூத்தர் கோவில்…

நெல்லை:நெல்லை அருகே ராஜவல்லிபுரம் செப்பறை அழகியகூத்தர்…

1 12 13 14 15 16 33